மாற்றப்படும் பாடத்திட்டங்கள்: விரைவில் அமைச்சரவைப் பத்திரம்:
irumbuthirai
August 22, 2020
நடைமுறை உலகிற்கு பொருந்தும் வகையில் பாடசாலைப் பாடத்திட்டங்களை புதுப்பிப்பது தொடர்பில் அமைச்சரவைப் பத்திரமொன்று விரைவில் தயாரிக்கப்படுமென கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் (20) கல்வி அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மாணவர்களின் பகுப்பாய்வு அறிவையும், விமர்சன ரீதியாக சிந்திக்கும் ஆற்றலையும் விருத்தி செய்வது முக்கியமாகும்,
தற்போதுள்ள கல்வி கட்டமைப்பில் இதற்கான சந்தர்ப்பம் குறைவாகவே உள்ளது. இருப்பினும் மாணவர்களின் ஆர்வத்தை மேம்படுத்தும் வகையில் கல்வி கட்டமைப்பை மாற்றியமைக்க வேண்டிய தேவை காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தொழில்வாய்ப்புக்களுக்கு ஏற்ற வகையில் பாட விதானங்கள் அமைய வேண்டிய விதம் பற்றிய கருத்துக்களை முன்வைக்குமாறு அமைச்சர், அதிபர்களைக் கேட்டுக் கொண்டதுடன். பாடவிதான விருத்தி தொடர்பில் நாடளாவிய ரீதியில் ஒரு விரிவான கருத்தாடலை ஏற்படுத்துவதாகவும் கல்வி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இதன்போது உயர்தர வகுப்புக்களில் பல்வேறு பாடங்களுக்கு பாடப்புத்தகம் இல்லாத காரணத்தினால் ஏற்பட்டுள்ள சிக்கல் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.
மாற்றப்படும் பாடத்திட்டங்கள்: விரைவில் அமைச்சரவைப் பத்திரம்:
Reviewed by irumbuthirai
on
August 22, 2020
Rating:
