MPhil / PhD - 2021 (University of Colombo)

January 04, 2021

MPhil / PhD - 2021 (University of Colombo) 
Closing date: 15-01-2021. 
See the details below.
Source: 27-12-2020 Sunday Observer.

MPhil / PhD - 2021 (University of Colombo) MPhil / PhD - 2021 (University of Colombo) Reviewed by irumbuthirai on January 04, 2021 Rating: 5

Diploma in Software Engineering - 2021 (Wayamba University of Sri Lanka)

January 04, 2021

Diploma in Software Engineering - 2021 (Wayamba University of Sri Lanka) 
Closing date: 17-01-2021. 
See the details below.
Source: 27-12-2020 Sunday Observer.

Diploma in Software Engineering - 2021 (Wayamba University of Sri Lanka) Diploma in Software Engineering - 2021 (Wayamba University of Sri Lanka) Reviewed by irumbuthirai on January 04, 2021 Rating: 5

மூடப்படுகிறது உக்ரேன் சுற்றுலா பயணிகள் செல்லும் இடங்கள்...

January 03, 2021

இலங்கை வந்துள்ள உக்ரேன் சுற்றுலா பயணிகள் செல்லும் இடங்கள் மூடப்படும் என மத்திய கலாசார நிதியம் தெரிவித்துள்ளது. 
அந்த வகையில் நாளை (4) அவர்கள் பொலநறுவை பராக்கிரம அரண்மனை வளாகம், லங்காதிலக விகாரை, தலதா முற்றம், சிவன் ஆலயம், கிரி விகாரை மற்றும் கல் விகாரை உள்ளிட்ட பகுதிகளுக்கு விஜயம் செய்யவுள்ளனர். எனவே நாளை குறித்த இடங்கள் பிற்பகல் 01 மணிக்கு பின்னர் உள்ளூர் சுற்றுலா பயணிகளுக்காக திறக்கப்படமாட்டாது. 
நாளை மறுதினம் 
சீகிரியாவிற்கு விஜயம் செய்யவுள்ளதால் அன்றைய தினம் குறித்த வலயம் நண்பகல் 12 மணி வரை உள்ளூர் சுற்றுலாப் பயணிகளுக்காக திறக்கப்படமாட்டாது என குறித்த நிதியம் அறிவித்துள்ளது.
இதனிடையே உக்ரைன் கொத்தணி ஒன்று உருவானால் அதற்கு யார் பொறுப்பு என ஜேவிபி கேள்வி எழுப்பியுள்ளது.
மூடப்படுகிறது உக்ரேன் சுற்றுலா பயணிகள் செல்லும் இடங்கள்... மூடப்படுகிறது உக்ரேன் சுற்றுலா பயணிகள் செல்லும் இடங்கள்... Reviewed by irumbuthirai on January 03, 2021 Rating: 5

இலங்கை வந்த இங்கிலாந்து அணிக்கு கொரோனாவா?

January 03, 2021

மத்தள சர்வதேச விமான நிலையத்தில் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் உட்பட 44 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட Rapid Antigen பரிசோதனையில் எவருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 
இலங்கை அணியுடன் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட இங்கிலாந்து அணி வந்துள்ளது. அதில் முதலாவது போட்டி 
ஜனவரி 14ஆம் திகதியும் இரண்டாவது போட்டி ஜனவரி 22ஆம் திகதியும் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. 
இந்த இரு போட்டிகளும் காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை வந்த இங்கிலாந்து அணிக்கு கொரோனாவா? இலங்கை வந்த இங்கிலாந்து அணிக்கு கொரோனாவா? Reviewed by irumbuthirai on January 03, 2021 Rating: 5

10 வருடங்களின் பின் டெங்கு நோயாளர்களில் ஏற்பட்ட மாற்றம்..

January 03, 2021

கடந்த 10 வருடங்களின் பின் கடந்த வரும் (2020) டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையிலும் இறப்பவர்களின் எண்ணிக்கையிலும் பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாக டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் அருண ஜயசேகர தெரிவித்தார். 
அதாவது இந்த எண்ணிக்கை கடந்த பத்து வருடங்களை விட 
கடந்த வருடம் பாரியளவு குறைவடைந்துள்ளதாக தெரிவித்தார். 
2020 இல் 30,691 பேர் டெங்கு நோயாளர்களாக இனங்காணப்பட்டதோடு 35 பேர் மாத்திரமே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
10 வருடங்களின் பின் டெங்கு நோயாளர்களில் ஏற்பட்ட மாற்றம்.. 10 வருடங்களின் பின் டெங்கு நோயாளர்களில் ஏற்பட்ட மாற்றம்.. Reviewed by irumbuthirai on January 03, 2021 Rating: 5

7 மாவட்டங்களில் கடந்த 3 தினங்களாக கொரோனா இல்லை...

January 03, 2021

07 மாவட்டங்களில் கடந்த 3 தினங்களில் எந்தவொரு கொரோனா தொற்றாளர்களும் பதிவாகவில்லை என கொவிட்19 தொற்று பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. 
கிளிநொச்சி, வவுனியா, 
முல்லைத்தீவு, பதுளை, யாழ்ப்பாணம், கேகாலை மற்றும் அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களே இவையென தெரிவிக்கப்பட்டுள்ளது.
(அரசாங்க தகவல் திணைக்களம்)
7 மாவட்டங்களில் கடந்த 3 தினங்களாக கொரோனா இல்லை... 7 மாவட்டங்களில் கடந்த 3 தினங்களாக கொரோனா இல்லை... Reviewed by irumbuthirai on January 03, 2021 Rating: 5

Vacancy: Urban Development Authority

January 03, 2021

Vacancy in the Urban Development Authority. C
losing date: 10 days from 27-01-2020. 
See the details below.
Source: 27-01-2020 Sunday Observer.

Vacancy: Urban Development Authority Vacancy: Urban Development Authority Reviewed by irumbuthirai on January 03, 2021 Rating: 5

தரம்:01ல் மாணவர்களை அனுமதித்தல் - 2021

January 03, 2021

தரம் ஒன்றில் மாணவர்களை அனுமதிக்கும் நிகழ்வு அடுத்த மாதம் நடத்துவதற்கு திட்டமிட்டிருப்பதாக கல்வியமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார். 
 மேல் மாகாணம் மற்றும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் பிரதேசங்களில் உள்ள 
பாடசாலைகள் தவிர ஏனைய பிரதேசங்களில் உள்ள பாடசாலைகளுக்கே இவ்வாறு அடுத்த மாதம் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. 
இதேவேளை குறித்த பிரதேசங்களில் உள்ள பாடசாலைகள் எதிர்வரும் 11ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக அவர் மேலும் கூறினார்.
தரம்:01ல் மாணவர்களை அனுமதித்தல் - 2021 தரம்:01ல் மாணவர்களை அனுமதித்தல் - 2021 Reviewed by irumbuthirai on January 03, 2021 Rating: 5

சட்டவிரோத ஆயுதம் வைத்திருந்த பிக்கு: மன்னிப்பு வழங்கிய ஜனாதிபதி:

January 03, 2021

சட்டவிரோதமாக ஆயுதங்கள் (துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களை) வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டிருந்த உவத்தேன்ன சுமன தேரருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. 
ஜனாதிபதி ஊடக பிரிவு இந்த விடயத்தை உறுதிப்படுத்தியுள்ளது.
சட்டவிரோத ஆயுதம் வைத்திருந்த பிக்கு: மன்னிப்பு வழங்கிய ஜனாதிபதி: சட்டவிரோத ஆயுதம் வைத்திருந்த பிக்கு: மன்னிப்பு வழங்கிய ஜனாதிபதி: Reviewed by irumbuthirai on January 03, 2021 Rating: 5

கொரோனாவைக் காரணம் காட்ட வேண்டாம்...

January 03, 2021

கொரோனா பயத்தால் ஒழிந்திருப்பதன் மூலம் சவாலை வெற்றிக் கொள்ள முடியாது. கொரோனாவை சிறந்த திட்டத்தின் மூலமே வெற்றிகொள்ள முடியும். தொழில் கருமங்களில் ஈடுபடாமல், தமது கடமையை மேற்கொள்ளாமல் இருப்பவர்கள் கொரோனா வைரஸை காரணம் காட்ட வேண்டாம் என தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, தொழில் வழங்குனர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். 
 உலகின் முன்னணி நாடுகளும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பொருளாதார வீழ்ச்சியை சந்தித்திருக்கின்றன. இந்நிலையில் நாட்டு மக்கள் சுகாதார வழிமுறைகளுக்கு முன்னுரிமையளித்து செயற்பட வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
கொரோனாவைக் காரணம் காட்ட வேண்டாம்... கொரோனாவைக் காரணம் காட்ட வேண்டாம்... Reviewed by irumbuthirai on January 03, 2021 Rating: 5

Vacancies: Bank of Ceylon

January 03, 2021

Vacancies in the Bank of Ceylon. 
Closing date : 09-01-2021. 
See the details below.
Source : 27-12-2020 Sunday Observer.

Vacancies: Bank of Ceylon Vacancies: Bank of Ceylon Reviewed by irumbuthirai on January 03, 2021 Rating: 5

கொரோனா உடல்களை அடக்கம் செய்தல்: இலங்கை வைத்திய சங்கத்தின் நிலைப்பாடு:

January 03, 2021

கொரோனாவினால் மரணிக்கும் உடல்களை அடக்கம் செய்வது தொடர்பாக இலங்கை வைத்திய சங்கம் (SLMA) தமது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளது. 
அந்த வகையில் குறித்த உடல்களை இலங்கையில் அடக்கம் செய்ய அனுமதி வழங்க 
முடியும் என அந்த சங்கம் தெரிவித்துள்ளது. 
 விஞ்ஞான ரீதியான தகவல்களை வைத்து நடத்தப்பட்ட ஆய்வில் குறித்த சடலங்களை அடக்கம் செய்வதில் எவ்வித பிரச்சினையும் இல்லை என அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 இது மாத்திரமன்றி குறித்த அமைப்பு 07 அவதானிப்புகளையும் முன்வைத்துள்ளது. அவை பின்வருமாறு: 
1) சுவாச குழாய் வழியாக மட்டுமே கொரோனா தோற்று ஏற்படுகிறது. அதேபோன்று குறித்த வைரஸ் உயிரணுக்களில் மாத்திரமே பரவும். 
2) வைரஸ் உயிருள்ள கலத்தில் மட்டுமே வளர முடியும். உயிரற்ற உடலில் குறிப்பிட்ட காலத்திற்கு மேல் உயிர் வாழாது. 
3) பிரேத பரிசோதனையின் போது PCR முடிவுகள் positive என்றாலும் அந்த சடலங்களில் இருந்து வைரஸ் பரவும் என்பதை திட்டவட்டமாக கூற முடியாது. 
4) அடக்கம் செய்யப்படும் உடல்களினால் ஏற்படும் நீர் மாசை விட தொற்றாளர் ஒருவரினால் வெளியேற்றப்படும் கழிவுகளினால் நீர் கடுமையாக மாசுபடக்கூடும். 
5) நிலத்தடி நீரில் வைரஸ் துகள்கள் பதிவானாலும் அதனால் நோய்த்தொற்று ஏற்படுவது பற்றி எந்த தகவலும் இல்லை. இன்புளுவன்சா மற்றும் சார்ஸ் நிலைமைகளின் போது மேற்கொள்ளப்பட்ட ஆழமான ஆய்வுகளில் கூட இவ்வாறான நோய்த்தொற்று குறித்து எந்த பதிவும் இல்லை. 
6) டென்மார்க்கில் அடக்கம் செய்யப்பட்ட கீரிகள் மீண்டும் தோண்டப்பட்டமைக்கான காரணம் நீர் மாசடைவது அல்ல. மாறாக அந்த கீரிகளின் உடல்களிலிருந்து நைட்ரஜன் கழிவுகள் சூழலுடனும் நீருடனும் கலப்பதே ஆகும். 
7) நீரினால் பரவும் கொலரா போன்ற கொடிய நோய்கள் மூலம் இறப்பவர்களின் சடலங்கள் கூட அடக்கம் செய்யப்படுகின்றன. 
என்று இலங்கை வைத்திய அதிகாரிகள் சங்கம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
எனவே மேற்படி அவதானிப்புகளை விஞ்ஞான ரீதியான நிலமைகளையும் கருத்தில் கொண்டு, கொரோனாவினால் மரணிக்கும் உடல்களை இலங்கையில்  அடக்கம் செய்வதில் எந்த பிரச்சினையும் இல்லை என்ற நிலைப்பாட்டில் இலங்கை மருத்துவ சங்கம் இருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கொரோனா உடல்களை அடக்கம் செய்தல்: இலங்கை வைத்திய சங்கத்தின் நிலைப்பாடு: கொரோனா உடல்களை அடக்கம் செய்தல்: இலங்கை வைத்திய சங்கத்தின் நிலைப்பாடு: Reviewed by irumbuthirai on January 03, 2021 Rating: 5

தரம் 6ற்கு மேற்பட்ட மாணவிகளின் மாதவிடாய்: அரசு எடுத்த நடவடிக்கை:

January 03, 2021

பாடசாலை மாணவிகளுக்கு மாதாந்தம் வரும் மாதவிடாய் காரணமாக மாதத்தில் 02 நாட்கள் விடுமுறை எடுப்பதாக கல்வியமைச்சு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. 
தரம் 6 க்கு மேற்பட்ட சுமார் 12 லட்சம் மாணவிகள் இவ்வாறு விடுமுறை எடுப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இதற்கான காரணம் மாதவிடாய் காலத்தில் பயன்படுத்த மாதவிடாய் 
துவாய் (நப்கீன்) இல்லாமையேயாகும். ஏனெனில் அரச பாடசாலைகளில் கற்கும் 65% ஆன மாணவிகள் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். 
 எனவே இந்த நிலைமைகளை கருத்திற்கொண்டு குறித்த மாணவிகளின் உள மற்றும் உடல் சுகாதார நிலைமைகளைப் சிறப்பாக பேணிக் கொள்ளவும் அரசாங்கம் இலவசமாக மாதவிடாய் நப்கீன்களை வழங்க தீர்மானித்துள்ளது. 
பிரதமரும் கல்வியமைச்சரும் இது தொடர்பான விளக்கத்தை அமைச்சரவைக்கு வழங்கி இத்திட்டத்தை முன்கொண்டு செல்வதற்கு தேவையான நடவடிக்கைகளையும் கல்வியமைச்சு மேற்கொண்டுள்ளது.
தரம் 6ற்கு மேற்பட்ட மாணவிகளின் மாதவிடாய்: அரசு எடுத்த நடவடிக்கை: தரம் 6ற்கு மேற்பட்ட மாணவிகளின் மாதவிடாய்: அரசு எடுத்த நடவடிக்கை: Reviewed by irumbuthirai on January 03, 2021 Rating: 5
Powered by Blogger.