ஊரடங்கில் நடத்தப்பட்ட ஆய்வு... வெளியான தகவல்கள்...


சீனாவின் கடந்த ஆண்டு இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ், இந்த ஆண்டு தொடக்கத்திலேயே அனைத்து நாடுகளுக்கும் பரவி மக்களை பலி கொண்டு வருகிறது.  
இதற்கு பொலிஸ் ஊரடங்கு மூலம் வீட்டிலேயே முடங்குதல் ஒன்றே சிறந்த வழியாக பல நாடுகள் இன்று நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.  
வாழ்நாளில் முதல் முறையாக எதிர்கொண்ட இந்த சர்வதேச முடக்கம் முதலில் மக்களுக்கு அசௌகரியங்களை கொடுத்தாலும், பின்னர் அதற்கேற்ப வாழ தங்களை அவர்கள் அமைத்துக்கொண்டனர். 
அந்தவகையில் இந்த ஊரடங்கால் மக்களின் வாழ்க்கை முறையில் ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்து கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் அமெரிக்காவின் லூசியானா பல்கலைக்கழகம் உள்ளிட்ட நிறுவனங்களை சேர்ந்த ஆய்வாளர்கள் மக்களிடம் ஆய்வு நடத்தினர். 
அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, இங்கிலாந்து மற்றும் 50-க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த 7,754 பேரிடம் ஆய்வு நடத்தி, 'ஒபீசிட்டி' என்ற மருத்துவ இதழில் அவர்கள் கட்டுரை எழுதியுள்ளனர்.
உலக அளவில் ஆயிரக்கணக்கான மக்களிடம் அவர்களது வாழ்க்கை முறை மாற்றம் குறித்து முதல் முதலாக நடத்தப்பட்ட இந்த ஆய்வில் பல்வேறு புதிய தகவல்கள் வெளிவந்துள்ளன. அவற்றில் சில வருமாறு..
  • ஆரோக்கியமான உணவு பழக்கம் அதிகரித்து இருக்கிறது. குறைந்த அளவில் அடிக்கடி உண்பதால் இந்த வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 
  • அதிக நொறுக்குத்தீனி, குறைவான உடற்பயிற்சி, தாமதமாக படுக்கைக்கு செல்தல், குறைவான தூக்கம், கவலைகள் இரட்டிப்பு போன்றவற்றுக்கு இந்த ஊரடங்கு காரணமாகி இருக்கிறது. 
  • உடல் பருமன் கொண்டவர்களை பொறுத்தவரை இந்த ஊரடங்கு நாட்களில் அவர்களுக்கு மேலும் எடை அதிகரிப்பால் அவதிப்படுகின்றனர்.
  • உடல் பருமன் கொண்டவர்கள் தங்கள் உணவு கட்டுப்பாட்டை மேலும் அதிகரித்து இருக்கிறார்கள். அதேநேரம் அவர்களது மனநலம் வெகுவாக பாதிக்கப்பட்டு எடை அதிகரிப்பு நிகழ்ந்துள்ளது.
  • ஒட்டுமொத்தமாக இந்த ஊரடங்கு நாட்கள் உடல் பருமன் போன்ற நாள்பட்ட நோய்களை மக்களுக்கு கொண்டு சேர்த்திருப்பதாக ஆய்வாளர்கள் 'ஒபீசிட்டி' என்ற மருத்துவ இதழில் எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளனர்.
ஊரடங்கில் நடத்தப்பட்ட ஆய்வு... வெளியான தகவல்கள்... ஊரடங்கில் நடத்தப்பட்ட ஆய்வு... வெளியான தகவல்கள்... Reviewed by irumbuthirai on October 26, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.