பாடசாலைகளுக்கு 4G வசதி
irumbuthirai
June 23, 2021
அடுத்த 02 வருடங்களில் 4G தொழில்நுட்பத்துடன் 10,000 பாடசாலைகளை மேம்படுத்தும் திட்டங்கள் அடங்கிய அமைச்சரவைப் பத்திரம் தற்போது தயாரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் (21) அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அத்துடன் சரியான திட்டமின்றி சில பகுதிகளில் தொலைபேசி நிறுவனங்களால் தொலைபேசி கோபுரங்கள் கட்டப்படுவதால்
கிராமப்புறங்களில் மாணவர்கள் Online கல்வியை பெறுவதில் பிரச்சினைகள் எழுந்துள்ளது என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
பாடசாலைகளுக்கு 4G வசதி
Reviewed by irumbuthirai
on
June 23, 2021
Rating:
Reviewed by irumbuthirai
on
June 23, 2021
Rating:














