சமூக ஊடக பாவனையாளர்கள் பதிவு செய்யப்பட வேண்டுமா? அமைச்சர் கெஹெலிய வெளியிட்ட அறிக்கை..

December 22, 2020

ஊடக ஒழுங்குமுறை தொடர்பாக தான் தெரிவித்த கருத்து முற்றிலும் மாறுபட்ட விதத்தில் பரப்பப்பட்டு வருவதாக வெகுஜன ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார். 
அதில் அவர் மேலும் தெரிவித்ததாவது, 
வெளிநாட்டு டிஜிட்டல் நடவடிக்கையாளர்களை பதிவு செய்வதாகவே கூறப்பட்டது. மாறாக இங்குள்ள சமூக ஊடக மற்றும் டிஜிட்டல் பாவனையாளர்களை பதிவு செய்வதாக கூறப் படவில்லை. 
இந்த Digital  பன்னாட்டு நிறுவனங்கள் உள்ளூர் வணிகங்களை 
பெரிதும் பாதிப்பதாகவும் நடுத்தர நிறுவனங்களை நேரடியாக பாதிப்பதாகவும் அமைகிறது. அதேவேளை இந்த வெளிநாட்டு டிஜிட்டல் தளங்கள் மூலம் நாட்டை விட்டு பெருந்தொகையான பணம் வெளியேறுவதற்கு வழிவகுக்கிறது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக பாவனையாளர்கள் பதிவு செய்யப்பட வேண்டுமா? அமைச்சர் கெஹெலிய வெளியிட்ட அறிக்கை.. சமூக ஊடக பாவனையாளர்கள் பதிவு செய்யப்பட வேண்டுமா? அமைச்சர் கெஹெலிய வெளியிட்ட அறிக்கை.. Reviewed by irumbuthirai on December 22, 2020 Rating: 5

நீதிமன்றத்தில் ஏற்பட்ட தீயிற்கு காரணம் மின்சார கசிவு இல்லை..

December 22, 2020

கொழும்பு, புதுக்கடை உயர்நீதிமன்ற வளாகத்தில் கடந்த 15 ஆம் திகதி ஏற்பட்ட தீயிற்கு காரணம் மின்சார கசிவு இல்லை என மின்சார சபை அறிவித்ததாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 
குறித்த சம்பவம் தொடர்பில் நீதிமன்ற வளாகத்தின் பணியாளர்கள் 
உட்பட மேலும் பலரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. 
இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பில் அரச இரசாயன பகுப்பாய்வாளரின் அறிக்கை இன்னும் கிடைக்கப் பெறவில்லை என குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நீதிமன்றத்தில் ஏற்பட்ட தீயிற்கு காரணம் மின்சார கசிவு இல்லை.. நீதிமன்றத்தில் ஏற்பட்ட தீயிற்கு காரணம் மின்சார கசிவு இல்லை.. Reviewed by irumbuthirai on December 22, 2020 Rating: 5

Vacancies: University Grants Commission

December 20, 2020

Vacancies in the University Grants Commission. 
Closing date: 31-12-2020. 
See the details below.
Source: 13-12-2020 Sunday Observer.

Vacancies: University Grants Commission Vacancies: University Grants Commission Reviewed by irumbuthirai on December 20, 2020 Rating: 5

Vacancies: University of Sri Jayewardanapura

December 20, 2020

Vacancies in the University of Sri Jayewardanapura.
Closing date: 05-01-2021.
See the details below.
Source: 13-01-2020 Sunday Observer.

Vacancies: University of Sri Jayewardanapura Vacancies: University of Sri Jayewardanapura Reviewed by irumbuthirai on December 20, 2020 Rating: 5

Vacancies: Bureau of the Commissioner General of Rehabilitation

December 20, 2020

Vacancies in the Bureau of the Commissioner General of Rehabilitation. 
Closing date: 15-01-2021. 
See the details below.
Source : 13-12-2020 Sunday Observer.

Vacancies: Bureau of the Commissioner General of Rehabilitation Vacancies: Bureau of the Commissioner General of Rehabilitation  Reviewed by irumbuthirai on December 20, 2020 Rating: 5

கொரோனா தொற்றுள்ளவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் தொடர்பில் வெளியான ஆய்வு

December 19, 2020

கொரோனா தொற்றுள்ள கர்ப்பிணிகளுக்கு பிறக்கும் குழந்தைகள் அதற்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை உடலில் கொண்டிருப்பதாக தெரியவந்துள்ளது. 
இது தொடர்பில் சிங்கப்பூரில் 
நடத்தப்பட்ட ஆய்விலேயே இவ்விடயம் வெளியாகியுள்ளது. 
தாயிடமிருந்து பிள்ளைக்கு வைரஸ் கடத்தப்படுவதற்கு இதுவரை எவ்வித ஆதாரமும் இல்லை என தெரிவிக்கப்படுகிறது.
கொரோனா தொற்றுள்ளவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் தொடர்பில் வெளியான ஆய்வு கொரோனா தொற்றுள்ளவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் தொடர்பில் வெளியான ஆய்வு Reviewed by irumbuthirai on December 19, 2020 Rating: 5

8 லட்சம் வழக்குகள் நிலுவை... 15 வருடங்கள் தேவை...

December 19, 2020

இலங்கை நீதிமன்றங்களில் சுமார் 8 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் இவற்றை விசாரணைக்கு எடுக்க மேலும் 15 வருடங்கள் தேவைப்படும் எனவும் நீதி அமைச்சின் செயலாளர் எம். எம். பீ. கே. மாயாதுன்னே தெரிவித்துள்ளார். 
எனவே இந்த விசாரணைகளை துரிதப்படுத்துவதற்காக 
நீதிமன்றங்கள் மற்றும் நீதவான்களின் எண்ணிக்கையை இரண்டு மடங்காக அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 
இதேவேளை சிறைச்சாலை நெருக்கடிகளை தவிர்க்கும் வகையில் சுமார் 8 ஆயிரம் கைதிகளுக்கு புனர்வாழ்வு அளிக்க எதிர்பார்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
8 லட்சம் வழக்குகள் நிலுவை... 15 வருடங்கள் தேவை... 8 லட்சம் வழக்குகள் நிலுவை... 15 வருடங்கள் தேவை...  Reviewed by irumbuthirai on December 19, 2020 Rating: 5

போலீசாருக்கு எதிராக இந்த வருடத்தில் மாத்திரம் 2400 முறைப்பாடுகள்..

December 19, 2020

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் போலீசாருக்கு எதிராக 2400 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 
இதில் 51 வீதமான முறைப்பாடுகளுக்கு தீர்வு பெற்று கொடுக்கப்பட்டுள்ளதாக இந்த ஆணைக்குழுவின் தலைவர் முன்னாள் பொலிஸ் மா அதிபர் சந்திரா பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். 
கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளில் பெரும்பாலானவை போலீசார் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டமை மற்றும் உரிய நடவடிக்கைகளை எடுக்காமை தொடர்பானது என அவர் தெரிவித்தார்.
போலீசாருக்கு எதிராக இந்த வருடத்தில் மாத்திரம் 2400 முறைப்பாடுகள்.. போலீசாருக்கு எதிராக இந்த வருடத்தில் மாத்திரம் 2400 முறைப்பாடுகள்.. Reviewed by irumbuthirai on December 19, 2020 Rating: 5

மேல் மாகாணத்திலிருந்து வெளியேறுபவர்களுக்கு இன்றும் செய்யப்பட்ட பரிசோதனை:

December 19, 2020

மேல் மாகாணத்திலிருந்து வெளியேறுபவர்களுக்கு Rapid Antigen பரிசோதனை நேற்றைய தினத்தை போன்று இன்றும் நடைபெற்றது. 
கொழும்பு-புத்தளம் வீதியில் கொச்சிக்கடை பிரதேசத்திலும், ஹைலெவல் வீதியில் சாலாவ பிரதேசத்திலும் கொழும்பு - கண்டி வீதியில் நிட்டம்புவ பிரதேசத்திலுமாக மூன்று இடங்களில் இந்த பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. 
இன்று எழுமாறாக 750 பேரில் செய்த பரிசோதனைகளில் 
ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருந்தமை இனங்காணப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி தெரிவித்துள்ளார். 
இதேவேளை நேற்று முதல் நாள் செய்யப்பட்ட 451 பரிசோதனைகளில் 5 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேல் மாகாணத்திலிருந்து வெளியேறுபவர்களுக்கு இன்றும் செய்யப்பட்ட பரிசோதனை: மேல் மாகாணத்திலிருந்து வெளியேறுபவர்களுக்கு இன்றும் செய்யப்பட்ட பரிசோதனை: Reviewed by irumbuthirai on December 19, 2020 Rating: 5

கொரோனா ஜனாஸா விவகாரம்... ஜனாதிபதியை சந்திக்கும் முஸ்லிம் காங்கிரஸ்...

