Results for circulars

Revised Circular: 05 Years Leave for Government servants (Circular in Three Languages)

September 11, 2022

Public Administration Circular: 14/ 2022(1). 

Topic: Granting Leave with no pay to be spent in or out of the Island to public officers without causing any prejudice to the seniority and pension. 
 
To view and download Circulars in Tamil, English and Sinhala languages are given below.

அரச ஊழியர்களுக்கு உள்நாட்டில் அல்லது வெளிநாட்டிலோ தொழில் புரிவதற்காக சம்பளமற்ற விடுமுறை 5 வருடங்களுக்கு வழங்குவது தொடர்பாக பொது நிர்வாக அமைச்சால் ஏற்கனவே 22-6-2022 திகதியிடப்பட்டு வெளியிடப்பட்ட 14/2022 இலக்கம் கொண்ட சுற்றறிக்கைக்கு மேலதிகமாக, திருத்தங்கள் செய்யப்பட்ட 14/ 2022(1) இலக்கம் கொண்ட சுற்றறிக்கையே இதுவாகும். 

இதனை தமிழ், ஆங்கிலம் மற்றும் சிங்கள மொழிகளிலும் கீழே காணலாம்.

Revised Circular: 05 Years Leave for Government servants (Circular in Three Languages) Revised Circular: 05 Years Leave for Government servants (Circular in Three Languages) Reviewed by Irumbu Thirai News on September 11, 2022 Rating: 5

Circular Letter: Declaring a National Day of Mourning/ தேசிய துக்க தினத்தை பிரகடனம் செய்தல்

September 10, 2022


எதிர்வரும் 19 திகதியை தேசிய துக்க தினமாக பிரகடனம் செய்தல் தொடர்பான சுற்றறிக்கை கடிதம்.

Tamil Circular Letter 

English Circular Letter

Sinhala Circular Letter 

Circular Letter: Declaring a National Day of Mourning/ தேசிய துக்க தினத்தை பிரகடனம் செய்தல் Circular Letter: Declaring a National Day of Mourning/ தேசிய துக்க தினத்தை பிரகடனம் செய்தல் Reviewed by Irumbu Thirai News on September 10, 2022 Rating: 5

Circular Letter: Half - Masting of National Flag (Death of Queen Elizabeth 11)

September 10, 2022


The president Ranil Wickramasinghe has announced that the national flag will be flown at half - mast today onwards. 

 

2ம் எலிசபெத் மகாராணியின் மறைவையொட்டி தேசிய கொடியை அறைக் கம்பத்தில் பறக்க விடுதல் தொடர்பான சுற்றறிக்கை கடிதம்.

 

Circular Letter: Half - Masting of National Flag (Death of Queen Elizabeth 11) Circular Letter: Half - Masting of National Flag (Death of Queen Elizabeth 11) Reviewed by Irumbu Thirai News on September 10, 2022 Rating: 5

Circular Letter: Replying to the Letters, E-Mails and Telephone Call Received from the Public

September 10, 2022

Public Administration Circular Letter: 02/2022. 
 
Circular Name: Replying to the Letters, E-Mails and Telephone Call Received from the Public. 
 
அரசாங்க நிறுவனங்களுக்கு பொதுமக்களிடமிருந்து வரும் கடிதங்கள், மின்னஞ்சல்கள் (E-mails) மற்றும் தொலைபேசி அழைப்புக்களுக்கு பதிலளித்தல் தொடர்பாக பொது நிர்வாக அமைச்சால் வெளியிடப்பட்ட 02/2022 இலக்கம் கொண்ட சுற்றறிக்கை கடிதத்தை மூன்று மொழிகளிலும் இங்கு தருகிறோம்.
 
Circular Letter: Replying to the Letters, E-Mails and Telephone Call Received from the Public Circular Letter: Replying to the Letters, E-Mails and Telephone Call Received from the Public Reviewed by Irumbu Thirai News on September 10, 2022 Rating: 5

ஆசிரியர்களின் தற்காலிக இணைப்பை மீண்டும் நடைமுறைப்படுத்தல்: வெளியானது அறிவித்தல்! (குறித்த அறிவித்தல் இணைப்பு)

September 01, 2022


போக்குவரத்து பிரச்சினை காரணமாக தற்காலிக இடமாற்றம் பெற்ற ஆசிரியர்களின் இடமாற்றத்தை இரத்து செய்து 30-08-2022 திகதியிடப்பட்ட அறிவித்தல் கடிதம் கல்வி அமைச்சின் செயலாளரால் வெளியிடப்பட்டது. 

இந்த அறிவித்தலை ரத்து செய்து ஏற்கனவே உள்ளபடி 31-12-2022 அன்று வரை இந்த தற்காலிக இணைப்பை நடைமுறைப்படுத்துமாறு அதிபர் ஆசிரியர் சங்கங்கள் இன்றைய தினம் கல்வி அமைச்சரை சந்தித்து கோரிக்கை விடுத்தன. 
அந்த வகையில் ரத்து செய்யப்பட்ட தற்காலிக இணைப்பை மீண்டும் நடைமுறைப்படுத்தும் வகையில் அறிவித்தல் தற்போது மீண்டும் கல்வி அமைச்சால் வெளியிடப்பட்டுள்ளது.

அதாவது அந்த அறிவித்தலின் பிரகாரம் குறித்த பாடசாலையின் அதிபர் அனுமதித்தால் 31-12-2022 வரை தற்காலிக இணைப்பில் இருக்கலாம். 

மேலும் 31-08-2022 திகதிக்கு பின்னர் புதிய தற்காலிக இணைப்பு வழங்கப்படக்கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குறித்த அறிவித்தலை கீழே காணலாம்.


தொடர்புடைய செய்திகள்:


ஆசிரியர்களின் தற்காலிக இணைப்பை மீண்டும் நடைமுறைப்படுத்தல்: வெளியானது அறிவித்தல்! (குறித்த அறிவித்தல் இணைப்பு) ஆசிரியர்களின் தற்காலிக இணைப்பை மீண்டும் நடைமுறைப்படுத்தல்: வெளியானது அறிவித்தல்! (குறித்த அறிவித்தல் இணைப்பு) Reviewed by Irumbu Thirai News on September 01, 2022 Rating: 5

உடன் அமுலுக்கு வரும் வகையில் ஆசிரியர்களின் தற்காலிக இடமாற்றம் ரத்து (சுற்றறிக்கை இணைப்பு)

August 31, 2022


போக்குவரத்து பிரச்சினை காரணமாக எதிர்வரும் டிசம்பர் 31 ஆம் தேதி வரை ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட தற்காலிக இடமாற்றம் உடன் அமலுக்கு வரும் வகையில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

அந்த வகையில் நாளை(1) முதல் தமது நிரந்தர பாடசாலைக்கு சமூகமளிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குறித்த சுற்றறிக்கை கடிதத்தை கீழே காணலாம்.



உடன் அமுலுக்கு வரும் வகையில் ஆசிரியர்களின் தற்காலிக இடமாற்றம் ரத்து (சுற்றறிக்கை இணைப்பு) உடன் அமுலுக்கு வரும் வகையில் ஆசிரியர்களின் தற்காலிக இடமாற்றம் ரத்து (சுற்றறிக்கை இணைப்பு) Reviewed by Irumbu Thirai News on August 31, 2022 Rating: 5

அரச ஊழியர்களின் கொரோனா கால விடுமுறைகள் மற்றும் கொடுப்பணவுகளைக் கணக்கிடும் முறை (மும்மொழிகளிலும் சுற்றறிக்கை இணைப்பு)

August 31, 2022


 
கொரோனா காலத்தில் (2020-03-13 ற்கு பின்) அரச உழியர்களின் லீவுகள் மற்றும் கொடுப்பணவுகள் தொடர்பில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக பொது நிர்வாக அமைச்சு சற்றறிக்கை வெளியிட்டுள்ளது. 
 
குறித்த சுற்றறிக்கையை மும்மொழிகளிலும் கீழே காணலாம்.
 
 
Related:
 
அரச ஊழியர்களின் கொரோனா கால விடுமுறைகள் மற்றும் கொடுப்பணவுகளைக் கணக்கிடும் முறை (மும்மொழிகளிலும் சுற்றறிக்கை இணைப்பு) அரச ஊழியர்களின் கொரோனா கால விடுமுறைகள் மற்றும் கொடுப்பணவுகளைக் கணக்கிடும் முறை (மும்மொழிகளிலும் சுற்றறிக்கை இணைப்பு) Reviewed by Irumbu Thirai News on August 31, 2022 Rating: 5

வெளிநாடு செல்லும் அரச ஊழியர்கள் பற்றிய தகவல் கோருதல்

August 24, 2022


"2022-06-22 ஆந் திகதிய பொது நிர்வாக சுற்றறிக்கை 14/2022 படி வெளிநாடு செல்லும் உத்தியோகத்தர்கள் பற்றிய தகவல் கோருதல்" என்ற தலைப்பில் 10-08-2022 அன்று பொது நிர்வாக அமைச்சின் செயலாளரினால் கடிதம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

குறித்து அறிவித்தலை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.

Calling Information Details 


வெளிநாடு செல்லும் அரச ஊழியர்கள் பற்றிய தகவல் கோருதல் வெளிநாடு செல்லும் அரச ஊழியர்கள் பற்றிய தகவல் கோருதல் Reviewed by Irumbu Thirai News on August 24, 2022 Rating: 5

அரச ஊழியர்கள் நாளை முதல் வழமைபோன்று பணியில்... வெளியானது சுற்றறிக்கை!

August 23, 2022


நாளை(24) முதல் சகல அரச ஊழியர்களும் வழமைபோன்று பணிக்கு திரும்ப வேண்டும் என திறைசேரியின் செயலாளரினால் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 

சகல அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் அரச நிறுவன தலைவர்களுக்கும் முகவரியிடப்பட்டு இந்த சுற்றறிக்கை வெளியாகியுள்ளது. 

குறித்த சுற்றறிக்கையை கீழே காணலாம்.





அரச ஊழியர்கள் நாளை முதல் வழமைபோன்று பணியில்... வெளியானது சுற்றறிக்கை! அரச ஊழியர்கள் நாளை முதல் வழமைபோன்று பணியில்... வெளியானது சுற்றறிக்கை! Reviewed by Irumbu Thirai News on August 23, 2022 Rating: 5

இணைந்த சேவைகளிலுள்ள அலுவலர்களின் வருடாந்த இடமாற்றங்கள் - 2023

August 03, 2022

 


 

இணைந்த சேவைகளிலுள்ள அலுவலர்களின் வருடாந்த இடமாற்றங்கள் - 2023 

குறித்த விடயம் தொடர்பான சுற்றுநிருபத்தை 01-08-2022 அன்று பொது நிர்வாக அமைச்சு வெளியிட்டுள்ளது. மேலும் குறித்த இடமாற்றங்கள் 02-01-2023 முதல் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

 

குறித்த சுற்றறிக்கையைக் கீழே காணலாம்.

 

இணைந்த சேவைகளிலுள்ள அலுவலர்களின் வருடாந்த இடமாற்றங்கள் - 2023 இணைந்த சேவைகளிலுள்ள அலுவலர்களின் வருடாந்த இடமாற்றங்கள் - 2023 Reviewed by Irumbu Thirai News on August 03, 2022 Rating: 5

New Circular: Restricting the Calling of To Government Offices (Tamil/ English/ Sinhala)

July 24, 2022


Circular: Restricting the Calling of To Government Offices. 

Circular No: 16/ 2022 (11) 

Date: 24-07-2022. 

அரச அலுவலகங்களுக்கு உத்தியோகத்தர்களை அழைப்பதை மட்டுப்படுத்தல் என்ற தலைப்பிலான அரச நிர்வாக சுற்றறிக்கையை இன்றைய தினம் (24) பொது நிர்வாக அமைச்சு வெளியிட்டுள்ளது. 

இது தொடர்பாக ஏற்கனவே வெளியான சுற்றறிக்கையில் கூறப்பட்ட விடயங்கள் இன்றிலிருந்து மேலும் ஒரு மாதத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது. 

எவ்வாறாயினும் சுற்றறிக்கையை தவறாக பயன்படுத்தி பணிக்கு சமுகமளிக்க முடியுமானவர்களும் சமூகமளிக்காத நிலை ஏற்பட இடமளிக்க கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

22-07-2022 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்களுக்கு அமைய இந்த சுற்றுநிருபம் வெளியிடப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil Circular:



English Circular:


Sinhala Circular:




Download Circular - 16/2022 (11): 




New Circular: Restricting the Calling of To Government Offices (Tamil/ English/ Sinhala) New Circular: Restricting the Calling of To Government Offices (Tamil/ English/ Sinhala) Reviewed by Irumbu Thirai News on July 24, 2022 Rating: 5

Annual Teacher Transfer - 2023 (Central Province) / வருடாந்த ஆசிரியர் இடமாற்றம் - 2023 (மத்திய மாகாணம்)

July 08, 2022

Applications are invited to a annual Teacher Transfer in the Central Province for 2023. 
 
மத்திய மாகாணத்திற்குட்பட்ட பாடசாலைகளில் சேவை புரியும் ஆசிரியர்களிடமிருந்து 2023 ஆம் வருடத்திற்கான ஆசிரியர் சேவை இடமாற்றங்களுக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. 
 
வலயத்தினுள் இடமாற்றம் மற்றும் வலயங்களுக்கிடையிலான இடமாற்றங்களுக்கு இணையதளத்தின் ஊடாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். 

மாகாணங்களுக்கிடையிலான இடமாற்றம் மற்றும் தேசிய பாடசாலைக்கான இடமாற்றம் என்பவற்றிற்கு மத்திய மாகாண கல்வி திணைக்களத்தினால் அறிமுகப்படுத்தியுள்ள புதிய விண்ணப்ப படிவத்தை மட்டுமே பயன்படுத்தவும். இதை வலயக் கல்வி காரியாலயங்களில் பெறலாம். 
 
சப்பிரகமுவ மாகாணத்திலும் ஆசிரியர் இடமாற்றத்திற்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. அதன் விபரம் மற்றும் விண்ணப்பத்தை கீழுள்ள லிங்கில் சென்று பார்வையிடலாம்.
 
 
வேறு மாகாணத்தின் மாகாண பாடசாலைகளுக்கு செல்வதாயின் 5 விண்ணப்பங்களும் மாகாண பாடசாலையிலிருந்து தேசிய பாடசாலைக்கு செல்வதாயின் 5 விண்ணப்பங்களும் சமர்ப்பிக்க வேண்டும். 
 
தேவை கருதியும் நியமன கடிதத்தின் நிபந்தனைகள் பூர்த்தி செய்வதற்காகவும் வேறு கல்வி வலயத்தில் உள்ள கஷ்ட பிரதேச பாடசாலைக்கு தங்களை பதவியில் அமர்த்த முடியும். 
 
ஒழுக்காற்று நடவடிக்கை காரணமாக இடமாற்றம் பெற்ற ஆசிரியர்கள் இடமாற்றம் தொடர்பாக விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள். 
 
வேறு மாகாணத்திற்கு இடமாற்றம் கோருவதாயின் மத்திய மாகாணத்தில் குறைந்தபட்சம் 5 வருடங்கள் சேவையை பூர்த்தி செய்திருத்தலுடன் நிரந்தரமாக்கப்பட்டிருத்தலும் அவசியமாகும். 
 
விண்ணப்ப முடிவு திகதி: 30-07-2022. 
 
Online விண்ணப்பத்திற்கு கீழ் உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
இது தொடர்பான பத்திரிகை அறிவித்தலை கீழே காணலாம். 
 

Annual Teacher Transfer - 2023 (Central Province) / வருடாந்த ஆசிரியர் இடமாற்றம் - 2023 (மத்திய மாகாணம்) Annual Teacher Transfer - 2023 (Central Province) / வருடாந்த ஆசிரியர் இடமாற்றம் - 2023 (மத்திய மாகாணம்) Reviewed by Irumbu Thirai News on July 08, 2022 Rating: 5

அரச ஊழியர்கள் வெளிநாடு செல்ல சம்பளமற்ற விடுமுறை! (மும்மொழிகளிலும் சுற்றறிக்கை இணைப்பு)

June 22, 2022

அரச ஊழியர்கள் வெளிநாடு செல்வது தொடர்பான சுற்றறிக்கையை பொது நிர்வாக அமைச்சு இன்றைய தினம் (22) வெளியிட்டுள்ளது. 14/2022  இலக்கம் கொண்ட குறித்த சுற்றறிக்கை "சேவை மூப்பு மற்றும் ஓய்வூதியத்திற்கு பாதிப்பில்லாத வகையில் அரச உத்தியோகத்தர்களுக்கு உள்நாட்டு / வெளிநாட்டு சம்பளமற்ற லீவு வழங்குதல்" என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ளது.

வெளிநாடு செல்ல அல்லது வெளிநாட்டு நிறுவனம் ஒன்றில் தொழில் ஒன்றில் ஈடுபடல் போன்ற நோக்கங்களுக்காக அரச உத்தியோகத்தர் சேவை காலத்தில் அதிகபட்சம் 05 வருடங்களுக்கு உட்பட்டு உத்தியோகத்தரின் சேவை மூப்பு மற்றும் ஓய்வூதியத்திற்கு ஏற்புடையதாக கொள்ளக்கூடிய வகையில் சம்பளம் இல்லாத வெளிநாட்டு லீவைப் பெற்றுக்கொள்ள முடியும்.


மேலும் 35 வயதுக்குட்பட்ட அரச உத்தியோகத்தர்கள், தகவல் தொழில்நுட்ப அறிவு, ஆங்கிலம் அல்லது வேறு எந்த மொழி / மொழிகள் பற்றிய அறிவை வளர்த்துக் கொள்ள அல்லது அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் ஒன்றில் தொழில் பயிற்சியை பூர்த்தி செய்வதற்கு அதிகபட்சம் ஒரு வருடத்திற்கு உட்பட்டு உள்நாட்டு அல்லது வெளிநாட்டு சம்பளமற்ற லீவினைப் பெற்றுக் கொள்ள முடியும்.

 

இந்த சுற்றறிக்கை அறிமுகப் படுத்துவதற்கு முன்னர் தாபன விதிக்கோவை ஏற்பாடுகளின் கீழ் வெளிநாடு சென்று இதுவரை நாடு திரும்பாத, அங்கீகரிக்கப்பட்ட விடுமுறை கால பகுதியில் உள்ள உத்தியோகத்தர்கள், சம்பளத்துடனான லீவு அல்லது சம்பளமற்ற லீவைப் பெற்றிருப்பதன் காரணமாக கட்டாய சேவை காலத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ள உத்தியோகத்தர்கள், கட்டாய சேவை காலத்தை நிறைவு செய்துள்ள உத்தியோகத்தர்கள் மற்றும் தகுதிகாண் காலத்தில் உள்ள நிறைவேற்றுதரத்தில் அல்லாதவர்களுக்காகவும் இந்த விடுமுறை பெறலாம்.

 

ஏற்கனவே சம்பளமற்ற அல்லது சம்பளத்துடன் வெளிநாடு சென்றுள்ள ஊழியர்கள் இந்த ஏற்பாடுகளுக்கு அமைய சம்பளமற்ற லீவு பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் வெளிநாட்டிலிருந்தே எழுத்து மூலம் கோரிக்கை விடுக்கலாம். 


இந்த ஏற்பாடுகளின் கீழ் வெளிநாடு செல்லும் சகல ஊழியர்களும் வெளிநாட்டு நிதி கணக்கிற்கு (NRFC) பணம் அனுப்ப வேண்டும்.

 

அந்தவகையில், 

ஆரம்ப நிலை சேவை வகுதியை சேர்ந்த உத்தியோகத்தர்கள் மாதாந்தம் 100 அமெரிக்க டொலர்களும் 

இரண்டாம் நிலை சேவை வகுதியை சேர்ந்தவர்கள் மாதாந்தம் 200 அமெரிக்க டொலர்களும் 

மூன்றாம் நிலை சேவை வகுதியை சேர்ந்தவர்கள் மாதாந்தம் 300 அமெரிக்க டொலர்களும் 

நிறைவேற்றுத்தர சேவை வகையை சேர்ந்தவர்கள் மாதாந்தம் 500 அமெரிக்க டொலர்களும் அனுப்ப வேண்டும்.

 

உத்தியோகத்தர் வெளிநாட்டில் தொழில் செய்யும் போது மேற்கூறப்பட்டுள்ள பணத்தை அல்லது தொழில் மூலம் கிடைக்கும் சம்பளத்தில் 25 வீதத்தை அனுப்பீடு செய்ய வேண்டும். இவ்வாறு பணம் அனுப்பீடு செய்வதற்காக வெளிநாடு சென்ற நாள் முதல் 2மாத நிவாரணம் வழங்கப்படுவதுடன் மூன்றாவது மாதத்திலிருந்து பணம் அனுப்ப வேண்டும்.

 

இந்த சுற்றறிக்கையின் ஏற்பாடுகள் 2022-6-22ஆம் திகதி முதல் நடைமுறையாகும்.

 

இந்த சுற்றறிக்கைகளை மும்மொழிகளிலும் இங்கே பார்வையிடலாம் மற்றும் டவுன்லோட் செய்யலாம்..



அரச ஊழியர்கள் வெளிநாடு செல்ல சம்பளமற்ற விடுமுறை! (மும்மொழிகளிலும் சுற்றறிக்கை இணைப்பு) அரச ஊழியர்கள் வெளிநாடு செல்ல சம்பளமற்ற விடுமுறை! (மும்மொழிகளிலும் சுற்றறிக்கை இணைப்பு) Reviewed by Irumbu Thirai News on June 22, 2022 Rating: 5
Powered by Blogger.