Results for Viral News

திவுலபிடிய கொரோனா எதிரொலி: 25-11-2020 நடந்தவை...

November 29, 2020

திவ்லபிடிய கொரோனா எதிரொலியாக 52ம் நாள் அதாவது புதன்கிழமை (25) நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள், அறிவிப்புக்கள் என்பவற்றை இங்கு தருகிறோம். 
  • பண்டாரகம பொலிஸ் பிரிவின் கிழக்கு அடலுகம , எபிடமுல்ல மற்றும் கொலமெதிரிய ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் மற்றும் கண்டி மாவட்டத்தின் அலவதுகொடை பிரிவின் ( அக்குரணை பிரதேச செயலக பிரிவு) புளுகஹாதென்ன மற்றும் தெலம்புகஹாவத்த ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக அறிவிப்பு. 
  • தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசமான பண்டாரகம பொலிஸ் பிரிவின் கிரிமன்துடாவ கிராம உத்தியோகத்தர் பிரிவு தனிமைப்படுத்தல் நிலையில் இருந்து விடுவிக்கப்படுவதாக அறிவிப்பு. 
  • கண்டி நகர பகுதியில் உள்ள 45 பாடசாலைகளை எதிர்வரும் டிசம்பர் மாதம் 4 ஆம் திகதி வரை மூட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண ஆளுநர் லலித் யு கமகே உறுதிப்படுத்தியுள்ளார். 
  • கொவிட் 19 அவதான நிலை காணப்படாத பிரதேசங்களில் முதன்மை பாடசாலைகள் மற்றும் பாடசாலைகளின் ஆரம்ப பிரிவுகளை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த தெரிவித்தார். 
  • தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள குற்றுப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவிற்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 
  • 3 கிலோமீட்டர் நடந்து வந்து கொரோனா தொற்றாளர் ஒருவர் அம்பியுலன்ஸில் ஏறியுள்ளார். பாதை குன்றும் குழியுமாக இருந்ததினால் இந்நிலைமை ஏற்பட்டுள்ளது. நுவரெலிய டயகம பிரதேசத்தில் நேற்று இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. 
  • கொவிட்-19 காரணமாக மரணிப்போருக்கான சவப்பெட்டிகள் அவர்களது குடும்பத்தினரால் வழங்கப்பட வேண்டுமென சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். 
  • தற்போதுள்ள சூழ்நிலையை கருத்தில் கொண்டு, நம் மக்களின் பாதுகாப்பிற்கும் தேசத்தின் பாதுகாப்பிற்கும் நாளை வியாழக்கிழமை (26.11.2020) நோன்பு நோற்று பிரார்த்திப்போம். அத்துடன் துஆ, இஸ்திஃபார், ஸதகா போன்ற நல்லமல்களில் தொடர்ந்தும் ஈடுபடுவோம் என அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா அறிவித்துள்ளது. 
  • மேலும் 02 கொரோனா மரணங்கள் அறிவிப்பு. 1. கொழும்பு 12 ஐ சேர்ந்த 45 வயது பெண். 2. பன்னிபிட்டியவை சேர்ந்த 80 வயது ஆண். மொத்த மரணம் 96 ஆக உயர்வு. 
  • இன்றைய தினம் மாத்திரம் 502 பேருக்கு கொரோனா உறுதியானது.
  • Irumbuthirainews
திவுலபிடிய கொரோனா எதிரொலி: 25-11-2020 நடந்தவை... திவுலபிடிய கொரோனா எதிரொலி: 25-11-2020 நடந்தவை... Reviewed by irumbuthirai on November 29, 2020 Rating: 5

திவுலபிடிய கொரோனா எதிரொலி: 24-11-2020 நடந்தவை...

November 25, 2020

திவ்லபிடிய கொரோனா எதிரொலியாக 51ம் நாள் அதாவது செவ்வாய்க்கிழமை (24) நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள், அறிவிப்புக்கள் என்பவற்றை இங்கு தருகிறோம். 
  • நாட்டில் கொவிட் 19 தொற்று நிலைமை காணப்பட்ட போதிலும் இவ் வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 9,688 வழக்குகள் சட்டமா அதிபரால் நிறைவு செய்யப்பட்டுள்ளன. அதேபோல், 4,019 வழக்குகளில் பிரதிவாதிகளுக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செயயப்பட்டுள்ளதாக சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி அரச சட்டத்தரணி நிஸாரா ஜயரத்ன தெரிவித்தார். 
  • கடந்த சில தினங்களுக்கு முன்னர் பஸ்ஸர பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்திருந்த நபருக்கு கொரோனா தொற்று காரணத்தால் 5 பொலிஸ் அதிகாரிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 
  • பல்கலைக்கழக பரீட்சைகளை நடத்தும் நடைமுறை விதிகள் குறித்து இந்த வாரத்தில் அறிவிக்கப்படும் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்தார். 
  • நுவரெலியா மாவட்டத்தில் நேற்று (23) வரை 89 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனவும், அவர்களில் 25 பேர் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கொழும்பில் இருந்து வந்தவர்கள் எனவும் நுவரெலியா மாவட்ட சுகாதார பணிப்பாளர் வைத்தியர் இமேஷ் பிரதாபசிங்க இன்று (24) தெரிவிப்பு.
  • இதுவரை காலமும் கொவிட்-19 தொற்றால் உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் செய்யும் நடைமுறையே அமுலானது. இது உலகளாவிய ரீதியில் ஆராய்ந்து மேற்கொள்ளப்படும் தீர்மானமாகும். இங்கு ஒரு இனத்தை அல்லது மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு தனித்துவம் அளிக்க முடியாது. வைரஸ் தொற்று பரவும் விதம் போன்றவற்றை ஆராய்ந்து விஞ்ஞான ரீதியாக முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளது. இவையெல்லாம் நாட்டு நலன் கருதி மேற்கொள்ளப்படும் தீர்மானங்கள் என டொக்டர் சுதத் சமரவீர தெரிவித்தார். 
  • கொழும்பில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்த பிரதேசங்களிலிருந்து சென்றமை காரணமாகவே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. நுவரெலியாவில் இரண்டு இடங்களில் பதிவாகியுள்ளன. ஒரு இடம் மஸ்கெலியா. கடந்த தினத்தில் தமிழர்களின் பண்டிகை ஒன்று இருந்தது. நாம் அறிவித்திருந்தோம் மலையக பிரதேசங்களுக்கு செல்ல வேண்டாம் என்று. எனினும் நபர் ஒருவர் மஸ்கெலியா பிரதேசத்திற்கு சென்றிருந்தார். அதேபோல் நுவரேலியா பிரதேசத்திற்கும் கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் இருந்த நபர் ஒருவர் சென்றிருந்தார். இந்த இரண்டு சம்பவங்களின் மூலம் மலையகத்திற்கு நோய் பரவியுள்ளது. நாம் இந்த இரண்டு விடயங்களையும் புலனாய்வு பிரிவு ஊடாக விசாரணை செய்தோம். ஒரு சில பிரதேசங்களில் நோயாளர்கள் பதிவாகும் அதேவேளை ஏனைய பிரதேசங்களுக்கும் தொற்று ஏற்பட்டுள்ளதா என்பது தொடர்பில் ஆராயப்படுகின்றது. அதனடிப்படையிலேயே தனிமை படுத்துவதா இல்லையா என்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும் என ராணுவ தளபதி தெரிவிப்பு. 
  • நேற்று பாடசாலைகளில் ஆசிரியர் மற்றும் மாணவர் வரவு திருப்திகரமான மட்டங்களில் இருந்ததாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 
  • அம்பலாங்கொடை பகுதியில் உள்ள பிரபல பாடசாலைகள் இரண்டிலுள்ள 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். குறித்த பாடசாலைகளில் கல்வி பயிலும் அம்பலாங்கொடை-திலகபுர பகுதியில் வசித்து வரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு குழந்தைகளின் தாயும் தந்தையும் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், பாடசாலைகளில் மூன்றாம் தவணை ஆரம்பமாகியுள்ள நிலையில் நேற்றைய தினம் குறித்த குடும்பத்தில் உள்ள இரண்டு மாணவர்கள் பாடசாலைக்கு சென்றுள்ளனர். இதன் காரணமாகவே அவர்களுடன் நெருங்கி பழகிய மாணவர்களும் ஆசிரியர்களும் தற்போது தனிமைப்படுத்தலுக்காக அனுப்பப்பட்டுள்ளனர். 
  • அக்குரணையில் இதுவரை 39 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அங்கு குறித்த சில கிராம சேவை உத்தியோகத்தர் பிரிவிற்கு இன்று முதல் நடமாட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 
  • பேருவளை பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
  • இலங்கையில் இதுவரை கர்ப்பிணித்தாய்மார்கள் 50 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
  • இன்று முதல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
  • இன்றைய தினம் மாத்திரம் 459 பேருக்கு கொரோனா உறுதியானது.
  • Irumbuthirainews
திவுலபிடிய கொரோனா எதிரொலி: 24-11-2020 நடந்தவை... திவுலபிடிய கொரோனா எதிரொலி: 24-11-2020 நடந்தவை... Reviewed by irumbuthirai on November 25, 2020 Rating: 5

திவுலபிடிய கொரோனா எதிரொலி: 23-11-2020 நடந்தவை...

November 24, 2020

திவ்லபிடிய கொரோனா எதிரொலியாக 50ம் நாள் அதாவது திங்கட்கிழமை (23) நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள், அறிவிப்புக்கள் என்பவற்றை இங்கு தருகிறோம். 
  • மஹர சிறைச்சாலையில் கைதியாக இருந்த நபர் சுகயீனம் காரணமாக ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனைகளில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
  • மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் நாராஹேன்பிட்ட பிரதான காரியாலயம் நாளை முதல் மீண்டும் திறக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 
  • IDH வைத்தியசாலையில் இருந்து நேற்று தப்பிச் செல்ல முற்பட்ட போதைப்பொருளுக்கு அடிமையான 22 வயது கொவிட் தொற்றாளர் வைத்தியசாலையின் பாதுகாப்பு பிரிவினரால் பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 
  • இன்று 5 வீதமான மாணவர் வருகையே பதிவானதாக ஆசியர் சங்கங்கள் தெரிவிக்கின்றன. 
  • 3ம் தவனை கற்றல் செயற்பாடுகளுக்காக பாடசாலைகள் மீள திறக்கப்பட்ட நிலையில் சப்ரகமுவ மாகாணத்திலேயே இன்று அதிகூடிய அதாவது 55% மாணவர் வரவு பதிவாகியுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவித்தார். 
  • வெலிக்கடை சிறைச்சாலையில் கடமையாற்றி வரும் எல்பிட்டி-நவதகல பிரதேசத்தில் வசித்து வரும் நபர் தமது வீட்டுக்கு திரும்பியிருந்த போது திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இவருக்கு மேற்கொள்ளப்பட்ட பீசிஆர் பரிசோதனையின் போது இவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. 
  • சுகாதார வழிமுறைகளுக்கு அமைய LPL மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிரான கிரிக்கட் தொடர்களை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 
  • பல்கலைக்கழகங்களில் புதிய மாணவர்களுக்கான பதிவு இன்று முதல் ஆரம்பமாகும் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பதிவுசெய்தல் இணைய நிகழ்நிலை கட்டமைப்பு ஊடாக மட்டுமே இடம்பெறும். 
  • அவிசாவளை மாவட்ட வைத்தியசாலையின் ஆரம்ப சிகிச்சை பிரிவில் கடமையாற்றும் பெண் வைத்தியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
  • தரம் 6 - 13 ஆம் தர மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளுக்காக மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகள் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் பாடசாலைகள் இன்று (23) மீண்டும் திறக்கப்பட்டன. ஆனால் ஏனைய பிரதேசங்களிலும் சில பாடசாலைகள் இன்று திறக்கப்படவில்லை. அந்தந்த பகுதிகளில் காணப்படும் கொரோனா பரவல் நிலைமையை கருத்திற்கொண்டு பாடசாலைகளை திறக்கும் அதிகாரம் பாடசாலை அதிபர்கள் உள்ளிட்ட கல்வி அதிகாரி மற்றும் சுகாதார தரப்பினருக்கு வழங்கப்பட்டிருந்தது. இதற்கமைய வடமேல் மாகாணத்தில் 48 பாடசாலைகளும், மத்திய மற்றும் வட மத்திய மாகாணங்களில் 14 பாடசாலைகளும் சப்ரகமுவ மாகாணத்தில் 12 பாடசாலைகளும் கிழக்கு மாகாணத்தில் 6 பாடசாலைகளும் தென் மாகாணத்தில் ஒரு பாடசாலையும் திறக்கப்படவில்லை. ஊவா மாகாணத்தில் எந்த பாடசாலைகளும் மூடப்படவில்லை. 
  • மேலும் 03 கொரோனா மரணங்கள் அறிவிப்பு. 60 மற்றும் 86 வயது பெண்கள். 60 வயது ஆண். இத்துடன் மொத்த மரணம் 90 ஆக உயர்வு. 
  • இன்றைய தினம் மாத்திரம் 337 பேருக்கு கொரோனா உறுதியானது.
  • Irumbuthirainews
திவுலபிடிய கொரோனா எதிரொலி: 23-11-2020 நடந்தவை... திவுலபிடிய கொரோனா எதிரொலி: 23-11-2020 நடந்தவை... Reviewed by irumbuthirai on November 24, 2020 Rating: 5

திவுலபிடிய கொரோனா எதிரொலி: 22-11-2020 நடந்தவை...

