பாடசாலை மாணவர்களிடையே தொழுநோய் அதிகரிப்பு!
Irumbu Thirai News
November 20, 2022
தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிய பாடசாலை மட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட நாடு தழுவிய திட்டத்தைத் தொடர்ந்து தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமை தெரியவந்துள்ளதுடன் தொழுநோயானது பாடசாலை மாணவர்களிடையே பரவக்கூடிய அபாயமும் அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சின் தொழுநோய் எதிர்ப்பு பிரசார பிரிவின் பணிப்பாளர் மருத்துவர் பிரசாத் ரணவீர தெரிவித்துள்ளார்.
நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான அமெரிக்க மையம் (CDC) வெளியிட்டுள்ள தகவல்களின் படி 95% ஆன மனிதர்கள் தொழுநோயை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை எதிர்க்கும் நோயெதிர்ப்பு தன்மையை இயற்கையாகவே கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் “இலங்கையில் 02 வகையான தொழுநோய்கள் பரவுகின்றன. அவை தொற்றக்கூடியவை மற்றும் தொற்றாதவை என வகைப்படுத்தப்பட்டுள்ளன. துரதிஷ்டவசமாக, இலங்கையில் இதுவரை கண்டறியப்பட்ட தொற்றாளர்களில் 60% ஆனோர் தொற்றக் கூடிய நோய்த்தன்மையை கொண்டுள்ளமை வருந்தத்தக்கது” என்று மருத்துவர் பிரசாத் ரணவீர சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த வருடத்தில் மாத்திரம் இலங்கையில் 500க்கும் மேற்பட்ட தொழுநோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர் என அவர் மேலும் தெரிவித்தார்.
பாடசாலை மாணவர்களிடையே தொழுநோய் அதிகரிப்பு!
Reviewed by Irumbu Thirai News
on
November 20, 2022
Rating:
