பல்கலைக்கழக கல்லூரியாக மாறும் அச்சுத் திணைக்களம்...



பல்கலைக்கழகத்திற்கு தகுதிபெற்ற போதிலும் உயர் கல்வியைத்தொடரமுடியாத மாணவர்களுக்காக 2020 ஆம் ஆண்டில் 100 பல்கலைக்கழக கல்லுரிகள் University College அமைக்கப்படும் என்று தகவல் தொடர்பாடல் தொழிநுட்பம் உயர்கல்வி, தொழிநுட்ப புத்தாக்க அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான அமைச்சர் பந்துல குணவர்த்தன.தெரிவித்தார். இதற்கமைவாக அரசாங்௧ அச்சுத் திணைக்௧ளம் பல்கலைக்கழக கல்லுரியாக மாற்றியமைக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார். இதற்குத்தேவையான வளங்கள் அங்கிருப்பதினால் இதற்கான பணியை அரசாங்கத்தின் 100 நாள்


வேலைத்திட்டத்தில் பூர்த்திச் செய்ய எதிர்பார்த்திருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார். 
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (31) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவித்த அமைச்சர், பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படும் மாணவர் எண்ணிக்கையை 25 சதவீதத்தால் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அடுத்தாண்டில் இரண்டு குழுக்களாக மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படுவார்கள் என்றும் தெரிவித்த அமைச்சர் கடந்த வருடம் தகுதிபெற்றிருந்தும் பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படாதவர்கள் இந்த குழுவில் இடம்பெறுவார்கள் என்றும் மேலும் தெரிவித்தார்.
(அ.த.தி)

பல்கலைக்கழக கல்லூரியாக மாறும் அச்சுத் திணைக்களம்... பல்கலைக்கழக கல்லூரியாக மாறும் அச்சுத் திணைக்களம்... Reviewed by irumbuthirai on January 01, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.