குறுகிய கால தனிப்பட்ட வெளிநாட்டு விடுமுறைக்கு அனுமதி வழங்கல்குறுகிய கால தனிப்பட்ட வெளிநாட்டு விடுமுறைக்கு அனுமதி வழங்கும் அதிகாரம் மாகாண கல்விப் பணிப்பாளருக்கு வழங்கல் என்ற தலைப்பிலான சுற்றறிக்கை கடிதம் கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது. 

குறித்த சுற்றறிக்கை கடிதத்தின் படி சகல மாகாண, வலய, கோட்ட கல்வி காரியலயங்களில் பணியாற்றும் மத்திய அரசின் கீழான ஊழியர்கள், இலங்கை அதிபர் சேவை, ஆசிரியர் ஆலோசகர் சேவை, சகல தேசிய பாடசாலைகளிலும் சேவை புரியும் இலங்கை ஆசிரியர் சேவைக்கு உரித்தான உத்தியோகத்தர்கள் ஆகியோருக்கு 06 மாதம் வரையான குறுகிய கால தனிப்பட்ட வெளிநாட்டு விடுமுறைக்கான அனுமதி வழங்கல், அதை நீடித்தல், ரத்து செய்தல் போன்ற அதிகாரம் சகல மாகாண கல்வி பணிப்பாளருக்கும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

06 மாதத்திற்கு மேற்பட்ட வெளிநாட்டு விடுமுறையாயின் கல்வி அமைச்சிடமே அனுமதி பெற வேண்டும். 
 

குறித்த சுற்றறிக்கை கடிதத்தை முழுமையாக பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.

Previous:
 

குறுகிய கால தனிப்பட்ட வெளிநாட்டு விடுமுறைக்கு அனுமதி வழங்கல் குறுகிய கால தனிப்பட்ட வெளிநாட்டு விடுமுறைக்கு அனுமதி வழங்கல் Reviewed by Irumbu Thirai News on April 01, 2024 Rating: 5

No comments:

Powered by Blogger.