திவுலபிடிய கொரோனா எதிரொலி: 06-12-2020 நடந்தவை...


திவ்லபிடிய கொரோனா எதிரொலியாக 63ம் நாள் அதாவது ஞாயிற்றுக்கிழமை (06) நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள், அறிவிப்புக்கள் என்பவற்றை இங்கு தருகிறோம். 
  • நாளை (7) தொடக்கம் ஒவ்வொரு பேருந்து பயணங்களின் போதும் இரண்டு பேருந்துகளை ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார். விசேடமாக பாடசாலை நேரங்களில் மற்றும் அலுவலக நேரங்களில் குறித்த முறையில் இரண்டு பேருந்துகளை ஈடுபடுத்த போக்குவரத்து அதிகார சபைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். சில வீதிகளில் அதிகமான பயணிகள் ஏற்றிச் செல்லப்படுவதாக தொடர்ந்தும் முறைப்பாடுகள் கிடைக்கின்றன. நாம் எழுத்து மூலம் அறிவித்துள்ளோம். அவ்வாறு செயற்படும் பேருந்துகள் பொறுப்பேற்கப்பட்டு தனிமைப்படுத்தல் நடைமுறைக்கு அமைய நடவடிக்கை எடுக்கப்படும் என்று. அதேபோல் ஒவ்வொரு பேருந்து பயணங்களின் போதும் இரண்டு பேருந்துகளை ஈடுபடுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார். 
  • காலி கல்வி வலயத்தின் அனைத்து பாடசாலைகளும் நாளை (07) தொடக்கம் 03 தினங்களுக்கு மூடப்படவுள்ளதாக மாகாண கல்வியமைச்சு அறிவித்துள்ளது. 
  • மஹர சிறைச்சாலை சம்பவத்தில் உயிரிழந்த 6 பேரின் சடலங்கள் இதுவரையில் இனம் காணப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிப்பு. சிறைச்சாலை கொத்தணியில் 
  • கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2,051 ஆக அதிகரித்துள்ளது. குறித்த நபர்களுக்குள் 91 அதிகாரிகள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. 
  • களனி, சபுகஸ்கந்த பிரதேசத்தில் விகாரையொன்றுக்கு தானம் வழங்கிய நபரொருவருக்கு Covid-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக குறித்த விகாரையின் தேரர்கள் உள்ளிட்ட சிலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மாகொல பொது சுகாதார பரிசோதகர் எஸ்.பெரேரா தெரிவித்தார். 
  • நாளை (7) அதிகாலை 05 மணி முதல் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் மேலும் சில இடங்கள் தனிமைப்படுத்தப்படவுள்ளன. அந்த வகையில் கொழும்பு மாவட்டத்தில் கொம்பனித்தெரு காவல்துறை அதிகார பிரசேதத்தில் ஹூனுப்பிட்டிய கிராம சேவகர் பகுதியும், கறுவாத்தோட்ட காவற்துறை அதிகார பிரிவில் 60ம் தோட்டமும் வெள்ளவத்தை காவற்துறை அதிகார பிரிவில் கோகிலா வீதியும் தனிமைப்படுத்தப்படவுள்ளன. கம்பஹா மாவட்டத்தில் வத்தளை காவற்துறை அதிகார பிரிவின் கெரவலப்பிட்டி, ஹேக்கித்தை, குருந்துஹேன, எவரிவத்தை மற்றும் வெலிக்கடை முல்ல ஆகிய பகுதிகள் நாளை அதிகாலை ஐந்து மணி முதல் தனிமைப்படுத்தப்படவுள்ளன. அத்துடன் பேலியாகொடை காவற்துறை அதிகார பிரதேசத்தில் பேலியாகொடை வத்த, பேலியாகொரட - கங்கபட, மீகஹவத்த மற்றும் பட்டிய வடக்கு ஆகிய கிராம சேவகர் பிரிவுகளும் தனிமைப்படுத்தப்படவுள்ளன. இதுதவிர, கிரிபத்கொடை காவற்துறை அதிகார பகுதியின் வெலேகொட வடக்கு கிராம சேவகர் பிரிவும் நாளை அதிகாலை 5 மணி முதல் தனிமைப்படுத்தப்படவுள்ளது. 
  • கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த சில இடங்கள் நாளை அதிகாலை 05 மணியுடன் விடுவிக்கப்படவுள்ளன. கொழும்பு மாவட்டத்தில் புளுமெண்டல் காவற்துறை அதிகார பிரதேசங்களும், வெல்லம்பிட்டி காவற்துறை அதிகார பிரதேசத்தின் விஜயபுர கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படவுள்ளன. அதேநேரம், முகத்துவாரம், கொட்டாஞ்சேனை, கிராண்ட்பாஸ், ஆட்டுப்பட்டித்தெரு, டேம் வீதி, வாழைத்தோட்டம், மாளிகாவத்தை, தெமட்டகொடை, மருதானை, ஆகிய காவற்துறை அதிகார பிரதேசங்கள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன் கொம்பனித்தெரு காவற்துறை அதிகார பிரதேசத்தில் வேகந்த கிராம சேவகர் பிரிவும், பொளை காவற்துறை அதிகார பிரதேசத்தில் வனாத்தமுல்ல கிராம சேவகர் பிரிவும், வெல்லம்பிட்டி காவற்துறை காவற்துறை அதிகார பிரதேசத்தில் சால முல்ல கிராம சேவகர் பிரிவு மற்றும் லக்சந்த செவன வீடமைப்பு தொகுதி என்பன தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. 
  • நோர்வூட் தமிழ் மகா வித்தியாலயத்தில் சேவையாற்றும், ஆசிரியை ஒருவருக்கும் அவரது பிள்ளைகள் இருவருக்கும் கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து நோர்வூட் தமிழ் மகா வித்தியாலயத்தினை நாளை (7) முதல் காலவரையறையின்றி மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. 
  • மேலும் 3 பேர் கொரோனாவுக்கு பலி. கோட்டை பகுதியை சேர்ந்த 98 வயதுடைய ஆண் ஒருவர், கஹதுடுவ பகுதியை சேர்ந்த 80 வயதுடைய ஒருவர் மற்றும் மக்கொன பகுதியை சேர்ந்த 71 வயதுடைய ஆண் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 140 ஆக அதிகரித்துள்ளது. 
  • இன்றைய தினம் மாத்திரம் 649 பேருக்கு கொரோனா உறுதியானது.
  • Irumbuthirainews
uo
திவுலபிடிய கொரோனா எதிரொலி: 06-12-2020 நடந்தவை... திவுலபிடிய கொரோனா எதிரொலி: 06-12-2020 நடந்தவை... Reviewed by irumbuthirai on December 08, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.