பல நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ள ஆமை இனம் இலங்கையில் கண்டுபிடிப்பு!


சிவப்பு நிற மார்பை கொண்டுள்ள ஆமை இனம் ஒன்று இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 
இந்த ஆமை இனம் அமெரிக்காவிலிருந்து மீன் இறக்குமதியாளர்களால் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டிருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது. 
குறித்த ஆமை இனம் சுற்றுச் சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் 
உலகின் பல நாடுகள் இதைத் தடை செய்துள்ளன. இந்த ஆமை இனம் நாட்டில் உள்ள பூர்வீக தாவரங்களுக்கும் விலங்கினங்களுக்கும் தீங்கு ஏற்படுத்துமென விலங்கு ஆராய்ச்சி அதிகாரிகள் சுட்டிக் காட்டியுள்ளனர். 
குறித்த ஆமை இனம் நாட்டினுள் மேலும் பரவுவதைத் தடுக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு முதலைகள் மற்றும் நீர்வாழ் உயிரினங்கள் தொடர்பான ஆய்வாளரான கலாநிதி என்சலம்டி சில்வா, வன விலங்கு திணைக்களத்திடம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பல நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ள ஆமை இனம் இலங்கையில் கண்டுபிடிப்பு! பல நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ள ஆமை இனம் இலங்கையில் கண்டுபிடிப்பு! Reviewed by irumbuthirai on April 15, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.