PCR பரிசோதிப்பதாக கூறி வீட்டுக்கு வந்த போலி PHI குழு...


PCR பரிசோதனை என்ற போர்வையில் வீடொன்றுக்கு போலி PHI குழுவினர் வருகை தந்த சம்பவம் மஹவ பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. 
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.
நேற்று (29) மாலை 3.30 மணியளவில் மஹவ, கெத்தபஹூவ என்ற இடத்திலுள்ள வீடொன்றுக்கு 
பொது சுகாதார பரிசோதகர்கள் எனக்கூறி பெண்ணொருவர் உட்பட மூவர் வந்துள்ளனர். பின்னர் பிசிஆர் பரிசோதனை செய்ய வேண்டும் எனக் கூறி வீட்டில் உள்ளவர்களுக்கு மருந்தொன்றை குடிக்க கொடுத்துள்ளனர். 
அதை குடித்ததும் நித்திரையான அவர்கள் மீண்டும் அடுத்த நாள் காலையில் எழும்பி பார்த்த பொழுது வீட்டிலிருந்த மூன்றரை பவுண் தங்க ஆபரணங்கள் கொள்ளையிடப்பட்டுள்ளது. 
இது தொடர்பான விசாரணைகள் இடம்பெறுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். 
ஏதேனும் சந்தர்ப்பத்தில் சுகாதார பரிசோதகர்கள் வந்தால் எந்த சந்தர்ப்பத்திலும் பி.சி.ஆர் பரிசோதனைக்காக மாத்திரைகளையோ அல்லது வேறு எந்த மருந்துகளையோ தரமாட்டார்கள். இதனை வைத்தியர்கள் மற்றும் சுகாதார பரிசோதகர்கள் உறுதி செய்துள்ளனர் என்றும் அவர் கூறினார். 
நாடு உள்ள நிலைமையில் அனைவரும் பொறுப்புடன் நடந்து கொள்ளவேண்டும் என்றும் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

PCR பரிசோதிப்பதாக கூறி வீட்டுக்கு வந்த போலி PHI குழு... PCR பரிசோதிப்பதாக கூறி வீட்டுக்கு வந்த போலி PHI குழு... Reviewed by irumbuthirai on October 30, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.