கொரியாவிற்கு மீண்டும் தொழில் புரிய செல்வோர்...


மீண்டும் தாம் முன்னர் கடமையாற்றிய இடங்களிலேயே கடமைக்காக செல்வதற்கான வேலைத்திட்டத்தின் கீழ் 1008 ஆவது குழு கொரியாவிற்கு செல்லவுள்ளது. கொரிய விமான சேவைக்கு உட்பட்ட விமானத்தின் மூலம் இவர்கள் செல்லவுள்ளனர். 
இவர்கள் அங்கு செல்வது தொடர்பான நிகழ்வில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மேம்பாடு மற்றும் சந்தை பல்வகைப்படுத்தல் இராஜாங்க அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் கமல் ரத்வத்த உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கொரோனா தொற்று காலப்பகுதிக்குள் இவ்வாறு செல்லும் 2 ஆவது குழுவினர் இவர்களாவர். இக் குழுவில் 36 பேர் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் 4 வருடங்கள் மற்றும் 10 மாத காலத்திற்காக தமது சேவைக்காக ஒப்பந்தத்தை செய்துகொண்டுள்ளனர். இவர்கள் முன்னர் கடமையாற்றிய இடங்களிலேயே ஒப்பந்த காலத்தை நிறைவு செய்யும் வரை கடமையில் ஈடுபடுத்தப்படுவர்.
 கொரோனா தொற்று காலப்பகுதிக்குள் அதாவது 2020.09.23 ஆம் திகதி 21 இலங்கையர்கள் தென்கொரியாவிற்கு தொழில் வாய்ப்புக்காக சென்றிருந்தனர்.தமது உரிய சேவைக் காலப்பகுதிக்குள் (4 வருடம் 10 மாதங்கள்) எந்த சட்ட விரோத செயல்களில் ஈடுபடாதவர்கள் மற்றும் கொரியாவில் சட்ட ரீதியில் வெளியேறிய ஊழியர்களுக்கு மீண்டும் கொரியாவில் தொழில் வாய்ப்புக்காக செல்வதற்கு சந்தர்ப்பம் கிடைக்கின்றது. 
 எதேனும் குற்றச்செயல்களிலும் தண்டணை பெற்றுள்ளோர் அல்லது விசா அனுமதி காலத்திற்கு மேலாக கடமையில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு இதற்கான சந்தர்ப்பம் கிடைக்காது.
(அ.த.தி)
கொரியாவிற்கு மீண்டும் தொழில் புரிய செல்வோர்... கொரியாவிற்கு மீண்டும் தொழில் புரிய செல்வோர்... Reviewed by irumbuthirai on October 08, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.