விஷேட விடுமுறை வழங்கப்படும் கண்டி நகர பாடசாலை பிரதேசங்கள்
Irumbu Thirai News
August 27, 2023
எதிர்வரும் 28, 29 மற்றும் 31 ஆம் திகதிகளில் (திங்கள், செவ்வாய், வியாழன்) கண்டி நகர எல்லைக்குட்பட்ட அனைத்து அரசாங்க பாடசாலைகளையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி குறித்த 3 தினங்களும் பாடசாலைகள் நடைபெறாது என மத்திய மாகாண ஆளுநர் லலித் யு கமகே தெரிவித்தார்.
பாடசாலைகள் மூடப்படும் மூன்று நாட்களுக்குப் பதிலாக சனிக்கிழமை மூன்று நாட்களுக்கு பாடசாலைகள் நடைபெறும் எனவும் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.
30 ம் திகதி போயா தினம் என்பதால் அன்றைய தினமும் விடுமுறை என்பது குறிப்பிடத்தக்கது.
குறித்த விடுமுறை வழங்கப்படவுள்ள பாடசாலைகள்
*கண்டி நகரத்திலிருந்து கடுகஸ்தோட்டை பாலம் வரையிலான பாடசாலைகள்
*கண்டி நகரத்திலிருந்து பேராதனை பாலம் மற்றும் கன்னோறுவ சந்தி வரையான பாடசாலைகள்
*கண்டி நகரத்திலிருந்து குளச்சுற்றுவட்டத்திலிருந்து அம்பிட்டிய வரையான பாடசாலைகள்
*கண்டி நகரத்திலிருந்து தென்னேகும்புர பாலம் வரை
*தொடம்வல ரோயல் ஆரம்பப் பாடசாலை/போவல வத்தை /ஹந்தான வரையான பாடசாலைகள்
Source: adaderana.
Previous:
விஷேட விடுமுறை வழங்கப்படும் கண்டி நகர பாடசாலை பிரதேசங்கள்
Reviewed by Irumbu Thirai News
on
August 27, 2023
Rating:
