Negative வந்தால் 24 மணித்தியாலயத்திற்குள் உடல்கள் ஒப்படைக்கப்படும்..


கொரோனா சந்தேகத்தில் மரணிப்பவர்களுக்காக PCR மேற்கொள்ளப்படும் போது நெகட்டிவ் வந்தால், 24 மணித்தியாலத்திற்குள் அவர்களின் உடல்களை உறவினர்களிடம் கையளிக்க, பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் நேற்று நடைபெற்ற சுகாதார அமைச்சின் ஆலோசனைக் குழு கூட்டத்தில் சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராட்சி உறுதியளித்துள்ளார். 
இதில் கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான், சில முஸ்லிம்களின் உடல்கள், பழுதடைந்த பின்னரே உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுவதாகவும் சில உடல்களில் கொரோனா தொற்று இல்லாத போதும், அவை PCR பரிசோதனைக்காக காத்திருப்பதால் 3 அல்லது 4 நாட்களில் பின், Negatve கண்டறியப்பட்ட பின்னர் ஒப்படைக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். இதன்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 
அத்துடன் முஸ்லிம்கள் மிகவிரைவில் தமது உடல்களை அடக்கி விடுவார்கள் என்பதை ஏற்றுக்கொண்ட அமைச்சர், இதுதொடர்பில் தனிப்பிரிவு ஒன்றை நிறுவுமாறும் சுகாதார அமைச்சின் செயலாளருக்கு உத்தரவிட்டார். தனிப்பிரிவு ஒன்றின் மூலம் மரணிப்பவர்கள் மீது மேற்கொள்ளப்படும் பீசீஆர் முடிவுகளை விரைவில் பெற்றுக்கொண்டு, அதன்மூலம் ஜனாஸாக்களை விரைவில் விடுவிக்க முடியுமென்ற நம்பிக்கையையும், அவர் இதன்போது வெளியிட்டுள்ளார்.
-ஜப்னாமுஸ்லிம்.
Negative வந்தால் 24 மணித்தியாலயத்திற்குள் உடல்கள் ஒப்படைக்கப்படும்.. Negative வந்தால் 24 மணித்தியாலயத்திற்குள் உடல்கள் ஒப்படைக்கப்படும்.. Reviewed by irumbuthirai on November 29, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.