பாபர் மசூதி-ராமஜென்மபூமி தொடர்பான தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்
irumbuthirai
November 09, 2019
இந்தியா, அயோத்தியில் ராமஜென்மபூமி-பாபர் மசூதி நிலம் தொடர்பான வழக்கில், இந்திய உயர் நீதிமன்ற அரசியல் சாசன ஐந்து நீதிபதிகளும் ஒருமித்த தீர்ப்பை அளித்துள்ளனர். தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தீர்ப்பை வாசிக்கத் தொடங்கினார். அதில்,
• அயோத்தியில் ராமஜென்மபூமி பகுதியில் ராமர் கோயில் கட்ட அனுமதி. அதே சமயம், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் 2.77 ஏக்கர் நிலம் இருக்க வேண்டும்.
• அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்ட உரிய அறக்கட்டளையை 3 மாதங்களுக்குள் இந்திய அரசாங்கம் உருவாக்க வேண்டும்.
• வக்ஃபு சபை ஏற்கும் இடத்தில், இஸ்லாமியர்களுக்கு 5 ஏக்கர் நிலம் மசூதி கட்ட ஒதுக்கப்பட வேண்டும்.
• நிலத்துக்கு உரிமை கோரிய நிர்மோஹி அகாராவின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
• பாபர் மசூதி இருந்த இடம் முழுக்க முழுக்க தங்களுக்குத்தான் சொந்தம் என்பதை இஸ்லாமியர்கள்
நிரூபிக்கவில்லை.
நிரூபிக்கவில்லை.
இஸ்லாமியர்களுக்கு மசூதி கட்டிக் கொள்ள 5 ஏக்கர் மாற்று நிலம் வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவு.
• அலகாபாத் உயர் நீதிமன்றம், அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தை மூன்றுப் பிரிவாகப் பிரித்துக் கொடுத்தது தவறு.
• நிலத்தின் உள்பகுதியில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தியுள்ளனர். ஆனால் அதற்கு உரிமை கொண்டாட ஆதாரங்கள் இல்லை.
• 1992ம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டது சட்டவிரோதம், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மீறிய செயல் என்று உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி குறிப்பிட்டார்.
அயோத்திதான் ராமர் பிறந்த இடம் என்று இந்துக்கள் நம்புகிறார்கள்.
• நிர்மோகி அகாரா வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல.
• சர்ச்சைக்குரிய நிலத்துக்கு ஒட்டுமொத்தமாக சன்னி வஃபு வாரியம் உரிமை கோர முடியாது.
• ஆங்கிலேயேர்கள் வருவதற்கு முன்பே அயோத்தியில் ராமர் மற்றும் சீதாவை இந்துக்கள் வணங்கியதற்கு ஆதாரம் உள்ளது.
• பாபர் மசூதி பாபர் காலத்தில்தான் கட்டப்பட்டது என்பதை ஏற்றுக் கொள்கிறோம்.
• மசூதிக்கு கீழ் இருந்ததாகக் கூறப்படும் கட்டடம் இஸ்லாமிய முறையிலான கட்டடம் இல்லை என்று
தொல்லியல் துறை ஆய்வில் தெரிவித்துள்ளது.
தொல்லியல் துறை ஆய்வில் தெரிவித்துள்ளது.
• பாபர் மசூதி கட்டப்படுவதற்கு முன்பு அங்கிருந்த கட்டடம் இஸ்லாமிய கட்டுமானம் அல்ல.
• இறை நம்பிக்கைக்குள் செல்வது நீதிமன்றத்துக்கு தேவையற்றது என கருதுகிறோம்.
• காலி இடத்தில் பாபர் மசூதி கட்டப்படவில்லை என்பது தெரிய வந்துள்ளது.
• இந்திய தொல்லியல் துறை கொடுத்துள்ள ஆதாரங்கள் ஆராயப்பட்டுள்ளன.
• ஒரு மதத்தினரின் நம்பிக்கை, மற்ற மதத்தினரின் நம்பிக்கையை தடுப்பதாக இருக்கக் கூடாது.
போன்ற முக்கிய அம்சங்கள் அந்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளன.
ஏற்கனவே இது தொடர்பான வழக்கை விசாரித்த அலகாபாத் உயர் நீதி மன்றம் அந்த நிலத்தை சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா, ராம் லல்லா ஆகிய 3 அமைப்புகளும் சரிசமமாக பிரித்துக் கொள்ள வேண்டும் என்று கடந்த 2010-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து அந்த அமைப்புகள் உள்ளிட்ட 14 பேர் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
பாபர் மசூதி-ராமஜென்மபூமி தொடர்பான தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்
Reviewed by irumbuthirai
on
November 09, 2019
Rating:
Reviewed by irumbuthirai
on
November 09, 2019
Rating:












