சச்சின் டெண்டுல்காரின் 30 வருட கால சாதனையை முறியடித்த வீராங்கனை
irumbuthirai
November 12, 2019
சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இந்தியாவின் சார்பில் குறைந்த வயதில் அரைச் சதத்தை பெற்றுக்கொண்ட வீரராக சச்சின் டெண்டுல்கார் நிலைநாட்டியிருந்த சாதனையை 30 வருடங்களுக்கு பின்னர் 15 வயதான 
ஷாபாளி வர்மா (Shafali Verma) என்ற வீராங்கனை முறியடித்துள்ளார்.
மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணிகளுக்கு எதிராக நடைபெற்ற ரி-20 போட்டியிலேயே இந்த இளம் வீராங்கனை இந்த சாதனையை நிலைநாட்டியுள்ளார். இந்தியாவின் சார்பில் ரி-20 போட்டியில் கலந்துகொண்ட ஆகக்குறைந்த 
வயதைக்கொண்ட வீராங்கனை என்ற பெயரையும் இவர் பெற்றுள்ளார்.
1989 ஆம் ஆண்டில் பாகிஸ்தானில் நடைபெற்ற போட்டியில் சச்சின் டெண்டுல்கார் 50 ஓட்டங்களைப் பெற்ற போது அவருக்கு 16 வயதாகும் என்பது குறிப்பிடத்தக்கது. 
(அ.த.தி)
சச்சின் டெண்டுல்காரின் 30 வருட கால சாதனையை முறியடித்த வீராங்கனை
 Reviewed by irumbuthirai
        on 
        
November 12, 2019
 
        Rating:
 
        Reviewed by irumbuthirai
        on 
        
November 12, 2019
 
        Rating: 
 Reviewed by irumbuthirai
        on 
        
November 12, 2019
 
        Rating:
 
        Reviewed by irumbuthirai
        on 
        
November 12, 2019
 
        Rating: 
 


 

 

 

 

 

 

 

 

 

 

 
 
 
