நாளை (9) காலை 5:00 மணியுடன் மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச்சட்டம் நீக்கப்படுவதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
இதேவேளை தனிமைப்படுத்தல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்ட பிரதேசங்களை இங்கு தருகிறோம்.
கொழும்பு மாவட்டம்: மோதர, மட்டக்குளி ,புளூமெண்டல், மாளிகாவத்த, பொரள்ள, தெமடகொட, கொட்டாஞ்சேனை, வெல்லம்பிட்டிய, கிரான்பாஸ், ஆட்டுப்பட்டி தெரு, வாழைத்தோட்டம் மற்றும் கரையோர பொலிஸ் பிரிவுகள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை மட்டக்குளியின் மெத்சந்த செவன, மிஹிஜயசெவன, முகத்துவாரத்தின் ரண்மின செவன, தெமட்டகொடையின் சிறிசந்த உயன, மாளிகாவத்தையின் தேசிய வீடமைப்புத் திட்டம் போன்ற தொடர்மாடிகளில் இருந்து எவரும் வெளிச் செல்லவோ, அல்லது உட்பிரவேசிப்பதற்கோ அனுமதியில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
கம்பஹா மாவட்டம்: வத்தளை, பேலியகொடை, கடவத்தை, ராகம, நீர்கொழும்பு, பமுனுகம, ஜா-எல, சபுகஸ்கந்தை ஆகிய பொலிஸ் அதிகார பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
களுத்துறை மாவட்டம்: ஹொரண மற்றும் இங்கிரிய பொலிஸ் பிரிவுகளும் வேகட கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
குருநாகல் மாவட்டம்: குருணாகலை மாநகர சபைக்கு உட்பட்ட பிரதேசம், குளியாப்பிட்டிய பகுதிகளும் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும்.
கேகாலை மாவட்டம்: மாவனெல்ல, ருவான்வெல்ல பகுதிகளும் தனிமைப்படுத்தப்பட்ட இடங்களாகவே பேணப்படும் எனவும் இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்கள் ஊடாக போக்குவரத்து மேற்கொள்ள முடியும் எனவும் தனிமைப்படுத்தப்படுத்தல் பகுதிகளில் இருந்து எவரையும் வாகனத்தில் ஏற்றவோ இறக்கவோ முடியாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் மற்றும் தொடர்மாடிகள் தொடர்பான விபரம்..
Reviewed by irumbuthirai
on
November 08, 2020
Rating:
Reviewed by irumbuthirai
on
November 08, 2020
Rating:

No comments: