பாகிஸ்தானால் கையளிக்கப்பட்ட அபிநந்தன் தொடர்பில் இந்தியாவின் முடிவு



காஷ்மீருக்கும் பரபரப்புக்கும் நெருங்கிய தொடர்பு. வரலாறு நெடுகிலும் பல்வேறு சம்பவங்கள் இதை உணர்த்துகின்றன. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதலில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் சுமார் 40 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவத்துக்குப் பிறகு, பாகிஸ்தானின் பாலகோட்டில் உள்ள பயங்கரவாதிகளின் முகாம் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது. இதன்போது விங் கமாண்டர் அபிநந்தன் சென்ற மிக் 21 ரக போர் விமானத்தை, பாகிஸ்தானின் எஃப்.16 விமானம் சுட்டு வீழ்த்தியது. இதைத்தொடர்ந்து, பாராசூட் மூலம் தப்பித்த அபிநந்தன், பாகிஸ்தானின் எல்லைக்குள் விழுந்து அந்நாட்டின் பிடியில் சிக்கிக் கொண்டார். மார்ச் 1ம் தேதி பாகிஸ்தான் அவரை நிபந்தனையின்றி விடுவித்தது. இதனால் அபிநந்தன் இந்தியாவில் மிகவும் பிரபலமாகியமை குறிப்பிடத்தக்கது.
தற்போது விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமனுக்கு ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தின கொண்டாட்டத்தின்போது "வீர் சக்ரா விருது" வழங்கி கௌரவிக்க இந்திய அரசு முடிவெடுத்துள்ளது. இந்த  விருது, வீர தீர செயல்களுக்காக வழங்கப்படும் மூன்றாவது உயரிய விருதாகும்.
சென்னையை சேர்ந்த இவரது தந்தையும் இந்திய விமானப்படையில் ஏர் மார்ஷலாக பணி புரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மூலம்; பீபீசி.
பாகிஸ்தானால் கையளிக்கப்பட்ட அபிநந்தன் தொடர்பில் இந்தியாவின் முடிவு பாகிஸ்தானால் கையளிக்கப்பட்ட அபிநந்தன் தொடர்பில் இந்தியாவின் முடிவு Reviewed by irumbuthirai on August 14, 2019 Rating: 5

No comments:

Powered by Blogger.