திவுலபிடிய கொரோனா எதிரொலி: 17-11-2020 நடந்தவை...


திவ்லபிடிய கொரோனா எதிரொலியாக 44ம் நாள் அதாவது செவ்வாய்க்கிழமை (17) நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள், அறிவிப்புக்கள் என்பவற்றை இங்கு தருகிறோம். 
  • பேராதனை பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பிரிவு அதிகாரி ஒருவருக்கு கொவிட் தொற்று உறுதி. அதன்படி, இந்நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளான பொலிஸ் அதிகாரிகளின் எண்ணிக்கை 785 ஆக அதிகரித்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவிப்பு. 
  • முழு உலகையும் பாதித்துள்ளது கொரோனா தொற்று காலத்தில் மனதில் நேர்மறையான எண்ணங்களை (Positive thoughts) ஏற்படுத்திக் கொள்வதன் ஊடாக அதனை வெற்றிகொள்ள முடியும் என பிரபல தொழிலதிபர் தம்மிக பெரேரா தெரிவித்துள்ளார். 
  • சிறைச்சாலைகளிலிருந்து இனங்காணப்பட்ட மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 506 அதிகரித்துள்ளது. 
  • ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பாக விசேட பேச்சுவார்த்தை நாளை நடைபெறவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இம்மாதம் 23ஆம் திகதி பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது பற்றி, ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் இதன்போது மீளாய்வு செய்யப்படவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார். 
  • வைரஸ் தொற்று பரவலைத் தடுப்பதற்காக பயன்படுத்தப்படும் ட்ரோன்கள் வீடுகளில் தேடுதல்களை நடத்தவில்லை. வைரஸ் தொற்று மக்கள் மத்தியில் பரவாதிருப்பதற்கும் , தொற்றுக்குள்ளானவர்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதற்குமாகவே இது பயன்படுத்தப்படுகிறது. இது தனி மனித உரிமையை மீறும் செயற்பாடல்ல என்று வெகுஜன ஊடக அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். 
  • கொரோனா தொற்றுறுதியானவர்கள் வீதிகளில் உயிரிழப்பதாக சமூக வலைத்தளங்களில் வெளியான தகவல் உண்மைக்கு புறம்பான செய்தி என்பதோடு ஜப்பான் மற்றும் அவுஸ்ரேலியாவிலுள்ள இருவரால் திட்டமிட்டு பரப்பப்பட்டுள்ளமை தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவிப்பு. 
  • நாட்டில் எந்த பிரதேசத்தில் இருந்தாலும், எந்தப் பகுதியில் நடமாடினாலும், அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டியது கட்டாயமானதாகும் என்பதோடு கடந்த 30 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளியை பேணாமை என்பன தொடர்பில் 290 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவிப்பு. 
  • சிகிச்சை பெறுவதற்காக கொழும்பு லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 11 வயது சிறுமிக்கு கொவிட்-19 தொற்றுறுதியானது. 
  • கடந்த 2 வாரகாலங்களுக்குள் சிறைச்சாலைகளில் இருந்து பிணையில் விடுவிக்கப்பட்டவர்கள் பி.சி.ஆர் பரசோதனை மேற்கொள்ள வேண்டும் என காலி மாவட்ட பிரதேச தொற்று நோய் விஞ்ஞான பிரிவின் விசேட வைத்தியர் கே. சிங்காராச்சி கோரிக்கை விடுத்துள்ளார். 
  • இதுவரை கொழும்பு ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் பணி புரியும் 05 வைத்தியர்கள் உள்ளிட்ட 15 ஊழியர்களுக்கு கொவிட் 19 வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் தெரிவிப்பு. 
  • மேலும் 05 கொரோனா மரணங்கள் அறிவிப்பு. 1) கொழும்பு – 10 பகுதியைச் சேர்ந்த 65 வயது ஆண் 2) இரத்மலானை பகுதியைச் சேர்ந்த 69 வயது பெண் 3) கிருலப்பனை பகுதியை சேர்ந்த 71 வயது பெண் 4) கொழும்பு-2 பகுதியைச் சேர்ந்த 81 வயது பெண் 5) தெமடகொட பகுதியைச் சேர்ந்த 82 வயது ஆண். இத்துடன் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 66ஆக அதிகரித்துள்ளது. 
  • இன்றைய தினம் மாத்திரம் 401 பேருக்கு கொரோனா உறுதியானது. அந்தவகையில் இலங்கையின் மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 18,075 ஆக அதிகரிப்பு.
  • Irumbuthirainews
திவுலபிடிய கொரோனா எதிரொலி: 17-11-2020 நடந்தவை... திவுலபிடிய கொரோனா எதிரொலி: 17-11-2020 நடந்தவை... Reviewed by irumbuthirai on November 18, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.