பொருத்தமற்ற முன்பள்ளி ஆசிரியைகள்: அரசின் நிலைப்பாடு..



போதிய கல்வி, பயிற்சியற்ற ஆரம்ப பாடசாலை ஆசிரியர்கள் 3 தொடக்கம் 5 வயதிற்குட்ட மாணவர்களின் வளர்ச்சிக்கு பொருத்தமற்ற கற்பித்தல் செயற்பாடுகளில் ஈடுபடுவதாக தெரியவந்துள்ளதையடுத்து அது தொடர்பான தேசிய கொள்கையை உருவாக்க அரசு தீர்மானித்துள்ளது. இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை தீர்மானம் பின்வருமாறு...

  மாணவர்களின் ஆரம்ப பராயத்தை அபிவிருத்தி செய்வதற்கு ஆரம்ப பாடசாலையின் மூலம் உயர்வான பங்களிப்பை வழங்க முடியும் என்பது அடையளம் காணப்பட்டுள்ளது. இதேபோன்று சில ஆரம்ப பாடசாலை ஆசிரியர்கள் ஃ மகளிர் தொழில் ரீதியிலான திறமை அல்லது போதுமான கல்வி தகுதியை கொண்டிருக்கவில்லை என்பது அவதானிக்கப்பட்டுள்ளது.
இதற்கு மேலதிகமாக பயிற்சி அற்ற ஆரம்ப பாடசாலை ஆசிரியர்கள் 3 தொடக்கம் 5 வயதிற்குட்ட மாணவர்களின் வளர்ச்சிக்கு பொருத்தமற்ற கற்பித்தல் செயற்பாடுகளில் ஈடுபடுவதாக தெரியவந்துள்ளது. இந்த அனைத்து விடயங்களையும் கவனத்தில் கொண்டு புத்திஜீவிகள், அதிகாரிகள் மற்றும் ஆர்வங்கொண்டுள்ள தரப்பினர்களின் கருத்துக்களை பெற்றுக்கொண்ட பின்னர் முறையாக முன்னெடுக்கப்படவுள்ள ஆரம்ப பாடசாலை கல்வி தொடர்பான தேசிய கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்காக கல்வி அமைச்சர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
(அ.த.தி.)
பொருத்தமற்ற முன்பள்ளி ஆசிரியைகள்: அரசின் நிலைப்பாடு.. பொருத்தமற்ற முன்பள்ளி ஆசிரியைகள்: அரசின் நிலைப்பாடு.. Reviewed by irumbuthirai on January 04, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.