December 19, 2020

கொரோனாவினால் மரணிக்கும் முஸ்லிம்களது ஜனாஸாக்களை எரிக்கும் தீர்மானத்தை கைவிட வலியுறுத்தும் நோக்கில் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் ஜனாதிபதியை சந்திக்க விருப்பதாக நம்பகமாக தெரிய வருகிறது. 
ஏற்கனவே இது தொடர்பில் பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்தியும் இதுவரை எந்த சாதகமான தீர்மானமும் எட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனா ஜனாஸா விவகாரம்... ஜனாதிபதியை சந்திக்கும் முஸ்லிம் காங்கிரஸ்... கொரோனா ஜனாஸா விவகாரம்... ஜனாதிபதியை சந்திக்கும் முஸ்லிம் காங்கிரஸ்... Reviewed by irumbuthirai on December 19, 2020 Rating: 5

வெளியாகின கொரோனா தடுப்பூசிகளின் விலைகள்...

December 19, 2020


Covid - 19 ற்காக கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசிகளின் விலைகள் வெளியாகியுள்ளன. 

இதேவேளை அமெரிக்கா பிரித்தானியா கனடா போன்ற நாடுகள் ஏற்கனவே பொதுமக்களுக்கு தடுப்பூசிகளை வழங்கும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளன. ஐரோப்பிய ஒன்றியத்தின் தடுப்பூசி வழங்கும் திட்டம் எதிர்வரும் 27 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தடுப்பூசிகளையும் அதன் விலையும் கீழே தருகிறோம்.

(1) பிரித்தானியாவின் அஸ்ட்ரா செனக்கா தடுப்பூசி - 1.78 யூரோ (ஜோன்சன் அண்ட் ஜோன்சன் நிறுவனம் அதை விற்பனை செய்யும் விலை 8.50 அமெரிக்க டொலர்கள்)

(2) செனோஃபி- க்ளக்ஸோ ஸ்மித்கிளைன் தடுப்பூசி - 7.56 யூரோ.

(3) கியாவக் தடுப்பூசி - 10 யூரோ.

(4) பைசர் - பயோ என் டெக் தடுப்பூசி - 12 யூரோ.

(5) அமெரிக்காவின் மொடர்னா தடுப்பூசி  - 18 யூரோ.

அந்த வகையில் அதிக விலை கொண்ட மொடர்னா தடுப்பூசியின் இலங்கை பெறுமதி ரூபா 3420 ஆகும்.

வெளியாகின கொரோனா தடுப்பூசிகளின் விலைகள்... வெளியாகின கொரோனா தடுப்பூசிகளின் விலைகள்... Reviewed by irumbuthirai on December 19, 2020 Rating: 5

Online மூலம் எப்பொழுதும் மாணவர்களால் கற்க முடியாது - சுகாதார பணியக பிரதி பணிப்பாளர்

December 19, 2020

ஒன்லைன் (Online) கல்வி மூலம் எப்பொழுதும் மாணவர்களால் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது. மாணவர்கள் உடல் ரீதியிலான செயற்பாட்டுடன் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வதே சிறந்ததாகும். இதேபோன்று மற்ற மாணவர்களுடன் பிள்ளைகள் பழக வேண்டும் இவ்வாறான நடைமுறைகள் முக்கியமானதாகும். செயல்முறையிலான கல்வி நடவடிக்கைகளுக்காக பாடசாலைகளை திறப்பது முக்கியமானதாகும் என சுகாதார பணியகத்தின் பிரதி பணிப்பாளர் திருமதி. சித்ரமாலி டி சில்வா தெரிவித்தார். 
நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். 
அவர் மேலும் தெரிவிக்கையில், 
இதேபோன்று பிள்ளைகளின் போக்குவரத்து விடயத்திலும் பெற்றோர் உரிய கவனம் செலுத்த வேண்டும். அது சுகாதார பாதுகாப்பு முறைகளுக்கு உட்பட்டதாக இருப்பதை உறுதி செய்துக்கொள்ள வேண்டும். மாணவர்கள் வீடுகளுக்கு வந்த பின்னர் பெற்றோர் அவர்களை முறையான சுகாதார நடைமுறைகளுக்கு அமைய அவர்களது உடல் சுத்தத்தை பேணி வீடுகளுக்குள் அழைப்பதில் பெற்றோர் பொறுப்பாக செயற்படவேண்டும். 
இதேபோன்று பாடசாலை கென்டின் திறக்கப்படவில்லை. இதனால் மாணவர்களுக்கு தேவையான உணவுகளை பெற்றோர் வீடுகளிலேயே தயாரித்து வழங்குவது முக்கியமானதாகும் என்றும் அவர் மேலும் கூறினார்.

Online மூலம் எப்பொழுதும் மாணவர்களால் கற்க முடியாது - சுகாதார பணியக பிரதி பணிப்பாளர் Online மூலம் எப்பொழுதும் மாணவர்களால் கற்க முடியாது - சுகாதார பணியக பிரதி பணிப்பாளர் Reviewed by irumbuthirai on December 19, 2020 Rating: 5

Facebook உள்ளிட்ட சமூக ஊடகங்களைப் பாவித்தால் பதிவு செய்ய வேண்டும் - அமைச்சர் கெஹெலிய

December 19, 2020

சமூக ஊடகங்களை பயன்படுத்துவோர் மத்தியில் சுயக்கட்டுப்பாட்டை ஏற்படுத்துவதற்காக நாட்டில் சமூக ஊடகங்களை பயன்படுத்துவோரை பதிவு செய்யும் விசேட வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். 
ஊடகங்களை ஒழுங்குறுத்தும் நடவடிக்கை ஒன்று இருப்பதாக அறிகின்றோம் என ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு அமைச்சர் பதிலளிக்கையில், 
சமூக ஊடகங்கள் மூலமாக ஏற்பட்டுள்ள பாரிய முரண்பாடு மற்றும் வேறுபாடுகள் காரணமான அவற்றின் செயற்பாடுகள் தொடர்பில் கட்டுப்பாடு இருக்கவேண்டும் என்ற நிலைப்பாடு எமக்கு உண்டு. இதற்கமைவாக சகல சமூக ஊடகங்களும் அதாவது முகபுத்தகம் உள்ளிட்டவற்றை பயன்படுத்துவோரை பதிவு செய்யவேண்டும். பதிவு செய்வதற்கான வேலைத்திட்டம் ஒன்றை நாம் எமது அமைச்சில் தயாரித்துள்ளோம். 
தற்பொழுது சமூக ஊடகங்களுக்கு மாத்திரமே இதனை நாம் தயாரித்துள்ளோம். சுயகட்டுப்பாடு தொடர்பில் நான் முன்னர் 2010ஆம் ஆண்டில் முயற்சித்தேன். அப்பொழுது அமைச்சராக இருந்த வேளையில் நான் இதற்கான நடவடிக்கையை முன்னெடுத்தேன். பலமுறை பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளேன். 
எதிர்வரும் திங்கட்கிழமையும் (21) இதுதொடர்பிலான பேச்சுவார்த்தை ஒன்று நடைபெறவுள்ளது. பேச்சுவார்த்தை முடிவடைந்த பின்னர் இதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டிய காலத்தின் தேவையும் ஏற்பட்டுள்ளது என நான் நினைக்கின்றேன் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். 
(அரசாங்க தகவல் திணைக்களம்)
Facebook உள்ளிட்ட சமூக ஊடகங்களைப் பாவித்தால் பதிவு செய்ய வேண்டும் - அமைச்சர் கெஹெலிய Facebook உள்ளிட்ட சமூக ஊடகங்களைப் பாவித்தால் பதிவு செய்ய வேண்டும் - அமைச்சர் கெஹெலிய Reviewed by irumbuthirai on December 19, 2020 Rating: 5
Powered by Blogger.