November 23, 2020

திவ்லபிடிய கொரோனா எதிரொலியாக 49ம் நாள் அதாவது ஞாயிற்றுக்கிழமை (22) நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள், அறிவிப்புக்கள் என்பவற்றை இங்கு தருகிறோம். 
  • கொழும்பில் தனிமைப்படுத்தப்பட்ட பொரல்ல, கோட்டை, கொம்பனி வீதி மற்றும் வெல்லம்பிடிய பொலிஸ் பிரிவுளும் கம்பஹாவில் தனிமைப்படுத்தப்பட்ட ஜா-எல மற்றும் கடவத்தை பொலிஸ் பிரிவுகளும் நாளை (23) காலை 5 மணி முதல் தனிமைப்படுத்தலிலிருந்து நீக்கப்படுவதாக ராணுவ தளபதி அறிவிப்பு. 
  • குருணாகலை பிரதேச தபால் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மற்றும் குருணாகலை பிரதான தபால் அலுவலகத்தின் அலுவலக ஊழியர்கள் 14 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதையடுத்து குருணாகலை மாவட்டத்தின் தபால் சேவையை தற்காலிகமாக நிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார். 
  • பிரதமர் அலுவலகம் மற்றும் அலரி மாளிகையில் பணியாற்றும் எந்தவொரு ஊழியரும் கொவிட்-19 தொற்றுக்கு உள்ளாகவில்லை என்பதை உறுதிபடுத்துவதாக பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. 
  • பச்சையாக மீனை உண்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் திலீப் வெதாரச்சியை வரவேற்கும் நிகழ்வொன்று தங்காலை மீன்பிடி துறைமுக மீனவர்களினால் இன்று (22) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கடந்த தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் திலீப் வெதாரச்சி பச்சையாக மீனை உண்ட சம்பவத்தை தொடர்ந்து மீன் வியாபாரம் இத்தினங்களில் வெற்றிகரமாக இடம்பெறுவதாக தெரிவித்தே அவருக்கு இந்த வரவேற்று நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 
  • நாளை முதல் ஒரு வாரக்காலத்திற்கு பாடசாலைகளை திறந்து குறித்த செயற்பாடுகள் தொடர்பில் ஆராயவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார். ஏதாவது ஒரு வகையில் பாடசாலை கொவிட் கொத்தணி ஒன்று உருவானால் அரசாங்கத்தின் சார்பாக தான் அந்த பொறுப்பை ஏற்பதாகவும் தெரிவித்தார். 
  • சுகாதார பாதுகாப்பு வழிகாட்டல்களை கடைபிடித்து நாளை தொடக்கம் அலுவலக ரயில்கள் காலை மற்றும் மாலை வேளைகளில் இயக்கப்படும் எனவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களில் குறித்த ரயில்கள் நிறுத்தப்படாது எனவும் ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. 
  • நாட்டில் உருவாகியுள்ள இரண்டு கொத்தணிகளுக்கு மேலதிகமாக பாடசாலை கொத்தணி என ஒன்று உருவாவதற்கு வழியேற்படுத்த வேண்டாம் கல்வி அமைச்சரிடம் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. 
  • நாளை முதல் ஆரம்பமாவுள்ள மூன்றாம் தவணைக்கு பாடசாலைகளுக்கு மாணவர்கள் செல்வதற்காக போக்குவரத்து முறைகளை பொலிஸ் ஒழுங்குபடுத்த உள்ளதாக பொலிஸ் ஊடப பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். 
  • பாடசாலைகளில் கொரோனா அச்சம் அதிகரிக்காமல் இருக்க சுகாதார வழிமுறைகள் அடங்கிய கோவை ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சின் செயலாளர் தெரிவிப்பு. 
  • கொட்டகலை பகுதியில் இரண்டு வயதுடைய குழந்தைக்கும் கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
  • மேலும் 4 கொரோனா மரணம் அறிவிப்பு. கொழும்பு 15 பிரதேசத்தை சேர்ந்த 70 வயதுடைய பெண் ஒருவரும், கொழும்பு 12 பிரதேசத்தை ​சேர்ந்த 53 வயதுடைய ஆண் ஒருவரும், பொரளை பிரதேசத்தை சேர்ந்த 84 வயதுடைய பெண் ஒருவரும் மற்றும் கொழும்பு 10 பிரதேசத்தை சேர்ந்த 75 வயதுடைய ஆண் ஒருவரும் இவ்வாறு உயிரிழப்பு. அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 87 ஆக அதிகரித்துள்ளது. 
  • இன்றைய தினம் மாத்திரம் 400 பேருக்கு கொரோனா உறுதியானது.
  • Irumbuthirainews
திவுலபிடிய கொரோனா எதிரொலி: 22-11-2020 நடந்தவை... திவுலபிடிய கொரோனா எதிரொலி: 22-11-2020 நடந்தவை... Reviewed by irumbuthirai on November 23, 2020 Rating: 5

திவுலபிடிய கொரோனா எதிரொலி: 21-11-2020 நடந்தவை...

November 23, 2020

திவ்லபிடிய கொரோனா எதிரொலியாக 48ம் நாள் அதாவது சனிக்கிழமை (21) நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள், அறிவிப்புக்கள் என்பவற்றை இங்கு தருகிறோம். 
  • கொழும்பு IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தப்பிச் சென்ற பெண் எஹலியகொட, சிதுரங்கல காட்டுப்பகுதியில் வைத்து பிரதேசவாசிகளினால் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. 
  • ஊழியர் ஒருவருக்கு கொவிட் தொற்று ஏற்பட்டிருந்தாலும் மத்திய வங்கியின் நடவடிக்கைகளை தொய்வின்றி முன்னெடுக்க அவசரகால செயற்பாட்டு செயலணி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நேற்று (20) முதல் 14 நாட்கள் மத்திய வங்கியின் தலைமை அலுவலகத்தில் பணிபுரிந்த அனைத்து சிரேஸ்ட அதிகாரிகளும் வீட்டிலிருந்து பணிபுரிய அனுமதிக்கப்பட்டுள்ளனர். 
  • இதுவரையில் சிறைச்சாலைகளில் பதிவான மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 617 ஆக அதிகரித்துள்ளது. இவர்களுள் 578 பேர் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள், ஏனைய 39 பேர் சிறைச்சாலை ஊழியர்கள் என சிறைச்சாலை ஆணையாளர் சந்தன ஏக்கநயக்க தெரிவித்துள்ளார். 
  • சிறைச்சாலைகளில் பரவிவரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கு சுதேசிய வைத்திய முறையை பயன்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. 
  • முறையான திட்டம் ஒன்றை தயாரிக்கும் வரை எதிர்வரும் திங்கட்கிழமை முதல் 11,12 மற்றும் 13 ஆம் தர மாணவர்களுக்கு மாத்திரம் பாடசாலையை ஆரம்பிக்குமாறு ஆசிரியர் சங்கங்கள் அரசாங்கத்தை கேட்டுள்ளன. 
  • நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளின் அடிப்படையில் 17 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை இனங்காணப்பட்டுள்ளதை தொடர்ந்து பண்டாரகம சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட அட்டுலுகம பகுதியின் 8 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. 
  • ஆபத்தான வலயங்களை தவிர அனைத்து மாவட்டங்களிலும் பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து சேவைகள் திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இருப்பினும் இதில் பாரிய ஆபத்து இருப்பதாக அகில இலங்கை மாவட்டப் பாடசாலை போக்குவரத்துச் சேவை சங்கத்தின் தலைவர் என்.எல்.கே. ஹரிச்சந்திர பத்மசிறி தெரிவித்துள்ளார். 
  • கொரோனா தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்கும் நோக்கில் சிலாபம் பொது மீன் சந்தை ஒருவார காலத்திற்கு மூடப்பட்டுள்ளதாக அதன் செயலாளர் கே.பி.சந்தன குமார தெரிவித்தார்.
  • கொரோனாவினால் மேலும் 9 பேர் மரணமாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் இன்று அறிவித்துள்ளது. இத்துடன் மொத்த மரணம் 83 ஆக உயர்வு. 
  • இன்றைய தினம் மாத்திரம் 491 பேருக்கு கொரோனா உறுதியானது.
  • Irumbuthirainews


திவுலபிடிய கொரோனா எதிரொலி: 21-11-2020 நடந்தவை... திவுலபிடிய கொரோனா எதிரொலி: 21-11-2020 நடந்தவை... Reviewed by irumbuthirai on November 23, 2020 Rating: 5

திவுலபிடிய கொரோனா எதிரொலி: 20-11-2020 நடந்தவை...

November 21, 2020

திவ்லபிடிய கொரோனா எதிரொலியாக 47ம் நாள் அதாவது வெள்ளிக்கிழமை (20) நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள், அறிவிப்புக்கள் என்பவற்றை இங்கு தருகிறோம். 
  • போகம்பறை சிறையிலிருந்து தப்பி சென்ற நிலையில் கைது செய்யப்பட்ட கைதிக்கும் தப்பி செல்ல முயற்சித்த போது மரணித்த கைதிக்கும் கொரோனா தொற்றுறுதியானதாக அறிவிப்பு. 
  • கொவிட்19 தொற்றுகாக IDH மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த தாயும் மகனும் நேற்றிரவு தப்பி சென்றுள்ளதாக தேசிய கொவிட்19 தடுப்புக்கான செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. குறித்த 02 பேரும் எஹெலியகொட பகுதியைச் சேர்ந்தவர்கள். இதேவேளை தாயுடன் தப்பிச் சென்ற சிறுவன், எஹெலியகொட யாய வீதியில் உள்ள வீடொன்றில் வைத்து கண்டுபிடிக்கப்படுள்ளார். தாய் தொடர்ந்தும் தேடப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது. 
  • இங்கிலாந்து செல்லும் இலங்கையர்கள் அங்கு 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
  • வடமேல் மாகாணத்தில் கொரோனா அச்சுறுத்தல் காணப்படும் பிரதேசங்களுக்கு எதிர்வரும் 23ஆம் திகதி பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படமாட்டாது என மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார். அந்த இடங்களுக்கு பாடசாலைகளை மீள ஆரம்பித்தல் ஒரு வாரத்தால் பிற்போடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 
  • மட்டக்களப்பு வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவில் கடந்த 26 நாட்களாக அமுலில் இருந்த தனிமைப்படுத்தல் கட்டுப்பாடு இன்று (20) காலை 6 மணிமுதல் முதல் கட்டம் கட்டமாக தளர்த்தப்பட்டது. 
  • நாளை (21) மற்றும் நாளை மறுதினம் (22) நாட்டின் எந்த பகுதிகளிலும் ரயில்கள் இயக்கப்படாது என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. 
  • ட்ரோன் சுற்றிவளைப்பின் ஊடாக இதுவரையில் 117 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவிப்பு 
  • கொரோனா தொற்றுக்குள்ளான பொலிஸ் மற்றும் பொலிஸ் விஷேட படை அதிகாரிகளின் எண்ணிக்கை 839 ஆக அதிகரித்துள்ளது. 
  • சுகாதார தரப்பினரின் ஆலோசனைகளுக்கு அமையவே எதிர்வரும் 23 ஆம் திகதி பாடசாலையை ஆரம்பிக்க தீர்மானித்தாக கல்வியமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இது எழுந்தமானமாக எடுக்கப்பட்ட தீர்மானம் அல்ல மாறாக பாடசாலைகளின் அதிபர்கள் அதிபர்கள், சிரேஸ்ட ஆசிரியர்கள் மற்றும் இந்த விடயத்துடன் சம்பந்தப்பட்ட நிபுணர்கள் மற்றும் சுகாதார தரப்பினருடன் கலந்துரையாடியே தீர்மானித்ததாக தெரிவித்தார். 
  • பேலியகொட மெனிங் சந்தை வளாகம் இன்று (20) பிரதமரும், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷவினால் திறந்து வைக்கப்பட்டது. இந்த சந்தை வளாகத்தில் 1,192 விற்பனை நிலையங்கள், 600 வாகனங்கள் நிறுத்த கூடிய வகையிலான வாகன தரிப்பிட வசதி, ஊழியர்களுக்கான ஓய்வறை, வைத்திய முகாம், வங்கி, உணவகம், குளிரூட்டப்பட்ட களஞ்சியசாலை, ஹோட்டல் உள்ளிட்ட பல வசதிகள் காணப்படுகின்றன. 
  • கொரோனா 2வது அலை ஆரம்பமானதன் பின்னர் 19 கடற்படையினருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவிப்பு. 
  • வாகன அனுமதிப்பத்திரம் பெறவுள்ள நபர்கள் தமது மருத்துவ சான்றிதழை பெற்றுக்கொள்ள E-Channel இணையத்தள சேவையை பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
  • கொழும்பு 02 பிரதேசத்தை சேர்ந்த 70 வயதுடைய நபரொருவரே கொரோனாவால் உயிரிழந்துள்ளதாக அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 74 ஆக அதிகரித்துள்ளது. 
  • இன்றைய தினம் மாத்திரம் 439 பேருக்கு கொரோனா உறுதியானது. அந்தவகையில் இலங்கையின் மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 19,280 ஆக அதிகரிப்பு.
  • Irumbuthirainews
திவுலபிடிய கொரோனா எதிரொலி: 20-11-2020 நடந்தவை... திவுலபிடிய கொரோனா எதிரொலி: 20-11-2020 நடந்தவை... Reviewed by irumbuthirai on November 21, 2020 Rating: 5

மாணவர்களுக்காக விரிவுபடுத்தப்படும் 4G வலையமைப்பு...

November 20, 2020

4G இணையத் தொடர்பின் ஊடாக மாணவர்கள் தமது கல்வி நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்லும் வகையில் 02 வாரங்களுக்குள் கெலின்கந்த பிரதேசத்திற்கும் அதனை அண்டியுள்ள பகுதிகளுக்கும் தொடர்பாடல் வலையமைப்பை விரிவுபடுத்துவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். 
பதுரெலிய கெலின்கந்த பிரதேசத்தில் இணையதள தொடர்பாடல் சிக்கல் காணப்படுவதாக சமூக ஊடகங்களில் வைரலாக பரவியதை அடுத்து தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் அந்தப் பிரதேசத்திற்கு விஜயம் செய்து பார்பார்வையிட்டதைத் தொடர்ந்து இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மாணவர்களுக்காக விரிவுபடுத்தப்படும் 4G வலையமைப்பு... மாணவர்களுக்காக விரிவுபடுத்தப்படும் 4G வலையமைப்பு... Reviewed by irumbuthirai on November 20, 2020 Rating: 5

திவுலபிடிய கொரோனா எதிரொலி: 19-11-2020 நடந்தவை...

November 20, 2020

திவ்லபிடிய கொரோனா எதிரொலியாக 46ம் நாள் அதாவது வியாழக்கிழமை (19) நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள், அறிவிப்புக்கள் என்பவற்றை இங்கு தருகிறோம். 
  • மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தல் பகுதிகளை தவிர்ந்த ஏனைய பகுதிகளில் உள்ள பாடசாலைகளை இம்மாதம் 23 ஆம் திகதி ஆரம்பிக்க தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சர் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஜீ.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார். 6 ஆம் தரம் முதல் 13 ஆம் தரம் வரையான வகுப்புகளுக்கே இவ்வாறு பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 
  • கடந்த 13 ஆம் திகதி பூஸ்ஸ சிறைச்சாலையில் இருந்து பிணையில் விடுவிக்கப்பட்ட நபரொருவர் மாதாம்பாகம கலகொட புதிய கொலனி பிரதேசத்தில் அமைந்துள்ள அவரின் வீட்டிற்கு சென்ற நிலையில் அவருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 
  • தீபாவளி விடுமுறையில் மஸ்கெலியா பிரதேசத்திற்கு சென்ற இருவருக்கும் மற்றும் கொட்டகலை பிரதேசத்திற்கு சென்ற ஒருவருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 
  • கட்டுநாயக்க முதலீட்டு மேம்பாட்டு வலயத்தில் ஊழியர்கள் உள்ளிட்ட 57 பேர் தங்கியுள்ள விடுதியொன்றில் 17 கொவிட் 19 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக சீதுவை சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் சஹிரு பெரேரா தெரிவித்தார். 
  • மினுவங்கொடை மற்றும் பேலியகொடை கொத்தணியில் கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 15,330 ஆக அதிகரித்துள்ளது. 
  • கொவிட் 19 தொற்று நிலைமை காரணமாக சுகாதார பாதுகாப்புடன் பணியிடங்களுக்கு ஊழியர்களை அழைத்து செல்வதற்காக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் மாகாணங்களுக்கு இடையேயான பேருந்துகளை ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. 
  • Covid-19 காரணமாக கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன்களை கையாளும் நடவடிக்கைகளும் வீழ்ச்சி கண்டுள்ளது. இந்த நிலைமையை தவிர்த்து உரிய வகையில் ஊழியர் முகாமைத்துவத்தை மேற்கொண்டு கொள்கலன் செயற்பாட்டு நடவடிக்கைகளை வழமைபோன்று முன்னெடுப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
  • மேல் மாகாணத்திலிருந்து வெளியில் பயணிப்பதற்கான தடை அமுல்படுத்தப்படாத பிரதேச செயலாளர் பிரிவுகளில் அமைந்துள்ள பிரதேச செயலாளர் அலுவலகங்கள் மூலம் 2020 நவம்பர் மாதம் 16 ஆம் திகதி தொடக்கம் வாகன வருமான அனுமதி பத்திரத்தை விநியோகிக்கும் பணியை ஆரம்பிப்பதற்கு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 
  • சாதாரணதர பரீட்சையை குறித்த தினத்தில் நடத்துவதா? இல்லையா, என்பது குறித்து மீள் பரிசீலனை மேற்கொள்ளப்படும் என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல்.பீரிஸ் தெரிவித்தார். 
  • ஏதேனும் வர்த்தக நிலையங்களில் சேவைகளை பெற்றுக்கொள்வதற்காக செல்லும் போது அங்கு வைக்கப்பட்டுள்ள தகவல்களை பதிவு செய்யும் புத்தகத்தில் தகவல்களை குறிப்பிடுவதற்காக பேனை ஒன்றை வீட்டிலிருந்தே எடுத்துச் செல்லுமாறு பொலிஸார் பொது மக்களுக்கு அறிவித்துள்ளனர். 
  • கொரோனா தொற்றுக்குள்ளான பொலிஸ் மற்றும் பொலிஸ் விஷேட படை அதிகாரிகளின் எண்ணிக்கை 833 ஆக அதிகரித்துள்ளது. 
  • கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் நாளை(20) முதல் விஷேட அம்பியுலன்ஸ் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பான மேலதிக தகவல்களை பெற்றுக் கொள்வதற்காக 0113 422 558 என்ற இலக்கத்திற்கு அழைப்பு விடுக்குமாறு தெரிவிக்கப்படுகின்றது. 
  • போகம்பறை சிறையிலிருந்து தப்பி சென்ற நிலையில் கைது செய்யப்பட்ட கைதிக்கும் தப்பி செல்ல முயற்சித்த போது மரணித்த கைதிக்கும் கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது. 
  • ஆளில்லா விமான கருவிகள் ஊடாக முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 117 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். 
  • வீட்டில் இருக்கின்ற முதியவர்கள் மற்றும் நீண்டகால நோய்வாய்ப்பட்டவர்கள், ஏதேனும் அசௌகரியங்களுக்கு உட்படுவார்களாக இருந்தால், அவர்களை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லுமாறு இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா இதனைத் தெரிவித்துள்ளார். 
  • தனியார் வகுப்புகளை நடத்துவதற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், பாணந்துறை - தொடவத்தை பகுதியில் நடத்தி செல்லப்பட்ட தனியார் வகுப்பினது ஆசிரியர் காவற்துறையினால் கைது. இந்தநிலையில், அந்த வகுப்பில் கலந்துக்கொண்ட அனைத்து மாணவர்களும் தற்போது சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 
  • நாட்டில் கொரோனா தொற்றால் பதிக்கப்பட்ட மேலும் 04 பேர் உயிரிழந்துள்ளதாக நேற்று நள்ளிரவு அறிவிக்கப்பட்டுள்ளது. இராணுவ தளபதி சவேந்திர சில்வா இதனை குறிப்பிட்டுள்ளார். இதற்கமைய இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 73 ஆக அதிகரித்துள்ளது. 
  • இன்றைய தினம் மாத்திரம் 439 பேருக்கு கொரோனா உறுதியானது. அந்தவகையில் இலங்கையின் மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 18,841 ஆக அதிகரிப்பு.
  • Irumbuthirainews
திவுலபிடிய கொரோனா எதிரொலி: 19-11-2020 நடந்தவை... திவுலபிடிய கொரோனா எதிரொலி: 19-11-2020 நடந்தவை... Reviewed by irumbuthirai on November 20, 2020 Rating: 5

திவுலபிடிய கொரோனா எதிரொலி: 18-11-2020 நடந்தவை...

November 19, 2020

திவ்லபிடிய கொரோனா எதிரொலியாக 45ம் நாள் அதாவது புதன்கிழமை (18) நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள், அறிவிப்புக்கள் என்பவற்றை இங்கு தருகிறோம். 
  • நேற்று (17) நள்ளிரவு ஐனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் உத்தரவின் பேரில் ஜனாதிபதி செயலாளர் பி.பீ.ஜயசுந்தரவால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அதாவது இலங்கை துறைமுக அதிகார சபை அத்தியாவசிய சேவையாக அறிவிக்கப்பட்டே இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. பழைய 
  • போகம்பறை சிறைச்சாலையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 5 கைதிகள் நேற்றிரவு தப்பி செல்ல முயற்சித்த போது 3 பேர் கைது, ஏனையவர்களில் ஒருவர் தப்பியோடியுள்ளதுடன், மற்றைய நபர் மரணித்துள்ளார் என சிறைச்சாலைகள் ஆணையாளர் தெரிவிப்பு. 
  • கொரோனா வைரஸ் நோயாளிகளை அடையாளம் காண்பதற்காக மேற்கொள்ளப்படும் துரித அன்டிஜென் பரிசோதனைகளை இலங்கையில் இன்று முதல் மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இன்று முதல் தெரிவு செய்யப்பட்ட குழுவினருக்கு அன்டிஜென் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். பயிற்சியளிக்கப்பட்டவர்கள் இந்த சோதனைகளை மேற்கொள்ளவுள்ளனர் 20 தொடக்கம் 30 நிமிடங்களில் முடிவுகள் தெரியவரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
  • கொரோனா தொற்றுக்குள்ளான பொலிஸ் மற்றும் பொலிஸ் விஷேட படை அதிகாரிகளின் எண்ணிக்கை 825 ஆக அதிகரித்துள்ளது. அவர்களுள் 628 பொலிஸ் அதிகாரிகளும் 197 பொலிஸ் விஷேட படை அதிகாரிகளும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. 
  • எதிர்வரும் நாட்களில் நடைபெறும் கொவிட் ஒழிப்பு செயலணி கூட்டத்திற்கு முன்னாள் சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்தியர் நிபுணர் அனில் ஜாசிங்கவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இன்று பிராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். 
  • குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் குழுவொன்று பெரன்டிக்ஸ் கொவிட் கொத்தணி தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ்மா அதிபர் சந்தன விக்கிரமசிங்க சட்டமா அதிபருக்கு அறிவித்துள்ளார். 
  • கொழும்பு வெள்ளவத்தை பகுதியில் இருந்து தீபாவளி பண்டிகைக்கு பொகவந்தலாவைக்கு சென்ற இளைஞன் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது 
  • 30 வருடகால யுத்தத்தை விடவும் கொரோனா வைரஸ் பரவலானது அதிகளவிலான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக பிரதமர், களனி கங்கை வலது கரை நீர் விநியோக திட்டத்தின் இரண்டாவது கட்டத்தை இன்று மக்கள் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோது தெரிவித்துள்ளார். 
  • கொரோனாவின் முதல் அலையை மிக விரைவாக கட்டுப்படுத்த முடிந்தது. கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் இலங்கையின் வெற்றி உலக சுகாதார தாபனத்தினால் கூட பாராட்டப்பட்டது. இருப்பினும், மக்களைப் பாதுகாக்க நாட்டை சுமார் இரண்டு மாதங்களுக்கு முற்றிலுமாக மூட வேண்டியிருந்தது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. வருமானத்தை இழந்த 59 லட்சம் குடும்பங்களுக்கு ரூ. 5 ஆயிரம் கொடுப்பனவு இரண்டு முறை வழங்கப்பட்டது. கடினமான காலங்களில் பல அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையைக் குறைக்க வரி நிவாரணம் வழங்கப்பட்டது. கொரோனா நோய்த்தொற்றாளர்களை கண்டறிதல், தொடர்புடையவர்களை தனிமைப்படுத்தல், பி.சி.ஆர் பரிசோதனை மற்றும் நலன்பேணல் நடவடிக்கைகளுக்காக அரசாங்கம் இதுவரை ரூ. 70,000 மில்லியனுக்கும் அதிகமாக செலவிட்டுள்ளது. கோவிட்டின் இரண்டாவது அலை இன்று உலகம் முழுவதும் பரவி வருகிறது. நோய்த் தொற்றுடையவர்கள் என்று கண்டறியப்பட்டு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டவர்களின் இறப்பு எண்ணிக்கையை 0.05% க்கும் குறைந்தளவில் பேண எமது சுகாதாரத் துறைக்கு முடியுமாகியுள்ளது. என்று தான் பதவியேற்று ஓராண்டு நிறைவுக்காக நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் ஜனாதிபதி தெரிவித்தார். 
  • மேலும் 3 கொரோனா மரணங்கள் அறிவிப்பு. 1) கந்தானை பகுதியைச் சேர்ந்த 70 வயது ஆண். 2) கொழும்பு 12 பகுதியைச் சேர்ந்த 74 வயது பெண். 3) கொழும்பு - 13 பகுதியைச் சேர்ந்த 48 வயது ஆண். இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 69ஆக அதிகரித்துள்ளது. 
  • இன்றைய தினம் மாத்திரம் 327 பேருக்கு கொரோனா உறுதியானது. அந்தவகையில் இலங்கையின் மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 18,402 ஆக அதிகரிப்பு.
  • Irumbuthirainews
திவுலபிடிய கொரோனா எதிரொலி: 18-11-2020 நடந்தவை... திவுலபிடிய கொரோனா எதிரொலி: 18-11-2020 நடந்தவை... Reviewed by irumbuthirai on November 19, 2020 Rating: 5

திவுலபிடிய கொரோனா எதிரொலி: 17-11-2020 நடந்தவை...

November 18, 2020

திவ்லபிடிய கொரோனா எதிரொலியாக 44ம் நாள் அதாவது செவ்வாய்க்கிழமை (17) நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள், அறிவிப்புக்கள் என்பவற்றை இங்கு தருகிறோம். 
  • பேராதனை பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பிரிவு அதிகாரி ஒருவருக்கு கொவிட் தொற்று உறுதி. அதன்படி, இந்நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளான பொலிஸ் அதிகாரிகளின் எண்ணிக்கை 785 ஆக அதிகரித்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவிப்பு. 
  • முழு உலகையும் பாதித்துள்ளது கொரோனா தொற்று காலத்தில் மனதில் நேர்மறையான எண்ணங்களை (Positive thoughts) ஏற்படுத்திக் கொள்வதன் ஊடாக அதனை வெற்றிகொள்ள முடியும் என பிரபல தொழிலதிபர் தம்மிக பெரேரா தெரிவித்துள்ளார். 
  • சிறைச்சாலைகளிலிருந்து இனங்காணப்பட்ட மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 506 அதிகரித்துள்ளது. 
  • ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பாக விசேட பேச்சுவார்த்தை நாளை நடைபெறவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இம்மாதம் 23ஆம் திகதி பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது பற்றி, ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் இதன்போது மீளாய்வு செய்யப்படவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார். 
  • வைரஸ் தொற்று பரவலைத் தடுப்பதற்காக பயன்படுத்தப்படும் ட்ரோன்கள் வீடுகளில் தேடுதல்களை நடத்தவில்லை. வைரஸ் தொற்று மக்கள் மத்தியில் பரவாதிருப்பதற்கும் , தொற்றுக்குள்ளானவர்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதற்குமாகவே இது பயன்படுத்தப்படுகிறது. இது தனி மனித உரிமையை மீறும் செயற்பாடல்ல என்று வெகுஜன ஊடக அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். 
  • கொரோனா தொற்றுறுதியானவர்கள் வீதிகளில் உயிரிழப்பதாக சமூக வலைத்தளங்களில் வெளியான தகவல் உண்மைக்கு புறம்பான செய்தி என்பதோடு ஜப்பான் மற்றும் அவுஸ்ரேலியாவிலுள்ள இருவரால் திட்டமிட்டு பரப்பப்பட்டுள்ளமை தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவிப்பு. 
  • நாட்டில் எந்த பிரதேசத்தில் இருந்தாலும், எந்தப் பகுதியில் நடமாடினாலும், அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டியது கட்டாயமானதாகும் என்பதோடு கடந்த 30 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளியை பேணாமை என்பன தொடர்பில் 290 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவிப்பு. 
  • சிகிச்சை பெறுவதற்காக கொழும்பு லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 11 வயது சிறுமிக்கு கொவிட்-19 தொற்றுறுதியானது. 
  • கடந்த 2 வாரகாலங்களுக்குள் சிறைச்சாலைகளில் இருந்து பிணையில் விடுவிக்கப்பட்டவர்கள் பி.சி.ஆர் பரசோதனை மேற்கொள்ள வேண்டும் என காலி மாவட்ட பிரதேச தொற்று நோய் விஞ்ஞான பிரிவின் விசேட வைத்தியர் கே. சிங்காராச்சி கோரிக்கை விடுத்துள்ளார். 
  • இதுவரை கொழும்பு ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் பணி புரியும் 05 வைத்தியர்கள் உள்ளிட்ட 15 ஊழியர்களுக்கு கொவிட் 19 வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் தெரிவிப்பு. 
  • மேலும் 05 கொரோனா மரணங்கள் அறிவிப்பு. 1) கொழும்பு – 10 பகுதியைச் சேர்ந்த 65 வயது ஆண் 2) இரத்மலானை பகுதியைச் சேர்ந்த 69 வயது பெண் 3) கிருலப்பனை பகுதியை சேர்ந்த 71 வயது பெண் 4) கொழும்பு-2 பகுதியைச் சேர்ந்த 81 வயது பெண் 5) தெமடகொட பகுதியைச் சேர்ந்த 82 வயது ஆண். இத்துடன் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 66ஆக அதிகரித்துள்ளது. 
  • இன்றைய தினம் மாத்திரம் 401 பேருக்கு கொரோனா உறுதியானது. அந்தவகையில் இலங்கையின் மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 18,075 ஆக அதிகரிப்பு.
  • Irumbuthirainews
திவுலபிடிய கொரோனா எதிரொலி: 17-11-2020 நடந்தவை... திவுலபிடிய கொரோனா எதிரொலி: 17-11-2020 நடந்தவை... Reviewed by irumbuthirai on November 18, 2020 Rating: 5

திவுலபிடிய கொரோனா எதிரொலி: 16-11-2020 நடந்தவை...

November 17, 2020

திவ்லபிடிய கொரோனா எதிரொலியாக 43ம் நாள் அதாவது திங்கட்கிழமை (16) நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள், அறிவிப்புக்கள் என்பவற்றை இங்கு தருகிறோம். 
  • வீதிகளி்ல் கொவிட் மரணங்கள் இடம்பெறுவதாகவும் சுகாதார பொறிமுறை தொடர்பில் பொய்யான தகவல்கள் சமூக வலைத்தளங்கள் ஊடாக பரப்பிய 28 வயதுடைய கண்டி ஹன்தான பிரதேசத்தை சேர்ந்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிப்பு. ஏற்கனவே இவ்வாறான பொய் தகவல்களைப் பரப்பிய கடுகன்னாவை பிரதேச நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 
  • பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது குறித்து சுகாதார துறையை சார்ந்த விசேட நிபுணர்களின் ஆலோசனைக்கு அமைவாகவே தீர்மானம் மேற்கொள்ளப்படும் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் இன்று தெரிவித்தார். 
  • சுகாதார பாதுகாப்பு முறைகளைப் பயன்படுத்தி இன்று (16) தொடக்கம் காலை மற்றும் மாலை வேளைகளில் விசேட அலுவலக புகையிரதங்களை சேவையில் ஈடுபடுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக புகையிரத திணைக்களத்தின் பொது முகாமையாளர் ரஞ்சித் பத்மலால் தெரிவித்தார். 
  • துறைமுக நடவடிக்கைகள் வழமை நிலைமைக்கு திரும்பி கொண்டிருப்பதாக துறைமுக அதிகார சபை தெரிவிப்பு. 
  • பயணிகளை ஏற்றிச் செல்லும் நடைமுறையில் ஒக்டோபர் 15ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானியின் அறிவுறுத்தல்களைப் பின்பற்ற வேண்டும் எனவும் புறக்கோட்டை பஸ் மற்றும் ரயில் நிலையங்களை மையப்படுத்தி விசேட பாதுகாப்புத் திட்டம் அமுலாவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸமா அதிபர் அஜித் ரோஹன தெரிவிப்பு. 
  • கொவிட் இரண்டாவது அலையில் மினுவங்கொடை கொத்தணியை தற்போதைய நிலையில் முழுமையாக கட்டுப்படுத்தப்படுத்த முடிந்துள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா தெரிவிப்பு. 
  • நாட்டில் தற்பொழுது பயன்படுத்தப்படும் முகக்கவசம், கையுறை போன்ற கழிவுகளை அகற்றுவதில் பாரிய சுகாதார பிரச்சினைகள் ஏற்படுவதற்கு இடமிருப்பதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். 
  • பேலியகொட மீன் சந்தையில் பணப் பரிமாற்றங்களை இணைய வழியூடாக (ஒன் லைன்) மேற்கொள்வது தொடர்பாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் அமைச்சு அலுவலகத்தில் இன்று (16) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஆராயப்பட்டது. 
  • தற்போது ஏற்பட்டுள்ள நிலைமைக்கு மத்தியில் குறைந்த பட்சம் மூன்று வார காலத்திற்காவது கொழும்பு மாநகர சபை அதிகார பிரதேசத்தை மூட வேண்டும் என கொழும்பு மாநகர மேயர் ரோஷி சேனாநாயக்க கோரிக்கை விடுத்தார். 
  • பயணங்களுக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதையடுத்து இன்று (16)போக்குவரத்து நடவடிக்கைகள் வழமை போல் இடம்பெற்ற போதிலும் பஸ், ரயில் என்பனவற்றில் பயணிப்போரின் எண்ணிக்கை குறைந்த மட்டத்தில் காணப்பட்டுள்ளது 
  • உலகில் கொரோனா வைரஸ் பரவலுக்கு உள்ளாகியிருக்கும் 219 நாடுகள் மற்றும் பிராந்தியங்கள் தொடர்பான பட்டியலில் இலங்கை 99 ஆவது இடத்தில் பதிவு. 
  • இதுவரை கொழும்பு லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் மருத்துவர் உள்ளிட்ட 14 பணிக்குழாமினருக்கும் சிகிச்சை பெற்று வந்த 20 சிறார்களுக்கும் 12 தாய்மார்களுக்கும் கொவிட் தொற்றுறுதியானதாக அறிவிப்பு. 
  • கடந்த 14 நாட்களில் கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவிப்பு. 
  • தற்போது கொரோனா வைரஸ் பரவல் காரணமாக எந்தவொரு விற்பனை நடவடிக்கையும் இன்றி பூ வியாபாரிகளும் உற்பத்தியாளர்களும் பெரும் சோகத்தில் வாடியுள்ளதாக அவர்கள் தெரிவிப்பு. 
  • கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பாதிப்படைந்துள்ள துற்றுலாத்துறை சார்ந்த வாகன சாரதிகளுக்கு 15 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கும் வேலைத்திட்டத்தை விரைவுபடுத்துமாறு சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபைக்கு அறிவுறுத்தியுள்ளார். 
  • கொவிட்19 பரவல் காரணமாக பிற்போடப்பட்டிருந்த வழக்குகளுக்கு புதிய விசாரணைத் திகதிகளை வழங்க கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்மானம். 
  • போகம்பறை - பழைய சிறைச்சாலையில் அமைக்கப்பட்டுள்ள கொவிட் தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தை வேறொரு இடத்துக்கு மாற்ற வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்திடம் கோரியது. 
  • கொவிட்-19 பரவல் காரணமாக மூடப்பட்டுள்ள பேலியகொட மீன் சந்தையை மொத்த விற்பனைகளுக்காக இரண்டு வாரங்களுக்கு பின்னர் மீள திறப்பதற்கு எதிர்பார்க்கப்படுவதாக கடற்றொழில் அமைச்சு அறிவிப்பு. 
  • மீன் சாப்பிடுவதனால் கொரோனா வைரஸ் பரவும் என கூறமுடியாதென பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்தன ஹேரத் தெரிவிப்பு. 
  • கோட்டை மற்றும் புறக்கோட்டை பகுதிகளில் வர்த்தகங்களில் ஈடுபடுவதற்கு எவருக்கும் அனுமதியில்லை. வேறு பகுதிகளில் இருந்து மரக்கறிகள் கொண்டு வந்தால் அதனை நாராஹென்பிட்ட பொருளாதார மத்திய நிலையத்திற்கு கொண்டு செல்ல முடியும் என பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். 
  • மேலும் 3 கொரோனா மரணங்கள் அறிவிப்பு. 1) மொரட்டுவை பகுதி. 84 வயது பெண் ( வீட்டிலேயே உயிரிழப்பு) 2) கொழும்பு 10 ஐ சேர்ந்த 70 வயது ஆண் (ஐடிஎச் மருத்துவமனையில் உயிரிழப்பு) 3) கொழும்பு 13 , 75 வயது ஆண் (கொழும்பு தேசிய மருத்துவமனையில் உயிரிழப்பு) இத்துடன் மொத்த மரணம் 61 ஆக உயர்வு. 
  • இன்றைய தினம் மாத்திரம் 387 பேருக்கு கொரோனா உறுதியானது. அந்தவகையில் இலங்கையின் மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 17,674 ஆக அதிகரிப்பு.
  • Irumbuthirainews
திவுலபிடிய கொரோனா எதிரொலி: 16-11-2020 நடந்தவை... திவுலபிடிய கொரோனா எதிரொலி: 16-11-2020 நடந்தவை... Reviewed by irumbuthirai on November 17, 2020 Rating: 5

திவுலபிடிய கொரோனா எதிரொலி: 15-11-2020 நடந்தவை...

November 16, 2020

திவ்லபிடிய கொரோனா எதிரொலியாக 42ம் நாள் அதாவது ஞாயிற்றுக்கிழமை (15) நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள், அறிவிப்புக்கள் என்பவற்றை இங்கு தருகிறோம். 
  • சுகாதார நடைமுறைகளை பின்பற்றாது பயணிக்கும் பேருந்துகளை சுற்றிவளைக்கும் வேலைத்திட்டம் ஒன்றை அடுத்த வாரம் முதல் முன்னெடுக்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். ஏற்கனவே சுகாதார நடைமுறைகளை பின்பற்றாது பயணித்த 5 பேருந்துகளின் அனுமதிப்பத்திரத்தை இரத்து செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 
  • அனைத்து சிறைச்சாலை ஊழியர்களினதும் விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அதனடிப்படையில் நாளை காலை 8 மணிக்கு அவர்களை சம்பந்தப்பட்ட பிரிவுகளுக்கு சேவைக்கு வருமாறும் அறிவிப்பு. 
  • கொழும்பில் நாளை தனிமைப்படுத்தப்படவுள்ள பகுதிகளிலுள்ள BOI மற்றும் EDB நிறுவனங்கள், அரச அத்தியாவசிய சேவைகள் மற்றும் நீதிமன்ற அலுவல்கள் நாளை காலை முதல் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 
  • மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறுவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை இன்று நள்ளிரவு 12.00 மணியுடன் நீக்கவுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவிப்பு. 
  • பேலியகொடை மீன் சந்தையில் கொவிட் 19 தொற்றுறுதியானவர்கள் அடையாளம் காணப்பட்டதை அடுத்து மக்கள் கடல் உணவுகளை கொள்வனவு செய்யாமை காரணமாக ஒரு இலட்சத்து 30 ஆயிரம் கடற்றொழிலாளர்களின் குடும்பங்கள் பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளதாக தேசிய கடற்றொழில் உதவியாளர்கள் சங்கம் தெரிவிப்பு. 
  • கட்டார் மற்றும் குவைட் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் தங்கியிருந்த 128 இலங்கையர்கள் இன்று நாடு திரும்பினர். 
  • சிறைச்சாலைகளுடன் தொடர்புடைய கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 437 ஆக அதிகரிப்பு. 
  • இன்று (15) நள்ளிரவு முதல் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து சேவைகளை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக இ.போ.ச. தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவிப்பு. 
  • நாளை (15) முதல் ரயில் சேவைகளை வழமை போல முன்னெடுப்பதற்கு புகையிரத திணைக்களம் தீர்மானம். 
  • கொரோனா அச்சம் காரணமாக எதிர்வரும் டிசம்பர் 06ஆம் திகதி நடைபெற இருந்த தஹம் (அறநெறி) பாடசாலை ஆசிரியர் சான்றிதழுக்கான பரீட்சைகள் பிற்போடப்பட்டுள்ளதாக பௌத்த விவகார ஆணையாளர் தெரிவிப்பு. 
  • கொவிட்-19 காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் நிவாரணம் அந்தந்த அமைச்சுக்கள் மற்றும் மாவட்ட செயலகங்களின் ஊடாக தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக, அரசாங்க தகவல் திணைக்களம் அறிவிப்பு. 
  • கடந்த ஒக்டோபர் 4ம் திகதிக்குப் பின்னர் நேற்று வரையில் கொழும்பு மாவட்டத்தில் 5127 கொவிட் 19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிப்பு. அதாவது கொழும்பிலேயே அதிக நோயாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். 
  • கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் கொழும்பு துறைமுக செயற்பாடு தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுகிறது என இலங்கை துறைமுக அதிகாரசபை தெரிவிப்பு. 
  • மேலும் 5 கொரோனா மரணங்கள் அறிவிப்பு. 1) கொழும்பு – 13 ஜந்துபிட்டி பகுதியைச் சேர்ந்த 54 வயது ஆண் 2) கொழும்பு- 15 பகுதியைச் சேர்ந்த 39 வயது ஆண் 3) கொழும்பு-12 பகுதியை சேர்ந்த 88 வயது ஆண் 4) கொழும்பு - 8 பகுதியைச் சேர்ந்த 79 வயது ஆண் 5) கொழும்பு - 13 பகுதியைச் சேர்ந்த 88 வயது ஆண். இந்த நிலையில் இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 58ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 5 மரணங்கள் அறிவிக்கப்பட்ட 3ஆவது முறை இதுவாகும். 
  • இன்றைய தினம் மாத்திரம் 704 பேருக்கு கொரோனா உறுதியானது. அந்தவகையில் இலங்கையின் மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 17,287 ஆக அதிகரிப்பு.
  • Irumbuthirainews
திவுலபிடிய கொரோனா எதிரொலி: 15-11-2020 நடந்தவை... திவுலபிடிய கொரோனா எதிரொலி: 15-11-2020 நடந்தவை... Reviewed by irumbuthirai on November 16, 2020 Rating: 5

திவுலபிடிய கொரோனா எதிரொலி: 14-11-2020 நடந்தவை...

November 15, 2020

திவ்லபிடிய கொரோனா எதிரொலியாக 41ம் நாள் அதாவது சனிக்கிழமை (14) நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள், அறிவிப்புக்கள் என்பவற்றை இங்கு தருகிறோம். 
  • முன்னர் கம்பஹா மாவட்டத்தில் காணப்பட்ட அச்சுறுத்தல் மிகுந்த அவதான நிலைமை தற்போது கொழும்பு மாவட்டத்தில் காணப்படுகின்றது. கடந்த 5 நாட்களில் கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் 1083 கொவிட் நோயாளிகள் பதிவாகியுள்ள நிலையில் கொவிட் 19 பரவலால் கொழும்பு நகரம் பாரிய அச்சுறுத்தலை எதிர்க்கொண்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. 
  • கொரோனா தொற்றுக்குள்ளான சிறைக்கைதிகளின் எண்ணிக்கை 285 ஆக அதிகரிப்பு. 
  • கொரோனா மரணம் தொடர்பில் சமூக ஊடகங்கள் ஊடாக வதந்திகளை பரப்பிய 35 வயதுடைய கடுகண்ணாவ பகுதியை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். 
  • கொழும்பு மாவட்டத்தின் மருதானை, கொழும்பு கோட்டை, புறக் கோட்டை, கொம்பனித்தெரு மற்றும் டேம் வீதி ஆகிய பகுதிகள் எதிர்வரும் திங்கட்கிழமை காலை 5 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டதாக இராணுவத் தளபதி தெரிவிப்பு. மற்றும் எதிர்வரும் திங்கட்கிழமை (16) காலை 05 மணி முதல் களனி பொலிஸ் பிரிவுதனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிப்பு. தற்போதைய நிலையில், கம்பஹா மாவட்டத்தில் நீர்க்கொழும்பு, ஜா-எல, கடவத்தை, ராகம மற்றும் பேலியகொடை பொலிஸ் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், ஏனைய பகுதிகள் நாளை காலை 05 மணி முதல் தனிமைப்படுத்தல் நிலையில் இருந்து விடுவிக்கப்படும். இதேவேளை, கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளை தவிர நாட்டின் ஏனைய பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் பிரிவுகள் தனிமைப்படுத்தல் நிலையில் இருந்து நாளை (15) காலை 05 மணிக்கு விடுவிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார். 
  • கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை அடுத்து குருநாகல் அஞ்சல் கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் வடமேல் மாகாண தபால் கண்காணிப்பாளர் அலுவலகம் என்பன தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிப்பு. 
  • சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராய்ச்சியின் அறிவுறுத்தலுக்கமைய சுகாதார அமைச்சின் ஊடக பேச்சாளர் மருத்துவர் ஜயருவன் பண்டார அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என அறிவிப்பு. 
  • கொழும்பு துறைமுகத்தில் இதுவரை 61 பேர் கொவிட் 19 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாகவும் சுமார் 200 ஊழியர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் இலங்கை துறைமுக அதிகாரசபையின் தலைவர் ஓய்வு பெற்ற ஜெனரால் தயா ரத்னாயக்க தெரிவிப்பு. 
  • கொரோனா வைரஸ் பரவல் அபாய நிலை நீங்கும் வரையில், வீடுகளில் நிகழும் மரணம் தொடர்பில், கிராம சேவகரினால் அறிக்கை வழங்கப்படும்போது, குறித்த மரணம் கொரோனா தொற்றினால் ஏற்படவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனத் தெரிவிப்பு. 
  • யாசகர்கள் மூலமாக கொரோனா வைரஸ் பரவும் அபாயம் இருப்பதாக வெளியான தகவலைத் தொடர்ந்து, கொழும்பு நகரில் உள்ள மின் சமிக்ஞை விளக்குகளுக்கு அருகிலுள்ள யாசகர்களை கைது செய்வதற்கான விசேட நடவடிக்கையொன்றை பொலிஸார் முன்னெடுப்பு. 
  • ஊரகஸ்மங்சந்திய வடக்கு, ஊரகஸ்மங்சந்திய தெற்கு, யட்டகல மற்றும் வல்இங்குருகொடிய ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கரந்தெனிய சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் தெரிவிப்பு. 
  • இன்றைய தினம் மாத்திரம் 392 பேருக்கு கொரோனா உறுதியானது. அந்தவகையில் இலங்கையின் மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 16,583 ஆக அதிகரிப்பு.
  • Irumbuthirainews
திவுலபிடிய கொரோனா எதிரொலி: 14-11-2020 நடந்தவை... திவுலபிடிய கொரோனா எதிரொலி: 14-11-2020 நடந்தவை... Reviewed by irumbuthirai on November 15, 2020 Rating: 5

திவுலபிடிய கொரோனா எதிரொலி: 13-11-2020 நடந்தவை...

