திவுலபிடிய கொரோனா எதிரொலி: 25-11-2020 நடந்தவை...


திவ்லபிடிய கொரோனா எதிரொலியாக 52ம் நாள் அதாவது புதன்கிழமை (25) நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள், அறிவிப்புக்கள் என்பவற்றை இங்கு தருகிறோம். 
  • பண்டாரகம பொலிஸ் பிரிவின் கிழக்கு அடலுகம , எபிடமுல்ல மற்றும் கொலமெதிரிய ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் மற்றும் கண்டி மாவட்டத்தின் அலவதுகொடை பிரிவின் ( அக்குரணை பிரதேச செயலக பிரிவு) புளுகஹாதென்ன மற்றும் தெலம்புகஹாவத்த ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக அறிவிப்பு. 
  • தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசமான பண்டாரகம பொலிஸ் பிரிவின் கிரிமன்துடாவ கிராம உத்தியோகத்தர் பிரிவு தனிமைப்படுத்தல் நிலையில் இருந்து விடுவிக்கப்படுவதாக அறிவிப்பு. 
  • கண்டி நகர பகுதியில் உள்ள 45 பாடசாலைகளை எதிர்வரும் டிசம்பர் மாதம் 4 ஆம் திகதி வரை மூட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண ஆளுநர் லலித் யு கமகே உறுதிப்படுத்தியுள்ளார். 
  • கொவிட் 19 அவதான நிலை காணப்படாத பிரதேசங்களில் முதன்மை பாடசாலைகள் மற்றும் பாடசாலைகளின் ஆரம்ப பிரிவுகளை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த தெரிவித்தார். 
  • தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள குற்றுப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவிற்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 
  • 3 கிலோமீட்டர் நடந்து வந்து கொரோனா தொற்றாளர் ஒருவர் அம்பியுலன்ஸில் ஏறியுள்ளார். பாதை குன்றும் குழியுமாக இருந்ததினால் இந்நிலைமை ஏற்பட்டுள்ளது. நுவரெலிய டயகம பிரதேசத்தில் நேற்று இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. 
  • கொவிட்-19 காரணமாக மரணிப்போருக்கான சவப்பெட்டிகள் அவர்களது குடும்பத்தினரால் வழங்கப்பட வேண்டுமென சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். 
  • தற்போதுள்ள சூழ்நிலையை கருத்தில் கொண்டு, நம் மக்களின் பாதுகாப்பிற்கும் தேசத்தின் பாதுகாப்பிற்கும் நாளை வியாழக்கிழமை (26.11.2020) நோன்பு நோற்று பிரார்த்திப்போம். அத்துடன் துஆ, இஸ்திஃபார், ஸதகா போன்ற நல்லமல்களில் தொடர்ந்தும் ஈடுபடுவோம் என அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா அறிவித்துள்ளது. 
  • மேலும் 02 கொரோனா மரணங்கள் அறிவிப்பு. 1. கொழும்பு 12 ஐ சேர்ந்த 45 வயது பெண். 2. பன்னிபிட்டியவை சேர்ந்த 80 வயது ஆண். மொத்த மரணம் 96 ஆக உயர்வு. 
  • இன்றைய தினம் மாத்திரம் 502 பேருக்கு கொரோனா உறுதியானது.
  • Irumbuthirainews
திவுலபிடிய கொரோனா எதிரொலி: 25-11-2020 நடந்தவை... திவுலபிடிய கொரோனா எதிரொலி: 25-11-2020 நடந்தவை... Reviewed by irumbuthirai on November 29, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.