தரம் 8 முதல் அறிமுகமாகும் புதிய பாடம்



 
தகவல் தொழில்நுட்பம் தொடர்பான அடிப்படை அறிவு இல்லாமல் அடுத்து வரும் ஐந்து ஆண்டுகளில் வேலை வாய்ப்புகளை தேடுவது கடினமான பணியாக காணப்படும். எனவே 2023 முதல் சாதாரண தரத்தில் தகவல் தொழில்நுட்ப பாடத்தை உள்ளடக்குவதோடு தரம் 8 முதல் செயற்கை நுண்ணறிவு பாடத்தையும் உள்ளடக்க திட்டமிட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த தெரிவித்துள்ளார். 
 
கல்வி அமைச்சில் நடைபெற்ற நிகழ்வொன்றின் போது அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 
 
இது தொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், 
செயற்கை நுண்ணறிவு பாடமானது தரம் 10 முதல் அறிமுகப்படுத்த தீர்மானிக்கப்பட்டாலும் நிபுணர்களின் பரிந்துரைகளுக்கு அமைய தரம் 8 முதல் அறிமுகப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. 21 ஆம் நூற்றாண்டின் தேவைகளை பூர்த்தி செய்ய இத்தகைய மாற்றங்களை அறிமுகப்படுத்துவது அவசியம். இளைஞர்களும் இவ்வாறான மாற்றங்களையே விரும்புகின்றனர். கல்வித் துறையில் புரட்சிகர மாற்றங்களைச் செய்ய நான் எப்போதும் தயாராக உள்ளேன். காலாவதியான பரீட்சை மைய கல்வி முறையிலும் மாற்றங்கள் செய்ய வேண்டியுள்ளது என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
 
 
ஏனையவை:

 
தரம் 8 முதல் அறிமுகமாகும் புதிய பாடம் தரம் 8 முதல் அறிமுகமாகும் புதிய பாடம் Reviewed by Irumbu Thirai News on December 08, 2022 Rating: 5

No comments:

Powered by Blogger.