திவ்லபிடிய கொரோனா எதிரொலியாக 35ம் நாள் அதாவது ஞாயிற்றுக்கிழமை (08) நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள், அறிவிப்புக்கள் என்பவற்றை இங்கு தருகிறோம்.
- நாளை (9) காலை 5:00 மணியுடன் மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச்சட்டம் நீக்கப்படுவதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். இதேவேளை தனிமைப்படுத்தல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்ட பிரதேசங்களை இங்கு தருகிறோம். கொழும்பு மாவட்டம்: மோதர, மட்டக்குளி ,புளூமெண்டல், மாளிகாவத்த, பொரள்ள, தெமடகொட, கொட்டாஞ்சேனை, வெல்லம்பிட்டிய, கிரான்பாஸ், ஆட்டுப்பட்டி தெரு, வாழைத்தோட்டம் மற்றும் கரையோர பொலிஸ் பிரிவுகள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இதேவேளை மட்டக்குளியின் மெத்சந்த செவன, மிஹிஜயசெவன, முகத்துவாரத்தின் ரண்மின செவன, தெமட்டகொடையின் சிறிசந்த உயன, மாளிகாவத்தையின் தேசிய வீடமைப்புத் திட்டம் போன்ற தொடர்மாடிகளில் இருந்து எவரும் வெளிச் செல்லவோ, அல்லது உட்பிரவேசிப்பதற்கோ அனுமதியில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. கம்பஹா மாவட்டம்: வத்தளை, பேலியகொடை, கடவத்தை, ராகம, நீர்கொழும்பு, பமுனுகம, ஜா-எல, சபுகஸ்கந்தை ஆகிய பொலிஸ் அதிகார பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. களுத்துறை மாவட்டம்: ஹொரண மற்றும் இங்கிரிய பொலிஸ் பிரிவுகளும் வேகட கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. குருநாகல் மாவட்டம்: குருணாகலை மாநகர சபைக்கு உட்பட்ட பிரதேசம், குளியாப்பிட்டிய பகுதிகளும் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும். கேகாலை மாவட்டம்: மாவனெல்ல, ருவான்வெல்ல பகுதிகளும் தனிமைப்படுத்தப்பட்ட இடங்களாகவே பேணப்படும் எனவும் இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்கள் ஊடாக போக்குவரத்து மேற்கொள்ள முடியும் எனவும் தனிமைப்படுத்தப்படுத்தல் பகுதிகளில் இருந்து எவரையும் வாகனத்தில் ஏற்றவோ இறக்கவோ முடியாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
- 35 ஆவது கொரோனா மரணம் அறிவிக்கப்பட்டது. 78 வயதான நபர். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழப்பு. பிரேதபரிசோதனையில் அவருக்கு கொவிட்19 தொற்று இருந்தமை உறுதியானது. அவர் எந்த இடத்தை சேர்ந்தவர் என்பது குறித்த விபரங்கள் எவையும் அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை.
- நாளைய தினம் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டாலும் அரச நிறுவனங்களில் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் மாத்திரமே சேவையாட்களை இணைத்துக்கொள்ள முடியும் என பொது நிர்வாக அமைச்சு தெரிவிப்பு.
- தூர சேவை பேருந்து சேவைகள் நாளை முதல் ஆரம்பமாகவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவிப்பு.
- டெங்கு நோயும் கொரோனா நோயும் உறுதிசெய்யப்பட்ட 29 வயது இளைஞர் ஒருவர் நீர்கொழும்பு வைத்தியசாலையிலிருந் IDH ற்கு மாற்றம்.
- கொவிட் -19 சோதனை முடிவுகளை விரைவாக வழங்கக்கூடிய ஆன்டிஜென் அடிப்படையிலான கொரோனா வைரஸ் சோதனைக் கருவிளின் நிலை தொடர்பிலான ஆராய்ச்சிகள் இன்று அல்லது நாளைய தினம் நிறைவடையும் என எதிர்ப்பார்ப்பதாக தேசிய தொற்று நோயியல் பிரிவின் தலைவர் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவிப்பு.
- மேல் மாகாணத்திற்கு உட்பட்ட அனைத்து அதிவேக நெடுஞ்சாலைகளும் நாளை முதல் மீண்டும் திறக்கப்படவுள்ளதாக தெரிவிப்பு.
- வெலிக்கடை சிறைச்சாலையில் மேலும் 72 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.
- தனிமைப்படுத்திய பகுதிகளுக்குள் அத்தியாவசிய சேவைகள், இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை (EDB) மற்றும் இலங்கை முதலீட்டுச் சபை (BOI) ஊழியர்கள் மாத்திரம் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிப்பு.
- இன்றைய தினம் 510 பேருக்கு கொரோனா உறுதி.
- Irumbuthirainews
திவுலபிடிய கொரோனா எதிரொலி: 08-11-2020 நடந்தவை...
Reviewed by irumbuthirai
on
November 11, 2020
Rating:
Reviewed by irumbuthirai
on
November 11, 2020
Rating:

No comments: