தொழில் வழிகாட்டல் வாரத்தை (ஒக்டோபர் 04-10) முன்னிட்டு மனிதவலு மற்றும் வேலைவாய்ப்பு திணைக்களத்தினால் பாடசாலை மாணவர்களுக்கும் பொதுமக்களுக்குமான போட்டிகள் நடத்தப்படுகின்றன.
விண்ணப்பிக்க கூடிய காலப்பகுதி: 23/08/2021 - 12/09/2021 (இரவு 8 மணி) வரை.
விண்ணப்பங்கள் Online முறையில் மாத்திரமே சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
ஒன்றுக்கு மேற்பட்ட போட்டிகளில் கலந்து கொள்பவர்கள் தனித்தனி விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.
பரிசுகள்:
1. பங்குபற்றிய அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும்.
2. மாவட்ட மட்ட வெற்றியாளர்களுக்கான பரிசுகள்:
1 - 5000/-
2 - 3000/-
3 - 2000/-
3. தேசிய மட்ட வெற்றியாளர்களுக்கான பரிசுகள்:
1 - 25,000/-
2 - 15,000/-
3 - 10,000/-
மனிதவலு மற்றும் வேலைவாய்ப்பு திணைக்கள உத்தியோகத்தர்களின் பிள்ளைகள் இந்த போட்டியில் கலந்து கொள்ள முடியாது.
மாணவர்களுக்கான போட்டிகள்:
தகுதியானவர்கள்: தரம் 9, 10, 11 இல் கற்பவர்கள் மட்டும்.
போட்டிகள்: சித்திரம், பேச்சு, கட்டுரை, கவிதை மற்றும் வினா-விடை போட்டிகள்.
சித்திரம், பேச்சு, கட்டுரை, கவிதைகளுக்கு பின்வரும் ஏதோ ஒரு தலைப்பை தெரிவு செய்யலாம்.
1. இலங்கையின் எதிர்கால தொழில் உலகை வெல்ல தொழில் வழிகாட்டுதலின் முக்கியத்துவம்.
2. 21ம் நூற்றாண்டு மற்றும் தொழில் வழிகாட்டல்.
3. கனவு காண்போம. திட்டமிடுவோம். வேலை உலகத்தை வடிவமைப்போம்.
4. நாட்டின் வளர்ச்சிக்கு இளைஞர் சமூகத்தின் பங்களிப்பு.
5. நாட்டிற்கு தொழில் வழிகாட்டல் சேவையின் முக்கியத்துவம்.
வினா விடை போட்டி:
தொழில் வழிகாட்டல் என்ற தலைப்பில் கேள்விகள் கேட்கப்படும்.
Online மூலம் 25 கேள்விகள் அடங்கிய பல்தேர்வு வினாத்தாள் வழங்கப்படும்.
காலம் 30 நிமிடங்கள்.
பெரியவர்களுக்கான போட்டி (கட்டுரைப் போட்டி மாத்திரம்)
இதில் 18 வயதுக்கு மேற்பட்ட சகலரும் கலந்து கொள்ளலாம்.
கீழ்வரும் தலைப்புகளில் ஒன்றை தெரிவுசெய்து 750 -1000 வரையான சொற்களைக் கொண்டதாக கட்டுரை அமைய வேண்டும்.
1. சிறந்ததொரு தொழிலாக முயற்சியாண்மை.
2. தொழில் முயற்சியாண்மை மூலம் பொருளாதாரத்தை வெல்லுங்கள்.
3. முயற்சியாண்மை கலாசாரத்தை உருவாக்குதல்.
ஒவ்வொரு போட்டி தொடர்பான மேலதிக விளக்கங்களை பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.
Online விண்ணப்பத்தைப் பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.
தொழில் வழிகாட்டல் வாரத்தை முன்னிட்டு மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் நடத்தப்படும் போட்டிகள்
Reviewed by irumbuthirai
on
August 23, 2021
Rating:
Reviewed by irumbuthirai
on
August 23, 2021
Rating:

No comments: