Batticaloa Campus தொடர்பில் அரசின் நிலைப்பாடு...

November 28, 2020

சர்ச்சைக்குள்ளான மட்டக்களப்பு ‘Batticaloa Campus’ பல்கலைக்கழகம் அரசாங்கத்தினால் பொறுப்பேற்கப்படுமா? என்று பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன நேற்று பாராளுமன்றத்தில் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் G.L. பீரிஸ், 
உதிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னர் பெரும் சர்ச்சைக்குள்ளான மட்டக்களப்பு ‘Batticaloa Campus’ பல்கலைக்கழகத்தை தனியார் நிறுவனமாக முன்னெடுப்பதற்கு எந்த வகையிலும் இடமளிக்கப்படமாட்டாது என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.
Batticaloa Campus தொடர்பில் அரசின் நிலைப்பாடு... Batticaloa Campus தொடர்பில் அரசின் நிலைப்பாடு... Reviewed by irumbuthirai on November 28, 2020 Rating: 5

வெளியானது அம்பலாங்கொடை பாடசாலை மாணவர்களின் PCR...

November 26, 2020

அம்பலாங்கொடை பகுதியில் 02 பாடசாலைகளின் மாணவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனைகளில் அவர்களுக்கு கொரோனா இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. 
கொரோனா உறுதிசெய்யப்பட்ட பெற்றோர்களின் பிள்ளைகள் பாடசாலைக்கு சமூகமளித்தமையால் குறித்த மாணவர்களுக்கு PCR செய்யப்பட்டிருந்தது.
வெளியானது அம்பலாங்கொடை பாடசாலை மாணவர்களின் PCR... வெளியானது அம்பலாங்கொடை பாடசாலை மாணவர்களின் PCR... Reviewed by irumbuthirai on November 26, 2020 Rating: 5

இன்று தொடங்கியது LPL..

November 26, 2020

LPL (Lanka Premier League) கிரிக்கெட் தொடர் இன்று ஹம்பாந்தோட்டை சூரியவெவ மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச மைதானத்தில் ஆரம்பமாகியுள்ளது. 
இன்றைய முதல் போட்டியில் அன்ஜலோ மெத்திவ்ஸ் தலைமையிலான கொழும்பு கிங்ஸ் அணியும் குசல் ஜனித் பெரேரா தலைமையிலான கண்டி டஸ்கர்ஸ் அணியும் விளையாடுகின்றன. 
LPL இல் 5 அணிகள் பங்குபற்றுகின்றன.
இன்று தொடங்கியது LPL.. இன்று தொடங்கியது LPL.. Reviewed by irumbuthirai on November 26, 2020 Rating: 5

சாதாரண தரப் பரீட்சையை நடத்துவது பற்றி அமைச்சர் G.L. பீரிஸ்..

November 26, 2020

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (26) இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கல்வி அமைச்சர் G.L. பீரிஸ் கருத்து வெளியிடுகையில், 
க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையை நடத்துவது பற்றி எதிர்வரும் 10 நாட்களுக்குள் தீர்மானிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். 
மேலும் தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையையும், கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சையையும் வெற்றிகரமாக நடத்தி முடிக்க சகல தரப்பினரும் ஒததுழைப்பு வழங்கினார்கள். அதேபோன்று சாதாரண தரப் பரீட்சையையும் நடத்துவதற்கு சிறப்பான ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
சாதாரண தரப் பரீட்சையை நடத்துவது பற்றி அமைச்சர் G.L. பீரிஸ்.. சாதாரண தரப் பரீட்சையை நடத்துவது பற்றி அமைச்சர் G.L. பீரிஸ்.. Reviewed by irumbuthirai on November 26, 2020 Rating: 5

கொரோனாவுடன் பாடசாலைக்குச் சென்ற மாணவன்...

November 26, 2020

ஒருகொடவத்தையில் தனது தந்தை மற்றும் தாய் வசிக்கும் இருப்பிடத்துக்கு பாட்டி சகிதம் அண்மையில் சென்று வந்த வட்டவளை, குயில்வத்தை பகுதியைச் சேர்ந்த உயர்தர வகுப்பு மாணவன் ஒருவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
கடந்த செவ்வாய் கிழமை PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் பரிசோதனை முடிவுகள் வெளிவருவதற்கு முன்னர் இம்மாணவர் நேற்று (25) பாடசாலைக்குச் சென்றுள்ளார். எனினும், பாடசாலை நிர்வாகத்தினரால் அவர் திருப்பி அனுப்பட்டுள்ளார். 
இந்நிலையில் இன்று குறித்த பாடசாலை வளாகம் தொற்றுநீக்கம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொரோனாவுடன் பாடசாலைக்குச் சென்ற மாணவன்... கொரோனாவுடன் பாடசாலைக்குச் சென்ற மாணவன்... Reviewed by irumbuthirai on November 26, 2020 Rating: 5

20-11-2020 அன்று வெளியான அரச வர்த்தமானி

November 26, 2020

20-11-2020 அன்று வெளியான அரச வர்த்தமானியை ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் இங்கு தருகிறோம். 
Official gazette released on 20-11-2020 (In two languages) 
இதில், பல முக்கிய அறிவித்தல்கள் காணப்படுகின்றன. 
கீழே உள்ள உரிய லிங்கை கிளிக் செய்து உரிய மொழியில் முழுமையாகப் பார்வையிடுக. 
ஆங்கிலத்தில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 
Click the link below for English Gazette. 
சிங்களத்தில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 
Click the link below for Sinhala Gazette.

20-11-2020 அன்று வெளியான அரச வர்த்தமானி 20-11-2020 அன்று வெளியான அரச வர்த்தமானி Reviewed by irumbuthirai on November 26, 2020 Rating: 5

13-11-2020 அன்று வெளியான அரச வர்த்தமானி

November 26, 2020

13-11-2020 அன்று வெளியான அரச வர்த்தமானியை ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் இங்கு தருகிறோம். 
Official gazette released on 13-11-2020 (In two languages) 
இதில், பல முக்கிய அறிவித்தல்கள் காணப்படுகின்றன. 
கீழே உள்ள உரிய லிங்கை கிளிக் செய்து உரிய மொழியில் முழுமையாகப் பார்வையிடுக. 
ஆங்கிலத்தில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 
Click the link below for English Gazette. 
சிங்களத்தில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 
Click the link below for Sinhala Gazette.
13-11-2020 அன்று வெளியான அரச வர்த்தமானி 13-11-2020 அன்று வெளியான அரச வர்த்தமானி Reviewed by irumbuthirai on November 26, 2020 Rating: 5

06-11-2020 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்)

November 26, 2020

06-11-2020 அன்று வெளியான அரச வர்த்தமானியை தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் இங்கு தருகிறோம்.  
Official gazette released on 06-11-2020 (In three languages) 
இதில், பல முக்கிய அறிவித்தல்கள் காணப்படுகின்றன. 
கீழே உள்ள உரிய லிங்கை கிளிக் செய்து உரிய மொழியில் முழுமையாகப் பார்வையிடுக. 
தமிழில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 
Click the link below for Tami Gazette. 
ஆங்கிலத்தில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 
Click the link below for English Gazette. 
சிங்களத்தில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 
Click the link below for Sinhala Gazette.
06-11-2020 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) 06-11-2020 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) Reviewed by irumbuthirai on November 26, 2020 Rating: 5

29-10-2020 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்)

November 26, 2020

29-10-2020 அன்று வெளியான அரச வர்த்தமானியை தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் இங்கு தருகிறோம்.  
Official gazette released on 29-10-2020 (In three languages) 
இதில், பல முக்கிய அறிவித்தல்கள் காணப்படுகின்றன. 
கீழே உள்ள உரிய லிங்கை கிளிக் செய்து உரிய மொழியில் முழுமையாகப் பார்வையிடுக. 
தமிழில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 
Click the link below for Tami Gazette. 
ஆங்கிலத்தில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 
Click the link below for English Gazette. 
சிங்களத்தில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 
Click the link below for Sinhala Gazette.
29-10-2020 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) 29-10-2020 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) Reviewed by irumbuthirai on November 26, 2020 Rating: 5

கிளினிக் மருந்துகளை பெற 'ஒசுசல'வில் விஷேட ஏற்பாடு

November 26, 2020

தொற்றா நோய் கிளினிக் சிகிச்சைக்கான மருந்துகளை பெற விஷேட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. 
அதாவது மருந்து வகைகளை பெற்றுக்கொள்வதில் சிரமங்களை எதிர்க்கொள்வோருக்கு வசதியாக அரச ஒசுசல மருந்தகங்கள் 24 மணித்தியாலயமும்; செயற்படுவதற்கு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று அரச மருந்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர் வைத்தியர் பிரசன்ன குணசேன தெரிவித்தார். 
பொது மக்கள் மருந்துகளை பெற்றுக்கொள்வதற்கு இந்த சூழ்நிலையில் நாம் இணையத்தளம், தொலைபேசி மூலமாக இலக்கங்களை வெளியிட்டு வருகின்றோம். இந்த தொலைபேசி இலக்கங்களின் ஊடாக மருந்து பட்டியலை WhatsApp, Viber மூலமாக அனுப்பி வைத்தால் நாம் தேவையான மருந்துகளை ஒசுசல மருந்தகத்தில் தயார் செய்து உங்களுக்கு கிடைக்கக்கூடியதாக நடவடிக்கைகளை மேற்கொள்வோம். 
கம்பஹா, கொழும்பு போன்ற பிரதேசங்களில் தற்போது சேவைகளை முன்னெடுத்துள்ளோம். இருப்பினும், இதில் பெரும்பாலானோர் ஆர்வம் காட்டியதாக தெரியவில்லை. தொடர்புக்கொள்ள வேண்டிய தொலைபேசி இலக்கங்களை மீண்டும் எதிர்வரும் சில தினங்களில் நாம் அறிவிப்போம். எமது மருந்தக கூட்டுத்தாபன இணையத்தளத்தில் தொலைபேசி இலக்கங்கள் உண்டு. 
 நீங்கள் தொற்றாநோய்க்கு உள்ளானவர்கள் என்றால் அதற்கான மருந்துகளை பயன்படுத்தாமல் இருக்க வேண்டாம். கொரோனா தொற்றினால் உங்களுக்கு ஆபத்து ஏற்படுவதையும் பார்க்க தொற்றா நோய்க்கு மருந்துகளை பயன்படுத்தாமல் இருப்பவர்களுக்கு அதிகம் பாதிப்பு ஏற்படுகின்றது. இந்த சந்தர்ப்பத்தில் சுகாதார அமைச்சின் சார்பாக இந்த கோரிக்கையை முன்வைக்கின்றேன் என அவர் மேலும் தெரிவித்தார்.
கிளினிக் மருந்துகளை பெற 'ஒசுசல'வில் விஷேட ஏற்பாடு கிளினிக் மருந்துகளை பெற 'ஒசுசல'வில் விஷேட ஏற்பாடு  Reviewed by irumbuthirai on November 26, 2020 Rating: 5

திவுலபிடிய கொரோனா எதிரொலி: 24-11-2020 நடந்தவை...

November 25, 2020

திவ்லபிடிய கொரோனா எதிரொலியாக 51ம் நாள் அதாவது செவ்வாய்க்கிழமை (24) நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள், அறிவிப்புக்கள் என்பவற்றை இங்கு தருகிறோம். 
  • நாட்டில் கொவிட் 19 தொற்று நிலைமை காணப்பட்ட போதிலும் இவ் வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 9,688 வழக்குகள் சட்டமா அதிபரால் நிறைவு செய்யப்பட்டுள்ளன. அதேபோல், 4,019 வழக்குகளில் பிரதிவாதிகளுக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செயயப்பட்டுள்ளதாக சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி அரச சட்டத்தரணி நிஸாரா ஜயரத்ன தெரிவித்தார். 
  • கடந்த சில தினங்களுக்கு முன்னர் பஸ்ஸர பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்திருந்த நபருக்கு கொரோனா தொற்று காரணத்தால் 5 பொலிஸ் அதிகாரிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 
  • பல்கலைக்கழக பரீட்சைகளை நடத்தும் நடைமுறை விதிகள் குறித்து இந்த வாரத்தில் அறிவிக்கப்படும் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்தார். 
  • நுவரெலியா மாவட்டத்தில் நேற்று (23) வரை 89 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனவும், அவர்களில் 25 பேர் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கொழும்பில் இருந்து வந்தவர்கள் எனவும் நுவரெலியா மாவட்ட சுகாதார பணிப்பாளர் வைத்தியர் இமேஷ் பிரதாபசிங்க இன்று (24) தெரிவிப்பு.
  • இதுவரை காலமும் கொவிட்-19 தொற்றால் உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் செய்யும் நடைமுறையே அமுலானது. இது உலகளாவிய ரீதியில் ஆராய்ந்து மேற்கொள்ளப்படும் தீர்மானமாகும். இங்கு ஒரு இனத்தை அல்லது மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு தனித்துவம் அளிக்க முடியாது. வைரஸ் தொற்று பரவும் விதம் போன்றவற்றை ஆராய்ந்து விஞ்ஞான ரீதியாக முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளது. இவையெல்லாம் நாட்டு நலன் கருதி மேற்கொள்ளப்படும் தீர்மானங்கள் என டொக்டர் சுதத் சமரவீர தெரிவித்தார். 
  • கொழும்பில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்த பிரதேசங்களிலிருந்து சென்றமை காரணமாகவே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. நுவரெலியாவில் இரண்டு இடங்களில் பதிவாகியுள்ளன. ஒரு இடம் மஸ்கெலியா. கடந்த தினத்தில் தமிழர்களின் பண்டிகை ஒன்று இருந்தது. நாம் அறிவித்திருந்தோம் மலையக பிரதேசங்களுக்கு செல்ல வேண்டாம் என்று. எனினும் நபர் ஒருவர் மஸ்கெலியா பிரதேசத்திற்கு சென்றிருந்தார். அதேபோல் நுவரேலியா பிரதேசத்திற்கும் கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் இருந்த நபர் ஒருவர் சென்றிருந்தார். இந்த இரண்டு சம்பவங்களின் மூலம் மலையகத்திற்கு நோய் பரவியுள்ளது. நாம் இந்த இரண்டு விடயங்களையும் புலனாய்வு பிரிவு ஊடாக விசாரணை செய்தோம். ஒரு சில பிரதேசங்களில் நோயாளர்கள் பதிவாகும் அதேவேளை ஏனைய பிரதேசங்களுக்கும் தொற்று ஏற்பட்டுள்ளதா என்பது தொடர்பில் ஆராயப்படுகின்றது. அதனடிப்படையிலேயே தனிமை படுத்துவதா இல்லையா என்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும் என ராணுவ தளபதி தெரிவிப்பு. 
  • நேற்று பாடசாலைகளில் ஆசிரியர் மற்றும் மாணவர் வரவு திருப்திகரமான மட்டங்களில் இருந்ததாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 
  • அம்பலாங்கொடை பகுதியில் உள்ள பிரபல பாடசாலைகள் இரண்டிலுள்ள 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். குறித்த பாடசாலைகளில் கல்வி பயிலும் அம்பலாங்கொடை-திலகபுர பகுதியில் வசித்து வரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு குழந்தைகளின் தாயும் தந்தையும் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், பாடசாலைகளில் மூன்றாம் தவணை ஆரம்பமாகியுள்ள நிலையில் நேற்றைய தினம் குறித்த குடும்பத்தில் உள்ள இரண்டு மாணவர்கள் பாடசாலைக்கு சென்றுள்ளனர். இதன் காரணமாகவே அவர்களுடன் நெருங்கி பழகிய மாணவர்களும் ஆசிரியர்களும் தற்போது தனிமைப்படுத்தலுக்காக அனுப்பப்பட்டுள்ளனர். 
  • அக்குரணையில் இதுவரை 39 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அங்கு குறித்த சில கிராம சேவை உத்தியோகத்தர் பிரிவிற்கு இன்று முதல் நடமாட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 
  • பேருவளை பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
  • இலங்கையில் இதுவரை கர்ப்பிணித்தாய்மார்கள் 50 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
  • இன்று முதல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
  • இன்றைய தினம் மாத்திரம் 459 பேருக்கு கொரோனா உறுதியானது.
  • Irumbuthirainews
திவுலபிடிய கொரோனா எதிரொலி: 24-11-2020 நடந்தவை... திவுலபிடிய கொரோனா எதிரொலி: 24-11-2020 நடந்தவை... Reviewed by irumbuthirai on November 25, 2020 Rating: 5

உயிருடன் பிடிபட்ட அரியவகை சருகுமான்...

November 25, 2020

அரியவகை சந்தனம் நிறம் கொண்ட சருகுமான் ஒன்று புத்தளம் மாவட்டத்தின் நாத்தாண்டிய பிரதேச செயலகத்திற்குற்பட்ட தப்போவ பகுதியில் அப்பகுதி மக்களால் உயிருடன் பிடிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் வனஜீவராசிகள் பிராந்திய அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
குறித்த சருகுமானை பிடித்த பிரதேசவாசிகள் புத்தளம் வனஜீவராசிகள் பிராந்திய அலுவலக அதிகாரிகளுக்கு தகவல் வழங்கியுள்ளனர். இதனையடுத்து அதிகாரிகள் குறித்த சருகுமானை மீட்டு வனஜீவராசிகள் பிராந்திய அலுவலகத்திற்கு எடுத்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உயிருடன் பிடிபட்ட அரியவகை சருகுமான்... உயிருடன் பிடிபட்ட அரியவகை சருகுமான்... Reviewed by irumbuthirai on November 25, 2020 Rating: 5

திவுலபிடிய கொரோனா எதிரொலி: 23-11-2020 நடந்தவை...

November 24, 2020

திவ்லபிடிய கொரோனா எதிரொலியாக 50ம் நாள் அதாவது திங்கட்கிழமை (23) நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள், அறிவிப்புக்கள் என்பவற்றை இங்கு தருகிறோம். 
  • மஹர சிறைச்சாலையில் கைதியாக இருந்த நபர் சுகயீனம் காரணமாக ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனைகளில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
  • மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் நாராஹேன்பிட்ட பிரதான காரியாலயம் நாளை முதல் மீண்டும் திறக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 
  • IDH வைத்தியசாலையில் இருந்து நேற்று தப்பிச் செல்ல முற்பட்ட போதைப்பொருளுக்கு அடிமையான 22 வயது கொவிட் தொற்றாளர் வைத்தியசாலையின் பாதுகாப்பு பிரிவினரால் பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 
  • இன்று 5 வீதமான மாணவர் வருகையே பதிவானதாக ஆசியர் சங்கங்கள் தெரிவிக்கின்றன. 
  • 3ம் தவனை கற்றல் செயற்பாடுகளுக்காக பாடசாலைகள் மீள திறக்கப்பட்ட நிலையில் சப்ரகமுவ மாகாணத்திலேயே இன்று அதிகூடிய அதாவது 55% மாணவர் வரவு பதிவாகியுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவித்தார். 
  • வெலிக்கடை சிறைச்சாலையில் கடமையாற்றி வரும் எல்பிட்டி-நவதகல பிரதேசத்தில் வசித்து வரும் நபர் தமது வீட்டுக்கு திரும்பியிருந்த போது திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இவருக்கு மேற்கொள்ளப்பட்ட பீசிஆர் பரிசோதனையின் போது இவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. 
  • சுகாதார வழிமுறைகளுக்கு அமைய LPL மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிரான கிரிக்கட் தொடர்களை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 
  • பல்கலைக்கழகங்களில் புதிய மாணவர்களுக்கான பதிவு இன்று முதல் ஆரம்பமாகும் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பதிவுசெய்தல் இணைய நிகழ்நிலை கட்டமைப்பு ஊடாக மட்டுமே இடம்பெறும். 
  • அவிசாவளை மாவட்ட வைத்தியசாலையின் ஆரம்ப சிகிச்சை பிரிவில் கடமையாற்றும் பெண் வைத்தியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
  • தரம் 6 - 13 ஆம் தர மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளுக்காக மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகள் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் பாடசாலைகள் இன்று (23) மீண்டும் திறக்கப்பட்டன. ஆனால் ஏனைய பிரதேசங்களிலும் சில பாடசாலைகள் இன்று திறக்கப்படவில்லை. அந்தந்த பகுதிகளில் காணப்படும் கொரோனா பரவல் நிலைமையை கருத்திற்கொண்டு பாடசாலைகளை திறக்கும் அதிகாரம் பாடசாலை அதிபர்கள் உள்ளிட்ட கல்வி அதிகாரி மற்றும் சுகாதார தரப்பினருக்கு வழங்கப்பட்டிருந்தது. இதற்கமைய வடமேல் மாகாணத்தில் 48 பாடசாலைகளும், மத்திய மற்றும் வட மத்திய மாகாணங்களில் 14 பாடசாலைகளும் சப்ரகமுவ மாகாணத்தில் 12 பாடசாலைகளும் கிழக்கு மாகாணத்தில் 6 பாடசாலைகளும் தென் மாகாணத்தில் ஒரு பாடசாலையும் திறக்கப்படவில்லை. ஊவா மாகாணத்தில் எந்த பாடசாலைகளும் மூடப்படவில்லை. 
  • மேலும் 03 கொரோனா மரணங்கள் அறிவிப்பு. 60 மற்றும் 86 வயது பெண்கள். 60 வயது ஆண். இத்துடன் மொத்த மரணம் 90 ஆக உயர்வு. 
  • இன்றைய தினம் மாத்திரம் 337 பேருக்கு கொரோனா உறுதியானது.
  • Irumbuthirainews
திவுலபிடிய கொரோனா எதிரொலி: 23-11-2020 நடந்தவை... திவுலபிடிய கொரோனா எதிரொலி: 23-11-2020 நடந்தவை... Reviewed by irumbuthirai on November 24, 2020 Rating: 5
Powered by Blogger.