Results for Local News

54 தேசிய பாடசாலைகளுக்கு அதிபர்களை நியமிப்பதில் சிக்கல் - கல்வி அமைச்சர்

February 14, 2024


அரச சேவைகள் ஆணைக்குழுவின் செயற்பாடு காரணமாக 54 தேசிய பாடசாலைகளுக்கு அதிபர்களை நியமிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த தெரிவித்துள்ளார். 

ஓய்வு பெற்ற நபர்களை சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு நியமிப்பதன் மூலம் அதன் பணி வினைத்திறனற்றதாக மாறியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது, 

54 அதிபர் நியமனம் தொடர்பாக நாம் 06 மாதங்களாக முயற்சித்து வருகிறோம். ஆனால் பொதுச்சேவை ஆணைக்குழு அதற்கு இன்னமும் அங்கீகாரம் வழங்கவில்லை. இந்த சுயாதீன ஆணைக் குழுக்கள் உருவாக்கப்பட்டாலும் ஓய்வு பெற்றவர்களை அதற்கு நியமிப்பதன் மூலம் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது. இது தொடர்பாக விரைவில் பாராளுமன்றத்தில் விசேட உரை ஒன்றை ஆற்றவுள்ளேன். நாம் அனுமதி கேட்டு ஆறு மாதங்கள் ஆகிறது. ஒவ்வொரு வாரமும் அனுமதி தருகிறோம் என கூறுகின்றனர். ஆனால் அனுமதி தருவதில்லை. இப்படியான சுயாதீன ஆணை குழுக்கள் எவ்வளவு தோல்வியில் இருக்கின்றன என்பதை பாருங்கள் என்று தெரிவித்தார். 

இதே வேளை உயர்தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பிலும் கருத்துக்களை வெளியிட்டார். 

அதாவது, சாதாரண தர பரீட்சை ஆரம்பிப்பதற்கு முன்னர் உயர்தர பரீட்சை பெறுபேறுகளை வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும். உயர்தர வினாத்தாள்கள் இன்னும் மதிப்பீடு செய்யப்படுகிறது. பெப்ரவரி இறுதிக்குள் அந்தப் பணிகள் நிறைவடையும். பிரயோக பரீட்சைகளும் இடம்பெற உள்ளன. இவை அனைத்தும் நிறைவடைந்ததன் பின்னர் உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படும் என அவர் தெரிவித்தார்.
 
 
 
Previous:


54 தேசிய பாடசாலைகளுக்கு அதிபர்களை நியமிப்பதில் சிக்கல் - கல்வி அமைச்சர் 54 தேசிய பாடசாலைகளுக்கு அதிபர்களை நியமிப்பதில் சிக்கல் - கல்வி அமைச்சர் Reviewed by Irumbu Thirai News on February 14, 2024 Rating: 5

NIC தொடர்பில் சாதாரண தர பரீட்சார்த்திகளுக்கான முக்கிய அறிவித்தல்

February 14, 2024


ஆட்பதிவு திணைக்களமானது தேசிய அடையாள அட்டை உறுதிப்படுத்தல் கடிதம் தொடர்பான விசேட அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

அதாவது சாதாரண தர பரீட்சை 2023 (2024) க்கு தோற்றுவதற்காக அடையாள அட்டைக்கு விண்ணப்பித்து இன்னும் உறுதிப்படுத்தல் கடிதம் கிடைக்கப் பெறாத மாணவர்கள் ஆட்பதிவு திணைக்களத்திற்கு செல்லாமல் Online முறையில் அந்த கடிதங்களை பெற்றுக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பித்த 01-02-2005 முதல் 31-01-2008 வரை பிறந்த குறித்த விண்ணப்பதாரர்களுக்கான தகவல் உறுதிப்படுத்தல் கடிதம் தற்போது அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளது. 

விண்ணப்பதாரர் விண்ணப்ப படிவத்தில் சரியான முகவரியை குறிப்பிடாமல் இருந்தாலும் அல்லது வேறு ஏதேனும் காரணங்களுக்காக அதை பெறவில்லை என்றாலும் ஆட்பதிவு திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளத்திற்கு சென்று குறித்த கடிதத்தை பதிவிறக்கம் செய்யும் வசதி செய்யப்பட்டுள்ளது. 

உறுதிப்படுத்தல் கடிதத்தை பதிவிறக்கம் செய்ய விண்ணப்பதாரர் விண்ணப்ப எண் மற்றும் விண்ணப்பத்தில் வழங்கப்பட்ட தொலைபேசி இலக்கத்திற்கு அனுப்பப்படும் OTP குறியீட்டு இலக்கத்தை உட்செலுத்தி குறித்து ஆவணத்தை வர்ண அச்சுப் பிரதி (Colour Print) எடுக்குமாறு திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடிதத்தை பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.
 
 

 

Previous:
 
NIC தொடர்பில் சாதாரண தர பரீட்சார்த்திகளுக்கான முக்கிய அறிவித்தல் NIC தொடர்பில் சாதாரண தர பரீட்சார்த்திகளுக்கான முக்கிய அறிவித்தல் Reviewed by Irumbu Thirai News on February 14, 2024 Rating: 5

O/L (2023) மற்றும் A/L (2024) தொடர்பான புதிய அறிவிப்பு

February 14, 2024
 

2023 ம் வருடத்திற்குரிய சாதாரண தர பரீட்சை மற்றும் 2024 ஆம் வருடத்திற்குரிய உயர்தர பரீட்சை தொடர்பில் கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜாயந்த கல்வி அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது கருத்துக்களை தெரிவித்துள்ளார். 
 
அதாவது 2023 ஆம் வருடத்திற்குரிய சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் மே- ஜூன் மாதங்களில் இடம்பெறும் எனவும் 2024 ஆம் ஆண்டுக்கான உயர்தர பரீட்சை எதிர்வரும் டிசம்பர் மாதத்தில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 
 
இதே வேளை 2025 ஆம் வருடத்திற்கான புதிய கல்வி ஆண்டு ஜனவரி 2ஆம் திகதி ஆரம்பமாகும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
 
 
Previous:

O/L (2023) மற்றும் A/L (2024) தொடர்பான புதிய அறிவிப்பு O/L (2023) மற்றும் A/L (2024) தொடர்பான புதிய அறிவிப்பு Reviewed by Irumbu Thirai News on February 14, 2024 Rating: 5

அஸ்வெசும திட்டத்திற்கான புதிய விண்ணப்பங்கள் நாளை முதல்...

February 09, 2024


அஸ்வெசும திட்டத்தில் புதிய பயனாளர்களை இணைத்துக் கொள்வதற்காக நாளை (10) முதல் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும் என பதில் நிதி அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். 
 
பல்வேறு தரப்பினரிடமிருந்து பெறப்பட்ட ஆலோசனைகளின் அடிப்படையில், பயனாளிகளை தெரிவு செய்வதில் கருத்திற் கொள்ளப்பட்ட சில நிபந்தனைகளை திருத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 
 
இதற்கு முன்னர் குடும்பங்களை தேர்ந்தெடுக்க பயன்படுத்திய விதிமுறைகளின் அடிப்படையில் யாராவது இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியாமல் போயிருந்தால் அவர்களும் நாளை முதல் விண்ணப்பிக்கலாம். 4 லட்சம் புதிய பயனாளிகளை தெரிவு செய்வதற்காகவே நாளை முதல் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். 
 
More Details... Hotline: 1924 
 
Aswesuma official website...
 

ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் உங்கள் விண்ணப்பத்தின் நிலை, இந்த திட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளீர்களா? அதன் விபரம் போன்றவற்றை அறிய கீழுள்ள லிங்கை கிளிக் செய்து உங்கள் தே. அடையாள அட்டை இலக்கம் அல்லது உங்களுக்கான பிரத்தியேக குறியீட்டு இலக்கத்தை வழங்கி விபரங்களை அறிந்துகொள்ளவும்.






Previous:
 

அஸ்வெசும திட்டத்திற்கான புதிய விண்ணப்பங்கள் நாளை முதல்... அஸ்வெசும திட்டத்திற்கான புதிய விண்ணப்பங்கள் நாளை முதல்... Reviewed by Irumbu Thirai News on February 09, 2024 Rating: 5

உயர்தர கணக்கீடு பரீட்சையின் போது மாணவர்களுக்கு அநீதி: பெற்றோர் விசனம்!

January 21, 2024


2023 ற்கான உயர்தர பரீட்சை தற்போது நடைபெறுகிறது. இதில் கணக்கீடு பகுதி - 1 ற்கான பரீட்சையின் போது மாணவர்கள் கணிப்பான்களை பயன்படுத்துவதில் பிரச்சனைகளை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

காலி பிரதேசத்தில் உள்ள பரீட்சை நிலையம் ஒன்றிலேயே இவ்வாறான நிகழ்வு இடம்பெற்றுள்ளது. 

மாணவர்கள் பரீட்சை எழுதிக் கொண்டிருக்கும்போது பரீட்சை நிலைய பொறுப்பதிகாரி கணிப்பான்களை எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.. அதன் பின்னர் உயர் அதிகாரிகளுக்கு தகவல் வழங்கப்பட்டதை தொடர்ந்து சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு மாணவர்களுக்கு மீண்டும் கணிப்பான்கள் வழங்கப்பட்டுள்ளன.