November 14, 2020

திவ்லபிடிய கொரோனா எதிரொலியாக 40ம் நாள் அதாவது வெள்ளிக்கிழமை (13) நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள், அறிவிப்புக்கள் என்பவற்றை இங்கு தருகிறோம். 
  • கொழும்பில் உள்ள மக்கள் குடியிருப்புகளில் தங்கியுள்ள நபர்கள் சுகாதார அமைச்சின் வழிகாட்டுதல்களை கடைப்பிடிக்காவிடின் பாரிய பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் எச்சரிக்கை விடுத்தனர். 
  • தனிமைப்படுத்தப்பட்டுள்ள வீடுகளில் வசிக்கும் கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகளுக்கு சென்று மருந்து விநியோகிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிப்பு. 
  • Covid-19 வைரஸ் தொற்று காரணமாக வீதியில் மரணித்திருப்பதாக தெரிவித்து போலியான உடல்களின் படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டோர் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவிப்பு. 
  • கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சிறைச்சாலை/ விளக்கமறியலில் இருந்து பாராளுமன்றத்திற்கு வரும் பாராளுமன்ற உறுப்பினர்களை நாடாளுமன்ற அமர்வுகளுக்காக அழைக்காமல் இருக்க நாடாளுமன்ற செயற்பாடுகள் தொடர்பான செயற்குழு தீர்மானித்துள்ளது. அந்தவகையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாத் பதியுதீன், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவனேசத்துரை சந்திரகாந்தன், இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர ஆகியோர் இன்றைய (13) பாராளுமன்ற அமர்வில் கலந்து கொள்ளவில்லை. 
  •  இலங்கையில் கொவிட் தொற்றினால் உயிரிழக்கின்ற முஸ்லிம்களின் உடல்களை தகனம் செய்யும் தீர்மானத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான அலுவலகம், அரசாங்கத்திடம் கோரியுள்ளது. 
  • வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்கள் அடுத்த வாரம் முதல் கட்டம் கட்டமாக நாட்டிற்கு அழைத்து வரப்படுவார்கள் என இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். 
  • இன்றும் உலங்கு வானூர்திகள் மற்றும் ட்ரோன் கமராக்களைப் பயன்படுத்தி முகத்துவாரம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டின் பேரில் 7 பேர் கைது செய்யப்பட்டனர். 
  • கொழும்பு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு இரு வார காலம் அவர்களது உத்தியோகபூர்வ இல்லங்களில் தங்கியிருக்குமாறு சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்தது. 
  • இதற்கு பின்னர் பதிவாகும் சிறைச்சாலை கொவிட் தொற்றாளர்களை கந்தகாடு அல்லது கல்லேல்ல சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு. 
  • தீபாவளி தினமாகிய நாளைய தினம் (14) மக்கள் ஆலயங்களில் ஒன்று கூடாதீர்கள் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் கோரிக்கை விடுத்தார். 
  • ஆலயங்களுக்குள் 5 பேருக்கு மேல் செல்ல அனுமதிக்க வேண்டாம் என இந்து கலாச்சார திணைக்களம் அறிவுப்பு.
  • ஹினிதும பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட 16 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். ஹினிதும பொலிஸ் அதிகாரிகளினால் கைது செய்யப்பட்ட 02 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 
  • கொவிட் 19 தொற்றாளர்களை இனங்காண்பதற்கான உடனடி ஆண்டிபயாடிக் சோதனை கருவிகள் இதுவரை அரசாங்கத்தினால் கொள்வனவு செய்யப்படவில்லை என இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன பாராளுமன்றத்தில் இன்று தெரிவிப்பு. 
  • தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி மேல் மாகாணத்தில் இருந்து வௌியேறும் நபர்களை தேடுவதற்காக பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரை ஈடுபடுத்தி விசேட நடைமுறையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவிப்பு. 
  • சிறைச்சாலைகளில் பரவிவரும் கொவிட்- 19 தொற்றை தொடர்ந்தும் பரவாமல் தடுப்பதற்காக சிறைச்சாலை அதிகாரிகள் உள்ளிட்ட 5 பேர் கொண்ட கொவிட் 19 தடுக்கும் குழுவொன்றை நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துசார உப்புல்தெனிய தெரிவிப்பு. 
  • மேலும் 05 கொரோனா மரணங்கள் அறிவிப்பு. (1) கொழும்பு – 14 பகுதியைச் சேர்ந்த 83 வயது பெண் (வீட்டில் உயிரிழப்பு) (2) சிலாபம் பகுதியைச் சேர்ந்த 68 வயது ஆண் (முல்லேரியா ஆதார வைத்தியசாலையில் உயிரிழப்பு) (3) இரத்மலானை பகுதியை சேர்ந்த 69 வயது ஆண் (வீட்டிலிருந்து வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும்போது உயிரிழப்பு) (4) கொழும்பு - 13 பகுதியைச் சேர்ந்த 78 வயது ஆண் (வீட்டில் உயிரிழப்பு) (5) கொழும்பு - 13 பகுதியைச் சேர்ந்த 64 வயது ஆண். (வீட்டில் உயிரிழப்பு) இந்த நிலையில் இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53ஆக அதிகரித்தது. 
  • இன்றைய தினம் மாத்திரம் 468 பேருக்கு கொரோனா உறுதியானது. அந்தவகையில் இலங்கையின் மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 16,191 ஆக அதிகரிப்பு.
  • Irumbuthirainews
திவுலபிடிய கொரோனா எதிரொலி: 13-11-2020 நடந்தவை... திவுலபிடிய கொரோனா எதிரொலி: 13-11-2020 நடந்தவை... Reviewed by irumbuthirai on November 14, 2020 Rating: 5

திவுலபிடிய கொரோனா எதிரொலி: 12-11-2020 நடந்தவை...

November 13, 2020

திவ்லபிடிய கொரோனா எதிரொலியாக 39ம் நாள் அதாவது வியாழக்கிழமை (12) நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள், அறிவிப்புக்கள் என்பவற்றை இங்கு தருகிறோம். 
  • மேல் மாகாணத்தில் பயணத் தடை விதிக்கப்பட்ட பின்னர் அங்கிருந்து வெளி மாவட்டங்களுக்கு சென்றவர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவர் என பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவிப்பு. ஆனால் அத்தியாவசிய பொருட்களை கொண்டுச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும் மேல் மாகாணத்திற்குள் பிரவேசிப்பதற்கான இயலுமை உள்ளது. குறிப்பாக எவரெனும் இன்றைய தினத்திற்குள் மேல் மாகாணத்தில் கடமைகளை நிறைவேற்றிக் கொண்டு மீண்டும் தமது பகுதிகளுக்கு செல்ல நினைத்தால் அது முடியாது. அவர்கள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரை மேல் மாகாணத்திற்குள் தங்கியிருந்து அதன் பின்னர் அவர்களின் இடங்களுக்கு செல்ல முடியும் எனவும் தெரிவித்தார். 
  • தங்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்பு இருப்பதாக தெரிவித்து உடனடியாக PCR பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறும் இல்லாவிடின் வேறு இடத்திற்கு மாற்றுமாரும் கோரி பழைய போகம்பர சிறைச்சாலையில் தனிமைப்படுத்தப்பட்ட கைதிகள் சிலர் கூரை மேல் ஏறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் கோரிக்கை நிறைவேற்றப்பட்டவுடன் ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது. 
  • டிரோன் கெமரா மூலம் கண்காணிக்கப்பட்டதை அடுத்து கொழும்பு, மோதர பகுதியில் வைத்து தனிமைப்படுத்தலை மீறிய 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 
  • வீட்டினுள் உயிரிழக்கும் எந்தவொரு நபரின் சடலமும் மரண பரிசோதகரின் அல்லது நீதவானின் பரிந்துரையின் பேரில்தான் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவிப்பு. 
  • தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வார இறுதியில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்படுமா? என ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர் அவ்வாறான ஏற்பாடுகள் ஏதும் இல்லை என கூறினார். பண்டிகை ஒன்று இருப்பதை அறிந்தும் நாம் அவ்வாறு செயற்பட போவதில்லை. நாட்டு மக்கள் எத்தகைய நிலைமைகள் இருந்த போதிலும் புத்திசாதூர்யமாக செயல்படுவார்கள் என்றும் ராணுவ தளபதி தெரிவித்தார். 
  • தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தின் போது கடைபிடிக்க வேண்டிய சுகாதார விதிமுறைகள் தொடர்பான வழிகாட்டலை சுகாதார அமைச்சு வெளியிட்டது. 
  • தொலைக்கல்வி முறையின் மூலம் மீள ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ள பாடசாலை தொலைக்கல்வி நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாமல் போகும் மாணவர்களுக்கு, பாடவிதானங்களுக்கு அமைய தயாரிக்கப்பட்ட பாடங்களை தமது பாடசாலைகள் ஊடாக பெற்றுக் கொள்ளும் முறை வகுக்கப்பட்டுள்ளதாக கல்வி மறுசீரமைப்பு, திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக்கல்வி மேம்பாடு இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த இவ்வாறு தெரிவித்தார். 
  • மினுவங்கொட மற்றும் பேலியகொட கொரோனா கொத்தணியில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 12,226 ஆக அதிகரிப்பு. 
  • கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழக்கின்ற முஸ்லிம்களின் சரீரத்தை புதைப்பதற்கு அனுமதிகோருவது, அடிப்படைவாதம் ஆகும் என்றும், அதற்கு அனுமதிவழங்கப்படக்கூடாது என்றும் அகில இலங்கை இந்து சம்மேளனம் என்ற அமைப்பின் தலைவர் நாரா டி அருள்காந்த் தெரிவிப்பு. 
  • எதிர்வரும் 14 ஆம் மற்றும் 15 ஆம் திகதிகளில் அனைத்து பயணிகள் புகையிரத சேவைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவிப்பு. அத்துடன் மீண்டும் எதிர்வரும் 16 ஆம் திகதி முதல் அலுவலக மற்றும் ஏனைய புகையிரத சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் எனவும் அறிவிப்பு. 
  • காலி - பூசா சிறைச்சாலையில் கைதிகள் மூவருக்கு கொரோனா தொற்றுறுதி. இதற்கமைய சிறைச்சாலைகளில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 158 ஆக அதிகரிப்பு. 
  • பத்தரமுல்லை பகுதியில் யாசகர் ஒருவருக்கு கொரோனா. அத்துடன் குறித்த யாசகருடன், தொடர்புகளை பேணிய 8 பேர் நிட்டம்புவ தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 
  • மேலும் இரு கொரோனா மரணங்கள் அறிவிப்பு. (1) கொழும்பு-12, 54 வயது ஆண். (முல்லேரியா ஆதார வைத்தியசாலையில் உயிரிழப்பு) (2) மீகொட பகுதி. 45 வயது ஆண். (முல்லேரியா ஆதார வைத்தியசாலையில் உயிரிழப்பு) இத்துடன் மொத்த மரணம் 48 ஆக அதிகரிப்பு. 
  • இன்றைய தினம் மாத்திரம் 373 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. நாட்டின் மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 15,723ஆக அதிகரிப்பு.
  • Irumbuthirainews
திவுலபிடிய கொரோனா எதிரொலி: 12-11-2020 நடந்தவை... திவுலபிடிய கொரோனா எதிரொலி: 12-11-2020 நடந்தவை... Reviewed by irumbuthirai on November 13, 2020 Rating: 5

திவுலபிடிய கொரோனா எதிரொலி: 11-11-2020 நடந்தவை...

