திவுலபிடிய கொரோனா எதிரொலி: 24-10-2020 நடந்தவை...


திவ்லபிடிய கொரோனா எதிரொலியாக 20ம் நாள் அதாவது சனிக்கிழமை (24) நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள், அறிவிப்புக்கள் என்பவற்றை இங்கு தருகிறோம். 
  • 49 காவல்துறை பிரிவுகளில் அமுலாக்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் காரணமாக, குறித்த சில புகையிரத நிலையங்களில் ரயில்கள் நிறுத்தப்பட மாட்டாது என ரயில்வே கட்டுப்பாட்டு மையம் தெரிவிப்பு. 
  • கொரோனா தொற்றுக்கு மத்தியில் போக்குவரத்து துறை எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் தொடர்பில் பேருந்து சங்கத்தினருக்கும், போக்குவரத்து மற்றும் நிதி அமைச்சின் அதிகாரிகளுக்கு இடையில், எதிர்வரும் சில நாட்களில் பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளதாக அறிவிப்பு. 

  • இலங்கையின் 15ஆவது கொரோனா மரணம் இன்று (24) பதிவாகியது. 56 வயதுடைய ஆண். குளியாப்பிட்டிய உனாலீய பிரதேசத்தைச் சேர்ந்தவர். குளியாப்பிட்டிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமாகியுள்ளார். இவர் ஒரு இருதய நோயாளி எனவும் கூறப்பட்டது. 
  • சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தியுள்ள மற்றும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள பிரதேசங்களிலிருந்து கண்டி தலதா மாளிகைக்கு வருபவர்களுக்கு நுழைவது தடை செய்யப்பட்டுள்ளதாக அதன் பொறுப்பதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிப்பு. 
  • மீன்பிடித் துறைமுகங்களுக்கான சுகாதார வழிமுறைகளை உடனடியாக வெளியிடுமாறு அமைச்சின் செயலாளருக்கு சுகாதார அமைச்சர் பணிப்பு. 
  • ஊரடங்கு உத்தரவை மீறியதன் காரணமாக இதுவரை 759 நபர்கள் 49 காவற்துறை பிரிவுகளிலிருந்து கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறையின் ஊடகப் பிரிவு தெரிவிப்பு. 
  • கொதட்டுவ மற்றும் முல்லேரியா காவல்துறை பிரிவுகளுக்கு இன்று மாலை 7 மணிக்கு அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவிப்பு. 
  • கொரோனா வைரஸ் பரவல் காரணமாக புறக்கோட்டை மெனிங் சந்தை, எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி வரையில் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டது. 
  • மாளிகாவத்தை, வாழைத்தோட்டம், டேம் வீதி, ஆட்டுப்பட்டித் தெரு மற்றும் கரையோர காவற்துறை பிரிவுகளுக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் மீள் அறிவித்தல் வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவிப்பு. 
  • வௌ்ளவத்த மற்றும் பம்பலபிட்டிய பகுதிகளில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் குறுஞ்செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவிப்பு. 
  • வாழைச்சேனை காவற்துறை அதிகாரத்திற்கு உட்பட்ட பகுதிகள் அனைத்தும் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவிப்பு. 
  • இன்றை தினத்தில் (24) மாத்திரம் மொத்தமாக 368 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்னர்.
  • Irumbuthirainews
திவுலபிடிய கொரோனா எதிரொலி: 24-10-2020 நடந்தவை... திவுலபிடிய கொரோனா எதிரொலி: 24-10-2020 நடந்தவை... Reviewed by irumbuthirai on October 26, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.