வெளிநாடுகளிலிருந்து வருவோர்களுக்கான தனிமைப்படுத்தல் முறையில் மாற்றம்


இலங்கைக்கு வருகை தரும் அனைவரும் விமான நிலையத்திலேயே PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர், 14 நாட்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களிலும், 14 நாட்கள் தமது வீடுகளிலும் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுகின்றமையே இதுவரையுள்ள வழமையாகும். 
ஆனால் புதிய முறைகளுக்கு அமைவாக வெளிநாடுகளிலிருந்து நாட்டுக்கு வருவோர் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் மேற்கொள்ளப்படும் PCR பரிசோதனையில் அவர் கொரோனா தொற்றுக்குள்ளாகவில்லை என்பது உறுதி செய்யப்பட்டால் மீண்டும் வீட்டுக்கு சென்று 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுவதை நீக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக இராணுவ தளபதி தெரிவித்துள்ளார். 
அந்தவகையில் 28 நாட்கள் 14 நாட்களாக குறைக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
வெளிநாடுகளிலிருந்து வருவோர்களுக்கான தனிமைப்படுத்தல் முறையில் மாற்றம் வெளிநாடுகளிலிருந்து வருவோர்களுக்கான தனிமைப்படுத்தல் முறையில் மாற்றம் Reviewed by irumbuthirai on December 11, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.