திவுலபிடிய கொரோனா எதிரொலி: 07-11-2020 நடந்தவை...


திவ்லபிடிய கொரோனா எதிரொலியாக 34ம் நாள் அதாவது சனிக்கிழமை (07) நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள், அறிவிப்புக்கள் என்பவற்றை இங்கு தருகிறோம். 
  • சஹரான் ஹஷீமின் மனைவியும் வெலிக்கட சிறையில் கொவிட் 19 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி தற்போது வெலிக்கட மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. 
  • மீகொடை ஆயர்வேத வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது. பேலியகொட கொரோனா கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என்ற அடிப்படையில் குறித்த வைத்தியர் அண்மையில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தார். 
  • போகம்பர சிறைச்சாலையின் 7 கைதிகளுக்கு கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
  • கொவிட்-19 தொற்றாளர்களை அடையாளம் காண்பதற்கு மேற்கொள்ளப்படும் பி.சீ.ஆர் பரிசோதனைகளுக்காக, நாளாந்தம் 6 கோடி ரூபாவுக்கும் அதிக தொகை செலவிடப்படுவதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. ஒருவருக்கு 6 ஆயிரம் ரூபா செலவாகுவதாகவும் தெரிவித்துள்ளது. 
  • தனிமைப்படுத்தல் மத்திய நிலைங்களுக்கு அனுப்பப்படுபவர்களுக்கு கொரோன தொற்றுக்கான அறிகுறிகள் இல்லாவிட்டால் அவர்கள் PCR பரிசோதனையின்றி 14 நாட்களுக்குள் மீண்டும் வீட்டிற்கு அனுப்பப்படுவார்கள் என தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டது. 
  • கொரோனா தொற்றுக்குள்ளான கர்ப்பிணி தாய்மார்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக இடம் கொழும்பு கிழக்கு வைத்தியசாலையில் நிறுவப்பட்டுள்ளதாகவும் இதுவரையில் 80 இற்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக வைத்தியர் மயுரமான்ன தெவொரகே தெரிவித்துள்ளார். 
  • கிழக்கு மாகாணத்தில் கொவிட்19 தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 100ஆக அதிகரிப்பு. 
  • காலி-கரந்தெனிய மாவட்ட மருத்துவமனையும் இன்று முதல் Covid-19 தொற்றாளர்களுக்கு சிகிச்சை வழங்கும் மத்திய நிலையமாக மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டது. 
  • 5,600 இற்கும் அதிகமான ஊழியர்கள் பணியாற்றும் ஹொரணை குறுகொட ஆடைத் தொழிற்சாலையில் பதிவான கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 159 ஆக அதிகரிப்பு. 
  • தீபாவளி பண்டிகையின்போது சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறு நாட்டிலுள்ள சகல இந்து மக்களிடமும் சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் வைத்தியர் எஸ்.சிறிதரன் கோரிக்கை விடுத்தார். 
  • கொவிட் தொற்றுக்குள்ளான பேலியகொடை மீன் சந்தை தொகுதியின் அலுவலக ஊழியர்கள் நான்கு பேர் இன்று (07) பொலன்னறுவை மின்னேரியா பிரதேசத்தில் வைத்து கண்டு பிடிக்கப்பட்டனர். 
  • இன்று அறிவிக்கப்பட்ட 4 கொரோனா மரணங்களின் விபரம்: 1) கொழும்பு 10 மாளிகாவத்தை, 42 வயது பெண் (வீட்டில் உயிரிழப்பு) 2) கொழும்பு 10 மாளிகாவத்தை, 69 வயது பெண் (கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உயிரிழப்பு) 3) வெல்லம்பிட்டி, 67 வயது ஆண் (வீட்டில் உயிரிழப்பு) 4) கனேமுல்லை, 88 வயது பெண் (IDH வைத்தியசாலையில் உயிரிழப்பு) இத்துடன் கொரோனா மரணங்கள் 34 ஆக அதிகரிப்பு. 
  • இன்றைய தினம் 449 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானது.
  • Irumbuthirainews
திவுலபிடிய கொரோனா எதிரொலி: 07-11-2020 நடந்தவை... திவுலபிடிய கொரோனா எதிரொலி: 07-11-2020 நடந்தவை... Reviewed by irumbuthirai on November 08, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.