பரீட்சை மண்டபத்திற்குள் அங்கீகரிக்கப்படாத கணிப்பான் வகைகளை கொண்டு வந்ததாலேயே இவ்வாறான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. 

கணிப்பான்களை மீண்டும் வழங்கியதன் பின்னர் மாணவர்களுக்கு மேலதிக நேரம் வழங்கப்படவில்லை என மாணவர்களின் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர். 

எனவே இந்த நிகழ்வினால் தமது பிள்ளைகளுக்கு பெரும் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக குறித்த பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.
 
 
 
 
Previous:



உயர்தர கணக்கீடு பரீட்சையின் போது மாணவர்களுக்கு அநீதி: பெற்றோர் விசனம்! உயர்தர கணக்கீடு பரீட்சையின் போது மாணவர்களுக்கு அநீதி: பெற்றோர் விசனம்! Reviewed by Irumbu Thirai News on January 21, 2024 Rating: 5

அதிகரித்துவரும் மாணவர் இடைவிலகல்

January 21, 2024


தற்போதைய நிலையில் அதிகரித்துள்ள வாழ்க்கைச் செலவு காரணமாக பெருந்தோட்ட பகுதிகளில் உள்ள மாணவர்கள் பலர் பாடசாலை கல்வியிலிருந்து இடைவிலகி உள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், மத்திய மாகாணத்தில் மாத்திரம் கடந்த வருடத்தில் 1989 மாணவர்கள் பாடசாலை கல்வியிலிருந்து இடைவிலகியுள்ளனர். இதில் நுவரெலியா மாவட்டத்தில் 570 மாணவர்களும் கொத்மலையில் 319, கம்பளையில் 250, ஹட்டனில் 541 மாணவர்களும் பாடசாலை கல்வியிலிருந்து இடை விலகி உள்ளனர். தற்போதைய பொருளாதார நிலை காரணமாக பாடசாலை கல்வியிலிருந்து மாணவர்கள் இடைவிலகுவது அதிகரித்த வண்ணம் இருப்பதாக அவர் தெரிவித்தார்.
அதிகரித்துவரும் மாணவர் இடைவிலகல் அதிகரித்துவரும் மாணவர் இடைவிலகல் Reviewed by Irumbu Thirai News on January 21, 2024 Rating: 5

சுற்றறிக்கையை மீறிய 51 ஆசிரியர்கள் இடமாற்றம்!

January 17, 2024


சுற்றறிக்கையை மீறிய 51 ஆசிரியர்களை இடமாற்றம் செய்ய மத்திய மாகாண கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. 

தாம் கற்பிக்கும் மாணவர்களுக்கு பணம் வசூலித்து மேலதிக வகுப்புகளை நடத்த கூடாது என்று மத்திய மாகாணத்தில் சுற்றறிக்கை வெளியிடப்பட்டிருந்தது. பெற்றோர்களிடமிருந்து கிடைத்த முறைப்பாடுகளை தொடர்ந்தே இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. 

இந்த நிலையில், இந்த சுற்றறிக்கையை மீறும் வகையில் சில ஆசிரியர்கள் மேலதிக வகுப்புக்களை நடத்துவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை நடவடிக்கைகள், சுற்றி வளைப்புகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்காக மத்திய மகாண கல்வி அமைச்சு விசேட சுற்றி வளைப்பு பிரிவை நிறுவி உரிய இடங்களில் சோதனையும் நடத்தியது. 

சுற்றி வளைப்பிற்காக அமைக்கப்பட்ட விசேட குழு உரிய இடங்களுக்கு சென்று முறையாக விசாரணைகளையும் மேற்கொண்டது. 

இதன் போது சில ஆசிரியர்கள் தாம் கற்பிக்கும் மாணவர்களுக்கு மேலதிக வகுப்பில் பங்கேற்குமாறு அழுத்தம் கொடுப்பதாகவும் மத்திய மாகாண கல்வி அமைச்சுக்கு தகவல் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இந்த நிலையிலேயே இவ்வாறு சுற்றறிக்கையை மீறும் வகையில் மேலதிக வகுப்புகளை பணம் வசூலித்து நடாத்திய 51 ஆசிரியர்கள் வேறு பாடசாலைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டதாக மத்திய மாகாண கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.


Previous:
 
சுற்றறிக்கையை மீறிய 51 ஆசிரியர்கள் இடமாற்றம்! சுற்றறிக்கையை மீறிய 51 ஆசிரியர்கள் இடமாற்றம்! Reviewed by Irumbu Thirai News on January 17, 2024 Rating: 5
Powered by Blogger.