November 12, 2020

திவ்லபிடிய கொரோனா எதிரொலியாக 38ம் நாள் அதாவது புதன்கிழமை (11) நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள், அறிவிப்புக்கள் என்பவற்றை இங்கு தருகிறோம். 
  • கொழும்பு மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் உள்ளவர்களுக்கு திடீர் சுகயீனம் ஏற்பட்டால் 0113 422 558 என்ற இலக்கத்திற்கு அழைப்பு விடுத்து அம்பியுலன்ஸ் சேவையை பெற்று கொள்ள முடியும் என பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவிப்பு. 
  • கண்டி மாவட்டத்தில் மாத்திரம் இதுவரை 63 கொவிட் 19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கண்டி மாவட்ட செயலாளர் சந்தன தென்னகோன் தெரிவிப்பு. 
  • பயன்படுத்திய முகக்கவசம் உள்ளிட்ட கழிவு பொருட்களை எவ்வாறு அகற்ற வேண்டும்? என்ற வழிகாட்டல்களை மத்திய சுற்றாடல் அதிகார சபை அறிவித்தது. 
  • ஜனாதிபதியின் உத்தரவுக்கமைய உடன் அமுலுக்கு வரும் வகையில் மேல் மாகாணத்தில் உள்ளவர்கள் வேறு மாகாணங்களுக்கு பயணிக்க தடை விதிக்கப்பட்டது. எதிர்வரும் 15 ஆம் திகதி நள்ளிரவு 12 மணி வரையில் இந்த பயணத்தடை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது. மேல் மாகாணத்தில் அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுவதன் காரணமாக, இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. 
  • கம்பஹா மாநகர சபையின் உறுப்பினர் ஒருவருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிப்பு. இவர் கடந்த சில தினங்களாக பிரதேசங்களில் சிலவற்றில் அமைந்துள்ள விகாரைகளில் பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டுள்ள அதேவேளை அரசாங்கத்தினால் பொதுமக்களுக்கு பெற்றுக் கொடுக்கப்படும் 5 ஆயிரம் கொடுப்பனவை பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. 
  • பயணிகளுக்கான பேருந்து கட்டணங்கள் இன்று முதல் அதிகரிப்பு. 
  • இலங்கையில் உள்ள கட்டுமான நிறுவனம் ஒன்றில் சேவையாற்றும் 14 இந்திய நாட்டு பிரஜைகள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிப்பு. காலி முகத்திடலுக்கு அருகில் கட்டுமான பணியில் ஈடுபட்டு வரும் குழுவினரே இவ்வாறு கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படது. 
  • அதிகரிக்கப்பட்டுள்ள பேருந்து கட்டணத்திற்கு சமாந்திரமாக இலங்கை போக்குவரத்து சபையும் பேருந்து கட்டணத்தை அதிகரிக்க இ.போ.ச. தீர்மானித்துள்ளதாக அறிவிப்பு. ஆனால் பேருந்து கட்டணம் அதிகரிக்கப்பட்டாலும் தொடருந்து கட்டணத்தில் எந்த மாற்றமும் ஏற்படுத்தப்படமாட்டாது என புகையிரத திணைக்களம் தெரிவிப்பு. 
  • இன்று (11) இரவு 10 மணி தொடக்கம் எதிர்வரும் 15ஆம் திகதி வரை மேல்மாகாணத்திற்கு உள்நுழைவதற்கு தொடருந்துகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தாலும், மேல்மாகாணத்தில் இருந்து வெளியேறுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக புதையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, பிற்பகல் வேளைகளில் மேல்மாகாணத்தில் இருந்து வெளிச்செல்லும் தொடருந்து சேவைகள் அலுத்கம, அம்பேபுஸ்ஸ, கொச்சிகடை மற்றும் அவிசாவளை வரை மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் புகையிரத திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
  • மேல் மாகாணத்திலிருந்து வௌியேறும் மற்றும் மேல் மாகாணத்திற்குள் பிரவேசிக்கும் அனைத்து பேருந்து சேவைகளும் எதிர்வரும் 15 ஆம் திகதி நள்ளிரவு 12 மணி வரை இடைநிறுத்தப்படுவதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவிப்பு. 
  • கொழும்பு மெனிங் சந்தை மூடப்பட்டமையால் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டுள்ள மரக்கறி வியாபாரிகளுக்கு தங்களது உற்பத்திகளை விற்பனை செய்து கொள்ளும் பொருட்டு பேலியகொட பிரதேசத்தில் புதிய இடமொன்றை ஒதுக்கீடு செய்வது தொடர்பில் அரசாங்கம் நடவடிக்கை. 
  • சைனா ஹார்பர் இன்ஜினியரிங் (China Harbor Engineering) நிறுவனத்தின் ஊடாக கொழும்பு 13 பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டம் ஒன்றில் பணியாற்றும் சீன பிரஜைகள் நால்வருக்கும் மற்றும் இந்நாட்டு ஊழியர்கள் இருவருக்கும் கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் கொழும்பு துறைமுக நகர் (Port city) கட்டுமான பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கட்டிடமொன்றில் தங்கியிருந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. 
  • இன்று 5 கொரோனா மரணங்கள் அறிவிப்பு. (1) பாணந்துரை பிரதேசம். 80 வயது ஆண். (பொலிஸ் வைத்தியசாலையில் உயிரிழப்பு) (2) கொழும்பு-11. 40 வயது ஆண். (கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உயிரிழப்பு) (3) களனி பிரதேசம். 45 வயது ஆண் (அம்பாந்தோட்டை மாவட்ட வைத்தியசாலையில் உயிரிழப்பு) (4) மாளிகாவத்தை பகுதி. 68 வயது பெண். (வீட்டில் உயிரிழப்பு) (5) இம்புல்கொட பகுதி. 63 வயது ஆண். (அபேக்ஷா புற்றுநோய் வைத்தியசாலையில் உயிரிழப்பு) 
  • இன்றைய தினத்தில் மாத்திரம் 635 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
  • Irumbuthirainews
திவுலபிடிய கொரோனா எதிரொலி: 11-11-2020 நடந்தவை... திவுலபிடிய கொரோனா எதிரொலி: 11-11-2020 நடந்தவை... Reviewed by irumbuthirai on November 12, 2020 Rating: 5

திவுலபிடிய கொரோனா எதிரொலி: 10-11-2020 நடந்தவை...

November 11, 2020

திவ்லபிடிய கொரோனா எதிரொலியாக 37ம் நாள் அதாவது செவ்வாய்க்கிழமை (10) நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள், அறிவிப்புக்கள் என்பவற்றை இங்கு தருகிறோம். 
  • சீனிக்கான மொத்த விற்பனை விலை அடங்கிய வர்த்தமானி வெளியானது. பொதி செய்யப்பட்ட வெள்ளை சீனி கிலோ ரூ. 90, பொதி செய்யப்படாத வெள்ளை சீனி கிலோ 85 ரூபா, இறக்குமதி செய்யப்படும் வெள்ளை சீனி கிலோ 80 ரூபாவாகவும் நிர்ணயித்து அந்த வர்த்தமானி வெளியிடப்பட்டது. 
  • ஆசன எண்ணிக்கைக்கு அமையவே பயணிகளை ஏற்ற வேண்டும் என்பதால் இன்று நள்ளிரவு முதல் பேரூந்து கட்டணங்கள் அதிகரிப்பு. குறைந்த கட்டணம் 12 ரூபாவில் இருந்து 14 ரூபாவாக அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஏனையவை 20% அதிகரிப்பு. 
  • 4 % வட்டி கடன் திட்டத்தில் கடன் பெற்றோர் அதனை திருப்பி செலுத்துவதற்காக அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட சலுகைக்காலமானது 9 மாதங்களாக நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
  • கொரோனா தொற்றால் உயிரிழப்போரின் உடல்களை அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்குவது தொடர்பில் இதுவரை தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்தது. 
  • திருகோணமலை மாவட்டத்தில் மேலும் இரண்டு வைத்தியர்களுக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது. ஏற்கனவே திருகோணமலை பொது வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவருக்கு கொவிட் 19 தொற்றுறதியாகியிருந்தது. 
  • தனிமைபடுத்தபட்ட காரணத்தால் மாவனெல்லை பிரதேச சபையின் அமர்வுகளை இன்று முதல் 7 நாட்களுக்கு நடத்த தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 
  • கொவிட் 19 பரவல் ஆரம்பத்தின் போது, பயணிகள் பேருந்து இயக்குனர்களிடம் இருந்து அறவிடப்படும் கட்டணத்தை விடுவிக்க எடுத்த தீர்மானத்தை இந்த வருடம் இறுதி வரையில் செயற்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அறிவிப்பு. 
  • மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் பிரதான காரியாலயம் ஊடாக வழங்கப்படும் சேவைகள் நாளை முதல் யாழ்ப்பாணம், ஹம்பாந்தோட்டை, அநுராதபுரம், குருநாகல், மற்றும் கம்பஹா மாவட்டங்களின் காரியாலயங்கள் ஊடாக பெற்றுக்கொடுப்பதற்கான வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு. 
  • மேல் மாகாணத்தில் கொவிட் 19 தொற்றுறுதியான காவல்துறை உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை 260 ஆக அதிகரித்துள்ளது. 
  • மதுகம சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் ஊழியர் ஒருவருக்கும் கொவிட் 19 தொற்று ஏற்பட்டுள்ளது. 
  • மஸ்கெலியா காட்மோர் தோட்டத்தில் – பிரொக்மோர் பிரிவில் 12 வயதுடைய மாணவியொருவருக்கு கொரோனா தொற்றியுள்ளது. 
  • இதுவரையில் 460 பொலிஸ் அதிகாரிகள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
  • Covid-19 நோய்த்தொற்றுகளை அடையாளம் காண இலங்கையில் ரெபிட் என்டிஜென் டெஸ்ட் கிட்டை பயன்படுத்த சுகாதார அமைச்சின் தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழு இன்று அனுமதி வழங்கியுள்ளது.
  • இன்று 05 கொரோனா மரணங்கள் அறிவிப்பு. 1) ராஜகிரிய முதியோர் இல்லத்தில் வசித்தவர். 51 வயது ஆண். (கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உயிரிழப்பு) 2) கொழும்பு-10, 45 வயது ஆண். (கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உயிரிழப்பு) 3) கம்பஹா, உடுகம்பல பிரதேசம். 63 வயது பெண். (கம்பஹா மாவட்ட வைத்தியசாலையில் உயிரிழப்பு) 4) 55-60 வயது மதிக்கத்தக்க ஆண். பிரேத பரிசோதனையில் தொற்று உறுதியானது. (இவர் தொடர்பான வேறு எந்த தகவலையும் அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிடவில்லை) 5) ராகம பிரதேசம். 48 வயது ஆண். (வீட்டில் உயிரிழப்பு) இத்துடன் மொத்த கொரோனா மரணங்கள் 41 ஆக அதிகரிப்பு. 
  • இன்றைய தினத்தில் மாத்திரம் 430 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
  • Irumbuthirainews
திவுலபிடிய கொரோனா எதிரொலி: 10-11-2020 நடந்தவை... திவுலபிடிய கொரோனா எதிரொலி: 10-11-2020 நடந்தவை... Reviewed by irumbuthirai on November 11, 2020 Rating: 5

திவுலபிடிய கொரோனா எதிரொலி: 09-11-2020 நடந்தவை...

November 11, 2020

திவ்லபிடிய கொரோனா எதிரொலியாக 36ம் நாள் அதாவது திங்கட்கிழமை (09) நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள், அறிவிப்புக்கள் என்பவற்றை இங்கு தருகிறோம். 
  • கொரோனாவினால் மரணிக்கும் முஸ்லிம்ககளின் உடல்களை, நல்லடக்கம் செய்ய, சுகாதார அமைச்சு அனுமதி வழங்கியுள்ளதாக பரவலாக செய்திகள் வெளியாகின. அதாவது நாட்டின் எந்தப் பகுதியில், முஸ்லிம்கள் கொரோனாவால் மரணித்தாலும், அவர்களின் உடல்களை நல்லடக்கம் செய்ய மன்னார் மாவட்டத்தில் ஒரு பகுதியை தேர்ந்தெடுக்குமாறும், இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானித்ததாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்ததாக அந்த செய்திகள் தெரிவித்தன. 
  • குருணாகலை மாநகர எல்லை பிரதேசத்திற்குள் இலிப்பு கெதர கிராம உத்தியோகத்தர் பிரிவு மற்றும் கடவீதிய கிராம உத்தியோகத்தர் பிரிவு ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் இரண்டை தவிர குருணாகலை மாநகர எல்லை பிரதேசத்திற்குள் ஏனைய பகுதிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் குளியாப்பிட்டிய பொலிஸ் வலயத்திற்குள் கலகெதர, ஹம்மலவ மற்றும் இகல கலுகோமுவ, ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் மூன்றைத் தவிர குளியாப்பிட்டி பொலிஸ் வலயத்தில் ஏனைய பிரதேசங்களும் தனிமைப்படுத்தல் நிலையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் ராணுவ தளபதி தெரிவித்துள்ளார். 
  • கம்பஹா மாவட்டத்தின் கந்தானை மற்றும் மஹாபாகே பொலிஸ் பிரிவுகள் மற்றும் அங்குலான பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அங்குலான வடக்கு மற்றும் அங்குலான தெற்கு கிராம சேவகர் பிரிவுகள் என்பன உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக ராணுவ தளபதி அறிவித்துள்ளார். 
  • கொவிட் - 19 தொற்று நிலைமைக்கு மத்தியில் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை மாற்று வழிமுறைகளை பயன்படுத்தி தொடர்ச்சியாக முன்னெடுப்பது தொடர்பாக கல்வி சீர்திருத்தங்கள், திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக்கல்வி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சு வெளியிட்ட அறிக்கையில், குறிப்பாக பகல் வேளையில் ஆரம்ப பிரிவில் தரம் 3, 4 மற்றும் 5 தரத்துக்கான முக்கிய பாடங்களும், தரம் 6 தொடக்கம் 11 வரையிலுமான முக்கிய பாடங்களும், உயர்தர வகுப்புக்களில் அனைத்து பாடங்களுக்குமான முக்கிய பாடங்களுக்காகவும் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் ஒளிபரப்புக்களை 2020.11.15 திகதி தொடக்கம் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
  • வெலிகட மற்றும் போகம்பர சிறைச்சாலைகளில் மேலும் 107 கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார். 90 பெண் கைதிகள் மற்றும் 17 ஆண் கைதிகளுமே இவ்வாறு கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர். 
  • பேலியகொட மீன் சந்தையில் இருந்து மீன் எடுத்துச் சென்று அம்பலாங்கொட பகுதியில் விற்பனை செய்த மீன் வியாபாரி உட்பட அவரது குடும்ப உறுப்பினர்கள் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த தொற்றாளர்கள் கடந்த போயா தினம் திலகபுர உதயகிரி விகாரையில் இடம்பெற்ற மத நிகழ்வில் கலந்து கொண்டதை அடுத்து விகாராதிபதி விகாரையினுள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். 
  • கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளின் எண்ணிக்கையை குறைப்பது தொடர்பான நீதி அமைச்சரின் கோரிக்கைக்கு அமைய சிறைச்சாலைகளில் பிணை வழங்க முடியுமான கைதிகளுக்கு பிணை வழங்குமாறும் ஏனைய சந்தேக நபர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யுமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பாளர் அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன தெரிவித்துள்ளார். 
  • மேல் மாகாணம் உட்பட கொரோனா வைரஸ் வேகமாக பரவும் அபாய வலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் இருந்து மலையக பெருந்தோட்டப் பகுதிகளுக்கு இன்று (09) வருகை தந்த வாகனங்களும், அதில் பயணித்தவர்களும் திருப்பியனுப்பட்டனர். 
  • நோய் அறிகுறிகள் தென்படாத கொரோனா தொற்றுக்குள்ளானவரின் மூலம் வைரஸ் பரவும் ஆபத்து நிலை உயர் மட்டத்தில் காணப்படுவதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. 
  • கொவிட் தொற்றாளர்களை விரைவாக அடையாளம் காண்பதற்காக பயன்படுத்தப்படும் ´உடனடி ஆண்டிபயாடிக் சோதனை கருவிகள்´ ஒரு இலட்சம் உலக சுகாதார அமைப்பினால் இந்நாட்டிற்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளதாக மருந்து உற்பத்தி, விநியோகம் மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்தார். 
  • மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, 42 அலுவலக ரயில்கள் இன்று தொடக்கம் சேவையில் ஈடுபடுத்தப்படுவதாக ரயில்வே பொது முகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ தெரிவித்தார். 
  • கொழும்பு மத்திய தபால் பரிமாறல் கடமைகள் சில இன்று மீண்டும் ஆரம்பம். 
  • கடுவெலை மாநகர சபையின் சாரதி ஒருவருக்கு கொரோனா தொற்று இன்று உறுதியாகியுள்ளது. 
  • நீர் கட்டணத்தை வழங்க வருபரை சந்திப்பது அல்லது உரையாடுவதை குறைத்துக்கொள்ளுமாறும், நீர் கட்டணம் தொடர்பில் பிரச்சினைகள் காணப்பட்டால் நீர் கட்டணத்தில் உள்ள தொலை பேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. 
  • குறைந்த எண்ணிக்கையிலான பயணிகள் மாத்திரமே பொது போக்குவரத்தில் ஈடுபடுகின்றமையினால் பேருந்து கட்டணத்தை அதிகரிக்கப்போவதாக பேருந்து உரிமையாளர்களின் சங்கங்கள் அறிவித்த போதிலும் பேருந்து கட்டணத்தை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட மாட்டாது என போக்குவரத்து அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார். 
  • 36வது கொரோனா மரணம் பதிவு. கந்தானை பிரதேசம். 84 வயது பெண். (தனியார் வைத்தியசாலையிலிருந்து IDHக்கு மாற்றும் பொழுது உயிரிழப்பு) 
  • இன்றைய தினம் 356 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியானது.
  • Irumbuthirainews
திவுலபிடிய கொரோனா எதிரொலி: 09-11-2020 நடந்தவை... திவுலபிடிய கொரோனா எதிரொலி: 09-11-2020 நடந்தவை... Reviewed by irumbuthirai on November 11, 2020 Rating: 5

திவுலபிடிய கொரோனா எதிரொலி: 08-11-2020 நடந்தவை...

November 11, 2020

திவ்லபிடிய கொரோனா எதிரொலியாக 35ம் நாள் அதாவது ஞாயிற்றுக்கிழமை (08) நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள், அறிவிப்புக்கள் என்பவற்றை இங்கு தருகிறோம். 
  • நாளை (9) காலை 5:00 மணியுடன் மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச்சட்டம் நீக்கப்படுவதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். இதேவேளை தனிமைப்படுத்தல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்ட பிரதேசங்களை இங்கு தருகிறோம். கொழும்பு மாவட்டம்: மோதர, மட்டக்குளி ,புளூமெண்டல், மாளிகாவத்த, பொரள்ள, தெமடகொட, கொட்டாஞ்சேனை, வெல்லம்பிட்டிய, கிரான்பாஸ், ஆட்டுப்பட்டி தெரு, வாழைத்தோட்டம் மற்றும் கரையோர பொலிஸ் பிரிவுகள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இதேவேளை மட்டக்குளியின் மெத்சந்த செவன, மிஹிஜயசெவன, முகத்துவாரத்தின் ரண்மின செவன, தெமட்டகொடையின் சிறிசந்த உயன, மாளிகாவத்தையின் தேசிய வீடமைப்புத் திட்டம் போன்ற தொடர்மாடிகளில் இருந்து எவரும் வெளிச் செல்லவோ, அல்லது உட்பிரவேசிப்பதற்கோ அனுமதியில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. கம்பஹா மாவட்டம்: வத்தளை, பேலியகொடை, கடவத்தை, ராகம, நீர்கொழும்பு, பமுனுகம, ஜா-எல, சபுகஸ்கந்தை ஆகிய பொலிஸ் அதிகார பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. களுத்துறை மாவட்டம்: ஹொரண மற்றும் இங்கிரிய பொலிஸ் பிரிவுகளும் வேகட கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. குருநாகல் மாவட்டம்: குருணாகலை மாநகர சபைக்கு உட்பட்ட பிரதேசம், குளியாப்பிட்டிய பகுதிகளும் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும். கேகாலை மாவட்டம்: மாவனெல்ல, ருவான்வெல்ல பகுதிகளும் தனிமைப்படுத்தப்பட்ட இடங்களாகவே பேணப்படும் எனவும் இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்கள் ஊடாக போக்குவரத்து மேற்கொள்ள முடியும் எனவும் தனிமைப்படுத்தப்படுத்தல் பகுதிகளில் இருந்து எவரையும் வாகனத்தில் ஏற்றவோ இறக்கவோ முடியாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
  • 35 ஆவது கொரோனா மரணம் அறிவிக்கப்பட்டது. 78 வயதான நபர். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழப்பு. பிரேதபரிசோதனையில் அவருக்கு கொவிட்19 தொற்று இருந்தமை உறுதியானது. அவர் எந்த இடத்தை சேர்ந்தவர் என்பது குறித்த விபரங்கள் எவையும் அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை. 
  • நாளைய தினம் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டாலும் அரச நிறுவனங்களில் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் மாத்திரமே சேவையாட்களை இணைத்துக்கொள்ள முடியும் என பொது நிர்வாக அமைச்சு தெரிவிப்பு. 
  • தூர சேவை பேருந்து சேவைகள் நாளை முதல் ஆரம்பமாகவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவிப்பு. 
  • டெங்கு நோயும் கொரோனா நோயும் உறுதிசெய்யப்பட்ட 29 வயது இளைஞர் ஒருவர் நீர்கொழும்பு வைத்தியசாலையிலிருந் IDH ற்கு மாற்றம். 
  • கொவிட் -19 சோதனை முடிவுகளை விரைவாக வழங்கக்கூடிய ஆன்டிஜென் அடிப்படையிலான கொரோனா வைரஸ் சோதனைக் கருவிளின் நிலை தொடர்பிலான ஆராய்ச்சிகள் இன்று அல்லது நாளைய தினம் நிறைவடையும் என எதிர்ப்பார்ப்பதாக தேசிய தொற்று நோயியல் பிரிவின் தலைவர் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவிப்பு. 
  • மேல் மாகாணத்திற்கு உட்பட்ட அனைத்து அதிவேக நெடுஞ்சாலைகளும் நாளை முதல் மீண்டும் திறக்கப்படவுள்ளதாக தெரிவிப்பு. 
  • வெலிக்கடை சிறைச்சாலையில் மேலும் 72 பேருக்கு கொரோனா தொற்று உறுதி. 
  • தனிமைப்படுத்திய பகுதிகளுக்குள் அத்தியாவசிய சேவைகள், இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை (EDB) மற்றும் இலங்கை முதலீட்டுச் சபை (BOI) ஊழியர்கள் மாத்திரம் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிப்பு. 
  • இன்றைய தினம் 510 பேருக்கு கொரோனா உறுதி.
  • Irumbuthirainews
திவுலபிடிய கொரோனா எதிரொலி: 08-11-2020 நடந்தவை... திவுலபிடிய கொரோனா எதிரொலி: 08-11-2020 நடந்தவை... Reviewed by irumbuthirai on November 11, 2020 Rating: 5

திவுலபிடிய கொரோனா எதிரொலி: 07-11-2020 நடந்தவை...

November 08, 2020

திவ்லபிடிய கொரோனா எதிரொலியாக 34ம் நாள் அதாவது சனிக்கிழமை (07) நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள், அறிவிப்புக்கள் என்பவற்றை இங்கு தருகிறோம். 
  • சஹரான் ஹஷீமின் மனைவியும் வெலிக்கட சிறையில் கொவிட் 19 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி தற்போது வெலிக்கட மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. 
  • மீகொடை ஆயர்வேத வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது. பேலியகொட கொரோனா கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என்ற அடிப்படையில் குறித்த வைத்தியர் அண்மையில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தார். 
  • போகம்பர சிறைச்சாலையின் 7 கைதிகளுக்கு கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
  • கொவிட்-19 தொற்றாளர்களை அடையாளம் காண்பதற்கு மேற்கொள்ளப்படும் பி.சீ.ஆர் பரிசோதனைகளுக்காக, நாளாந்தம் 6 கோடி ரூபாவுக்கும் அதிக தொகை செலவிடப்படுவதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. ஒருவருக்கு 6 ஆயிரம் ரூபா செலவாகுவதாகவும் தெரிவித்துள்ளது. 
  • தனிமைப்படுத்தல் மத்திய நிலைங்களுக்கு அனுப்பப்படுபவர்களுக்கு கொரோன தொற்றுக்கான அறிகுறிகள் இல்லாவிட்டால் அவர்கள் PCR பரிசோதனையின்றி 14 நாட்களுக்குள் மீண்டும் வீட்டிற்கு அனுப்பப்படுவார்கள் என தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டது. 
  • கொரோனா தொற்றுக்குள்ளான கர்ப்பிணி தாய்மார்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக இடம் கொழும்பு கிழக்கு வைத்தியசாலையில் நிறுவப்பட்டுள்ளதாகவும் இதுவரையில் 80 இற்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக வைத்தியர் மயுரமான்ன தெவொரகே தெரிவித்துள்ளார். 
  • கிழக்கு மாகாணத்தில் கொவிட்19 தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 100ஆக அதிகரிப்பு. 
  • காலி-கரந்தெனிய மாவட்ட மருத்துவமனையும் இன்று முதல் Covid-19 தொற்றாளர்களுக்கு சிகிச்சை வழங்கும் மத்திய நிலையமாக மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டது. 
  • 5,600 இற்கும் அதிகமான ஊழியர்கள் பணியாற்றும் ஹொரணை குறுகொட ஆடைத் தொழிற்சாலையில் பதிவான கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 159 ஆக அதிகரிப்பு. 
  • தீபாவளி பண்டிகையின்போது சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறு நாட்டிலுள்ள சகல இந்து மக்களிடமும் சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் வைத்தியர் எஸ்.சிறிதரன் கோரிக்கை விடுத்தார். 
  • கொவிட் தொற்றுக்குள்ளான பேலியகொடை மீன் சந்தை தொகுதியின் அலுவலக ஊழியர்கள் நான்கு பேர் இன்று (07) பொலன்னறுவை மின்னேரியா பிரதேசத்தில் வைத்து கண்டு பிடிக்கப்பட்டனர். 
  • இன்று அறிவிக்கப்பட்ட 4 கொரோனா மரணங்களின் விபரம்: 1) கொழும்பு 10 மாளிகாவத்தை, 42 வயது பெண் (வீட்டில் உயிரிழப்பு) 2) கொழும்பு 10 மாளிகாவத்தை, 69 வயது பெண் (கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உயிரிழப்பு) 3) வெல்லம்பிட்டி, 67 வயது ஆண் (வீட்டில் உயிரிழப்பு) 4) கனேமுல்லை, 88 வயது பெண் (IDH வைத்தியசாலையில் உயிரிழப்பு) இத்துடன் கொரோனா மரணங்கள் 34 ஆக அதிகரிப்பு. 
  • இன்றைய தினம் 449 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானது.
  • Irumbuthirainews
திவுலபிடிய கொரோனா எதிரொலி: 07-11-2020 நடந்தவை... திவுலபிடிய கொரோனா எதிரொலி: 07-11-2020 நடந்தவை... Reviewed by irumbuthirai on November 08, 2020 Rating: 5
Powered by Blogger.