தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கான நேர்முகப் பரீட்சை...


தேசிய கல்வியற் கல்லூரிக்கு புதிதாக அனுமதிக்கப்படவுள்ள ஆசிரிய பயிலுனர்களுக்கான நேர்முகப் பரீட்சை நாளை 14 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமம் அட்டாளைச்சேனை மத்திய மகா வித்தியாலயத்தில் (தேசிய பாடசாலை) ஆரம்பமாவதாக அட்டாளைச்சேனை தேசிய கல்வியற் கல்லூரியின் பீடாதிபதி கே. புண்ணியமூர்த்தி தெரிவித்தார். 
 15 ஆம் திகதி திங்கட்கிழமை வரை நேர்முகப் பரீட்சை நடைபெறவுள்ளது. இதற்கமைய இஸ்லாம் கற்கை நெறிக்கு 30 பேரும் கணிதம் கற்கை நெறிக்கு 55 பேரும் வணிகக் கல்விக்கு 20 பேருமாக மொத்தம் 105 பயிலுனர்களுக்கான நேர்முகப்பரீட்சை நடைபெறவுள்ளதாகவும் இவர்களுக்கான கடிதங்கள் 
தனித்தனியாக விண்ணப்படிவத்தில் குறிப்பிடப்பட்ட முகவரிக்கு தபாலில் அனுப்பி வைக்கப்பட்டுளளதாகவும் தெரிவித்தார். 
நேர்முகப் பரீட்சைக்கு கடிதம் அனுப்பப்பட்டவர்கள் அதில் குறிப்பிடப்பட்டுள்ள சகல ஆவணங்களுடனும் காலை 09.00 மணிக்கு சமூகமளிக்க வேண்டும்.. 
 2018 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகளுக்குமைய கல்வியற் கல்லூரிகளுக்கு ஆசிரிய பயிலுனர்கள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவித்தார். 
 அட்டாளைச்சேனை தேசியக் கல்வியக் கல்லூரிக்கு விஞ்ஞானம் கற்கை நெறிக்கு 20 பயிலுனர்களும் கணித கற்கை நெறிக்கு 20 பயிலுனர்களும், இஸ்லாம் கற்கை நெறிக்கு 30 பயிலுனர்களும், ஆரம்பநெறி கற்கை நெறிக்கு 90 பயிலுனர்களும், விசேட கற்கை நெறிகளுக்கு 15 பயிலுனர்களும், வணிகக் கல்விக்கு 20 பயிலுனர்களுமாக மொத்தம் 195 பயிலுனர்கள் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளதாகவும் பீடாதிபதி கே. புண்ணியமூர்த்தி மேலும் தெரிவித்தார். 
நாட்டில் உள்ள 19 கல்வியக் கல்லூரிகளுக்கு புதிய மாணவர்களை அனுமதிப்பதற்கான நேர்முகப் பரீட்சைகள் சகல கல்விக் கல்லூரிகளிலும் நாளை 14ம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.
(Source: அரசாங்க தகவல் திணைக்களம்)
தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கான நேர்முகப் பரீட்சை... தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கான நேர்முகப் பரீட்சை... Reviewed by irumbuthirai on February 13, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.