சுகாதார அமைச்சு உட்பட ஏழு அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்கள்
irumbuthirai
May 12, 2020
சுகாதார அமைச்சு உட்பட ஏழு அமைச்சரவை அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி ஊடக பிரிவு நேற்று (11) வெளியிட்ட ஊடக அறிக்கையில் புதிய செயலாளர்களின் பெயரும் உரிய அமைச்சும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில் சுகாதார அமைச்சுக்கு மேஜர் ஜெனரல் சஞ்சீவ முனசிங்கவும் மகாவலி, விவசாய, நீர்ப்பாசன மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சுக்கு மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) ஏ.கே.எஸ். பெரேராவும் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
புதிய செயலாளர்களின் விபரம் வருமாறு:
1. திருமதி எஸ்.எம். மொஹம்மட்
நீதி, மனித உரிமைகள் மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சு
2. திரு. ஜே.ஜே ரத்னசிறி
பொது நிர்வாக, உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சு
3. திரு. எஸ். ஹெட்டியாரச்சி
சுற்றுலா மற்றும் விமான சேவைகள் அமைச்சு
4. திரு. எச்.கே.டீ.டபிள்யு.எம்.என்.பீ. ஹபுஹின்ன
மகளிர், சிறுவர் விவகார மற்றும் சமூக பாதுகாப்பு அமைச்சு
5. திருமதி ஜே.எம்.பீ. ஜயவர்த்தன
உள்ளக வர்த்தகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் நுகர்வோர் நலன்பேணல் அமைச்சு
6. மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) ஏ.கே.எஸ். பெரேரா
மகாவலி, விவசாய, நீர்ப்பாசன மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சு
7. மேஜர் ஜெனரல் சஞ்சீவ முனசிங்க
சுகாதார மற்றும் சுதேச மருத்துவ சேவைகள் அமைச்சு
சுகாதார அமைச்சு உட்பட ஏழு அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்கள்
Reviewed by irumbuthirai
on
May 12, 2020
Rating:
Reviewed by irumbuthirai
on
May 12, 2020
Rating:













