திவுலபிடிய கொரோனா எதிரொலி: 28-10-2020 நடந்தவை...


திவ்லபிடிய கொரோனா எதிரொலியாக 24ம் நாள் அதாவது புதன்கிழமை (28) நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள், அறிவிப்புக்கள் என்பவற்றை இங்கு தருகிறோம். 
  • தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படும் நபர்கள் உள்ள வீடுகளில், வழமையான அறிவித்தல்களுக்கு மேலதிகமாக, மற்றுமொரு அறிவித்தலையும் காட்சிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதாவது இந்த அறிவித்தலுக்கு அமைய, குறித்த வீடுகளில் தங்கியிருப்பவர்கள், அங்கிருந்து வெளியேற முடியாது. வெளி நபர்கள் அந்த வீடுகளுக்கு செல்ல முடியாது. மற்றும் குறித்த பிரதேசத்தின் பிரதேச செயலாளர், காவல்துறை பொறுப்பதிகாரி, கிராம சேவகர் ஆகியோரின் தொலைபேசி இலக்கங்களும், குறித்த பகுதியில் இராணுவ அதிகாரி ஒருவர் இருப்பாராயாயின் அவரின் தொடர்பு இலக்கமும் குறிப்பிடப்பட்டிருக்கும். இவ்வாறான நிலையில், அவசிய தேவை ஏற்படும் நபர்கள் இந்த இலக்கங்களைத் தொடர்புகொண்டு, தேவையான உதவிகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவிப்பு. 
  • கொரோனா பரவல் நிலைமையை கருத்தில் கொண்டு உயிர்த்த ஞாயிறு தொடர்பில் விசாரணைகைளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் நடவடிக்கைகளை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானம். 
  • முகக்கவசங்களை 4 மணி நேரத்துக்கு ஒருமுறை மாற்ற வேண்டும் என்றும் கொவிட் 19 பரவல் அச்சுறுத்தல் இல்லாத இடங்களில் உள்ளவர்கள் மட்டும் துணியால் செய்யப்பட்ட முகக்கவசங்களை அணியலாம் என்றும், ஏனையோர் விசேடமாக தயாரிக்கப்பட்ட முகக்கவசங்களையே அணிய வேண்டும் என்றும் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதான தாதி அதிகாரி புஷ்பா ரம்யானி சொய்சா தெரிவிப்பு. உலக சுகாதார ஸ்தாபனத்தின் அறிவுறுத்தலுக்கு அமைய அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். 

  • கொட்டகல - பிரதேச சபைக்கு உட்பட்ட வட்டகொடை தோட்டம் - யொக்ஸ்போர்ட் பிரிவில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இவர் பேலியகொட கொத்தணியோடு தொடர்புள்ளவர். 
  • மேல் மாகாணம் முழுவதும் நாளை (29) நள்ளிரவு முதல் 2ம் திகதி அதிகாலை காலை 5 மணி வரையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்படவுள்ளதாக இராணுவ தளபதி தெரிவிப்பு. 
  • வீடுகளில் தனிமைப்படுத்தப்படும் குடும்பங்களுக்கு 02 வாரங்களுக்கு தேவையான உணவு பொருட்கள் அடங்கிய உலர் உணவு பொதிகளை வழங்குவது தொடர்பில் தீர்மானிக்கப்பட்டதுடன், அரசாங்க அதிபர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள், கிராம அலுவலர்கள் மற்றும் பாதுகாப்பு பிரிவின் ஒத்துழைப்பை பெற்று அந்நடவடிக்கையை முறையாக மேற்கொள்ளுமாறு பசில் ராஜபக்ஷ அலரி மாளிகையில் நடைபெற்ற கூட்டத்தின்போது ஆலோசனை வழங்கினார். 
  • களுபோவில போதனா வைத்தியசாலையின் காது, தொண்டை மற்றும் மூக்கு தொடர்பான விசேட வைத்தியர் ஒருவரின் தந்தைக்கும் கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது, 
  • தற்போதைய நிலையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள வலல்லாவிட, மாகலன்தாவ பிரதேசத்தை சேர்ந்த 3 மாத சிசு ஒன்றுக்கும் அதன் தாய்க்கும் கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வலல்லாவிட பொது சுகாதார பரிசோதகர் திலகரத்ன அதுகோரால தெரிவித்தார். 
  • நாளை (29) நள்ளிரவு முதல் மேல் மாகாணம் முழுவதும் அமுலாகும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு தற்காலிகமானது என்பதால் மேல் மாகாணத்தில் இருந்து பொதுமக்கள் வௌியேற வேண்டாம் என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா கோரிக்கை விடுத்துள்ளார். 
  • நாட்டில் தற்பொழுது நிலவும் சூழ்நிலைக்கு மத்தியில் சுகாதார பாதுகாப்பின் அடிப்படையில் மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல் படுத்தப்பட்ட போதிலும் உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு பரீட்சைக்கு தோற்றுவதற்கு தடையாக அமையாது என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் பரீட்சை நடவடிக்கைகள் முடிவடையும் வரையில் சுகாதார பாதுகாப்பை உறுதி செய்து மாணவர்களுக்கு ஆக கூடிய ஒத்துழைப்பு வழங்கப்படும் என்றும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்தார். 
  • இன்றைய தினம் 335 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானது. இதனையடுத்து நாட்டில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 9,205 ஆக அதிகரிப்பு.
  • Irumbuthirainews
திவுலபிடிய கொரோனா எதிரொலி: 28-10-2020 நடந்தவை... திவுலபிடிய கொரோனா எதிரொலி: 28-10-2020 நடந்தவை... Reviewed by irumbuthirai on October 30, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.