அடுத்த வருடம் முதல் தரம்: 01 ற்கு அனுமதிக்கும் மாணவர் எண்ணிக்கையில் மாற்றம் (புதிய, பழைய சுற்றறிக்கைகள் இணைப்பு)
irumbuthirai
July 10, 2021
2022 முதல் தரம் 01ற்கு அனுமதிக்கப்படும் மாணவர் எண்ணிக்கையை 40 ஆக அதிகரித்து கல்வியமைச்சு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.
13/2021 என்ற இலக்கம் கொண்ட 28-05-2021 திகதியிடப்பட்ட சுற்றறிக்கை மூலம் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர் எண்ணிக்கை:
இந்த புதிய சுற்றறிக்கையின் படி நேர்முகப் பரீட்சையின் மூலம் 35 மாணவர்களும் யுத்த நடவடிக்கை கடமையினருக்கான சலுகையின் கீழ் 5 மாணவர்களும் ஆக மொத்தம் 40 மாணவர்களை இணைத்துக் கொள்ளப்படுவர்.
ஆனால் பழைய சுற்றறிக்கையின்படி மாணவர் எண்ணிக்கை 35 ஆக வரையறுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பாடசாலைக்கான தூரத்தை கணிக்கும் முறை:
விண்ணப்பதாரரின் வீட்டு வாசலிலிருந்து ஆரம்பப்பிரிவு காரியாலயத்திற்கு உள்ள வான்வழி தூரத்தை ஆரையாகக் கொண்டு வரையப்படும் வட்டத்திற்குள்ளே அமைந்துள்ள பாடசாலைகளுக்கு புள்ளிகள் குறைக்கப்படும்.
ஆரம்ப பிரிவானது பாடசாலையிலிருந்து புறம்பாக வேறு வளாகத்தில் நடத்தப்படுமாயின் அந்த ஆரம்ப பிரிவின் அலுவலகம் வரையே தூரம் பார்க்கப்பட வேண்டும். மாறாக பிரதான பாடசாலை அலுவலகத்தை பார்க்க முடியாது.
புதிய சுற்றறிக்கையை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.
பழைய சுற்றறிக்கையை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.
அடுத்த வருடம் முதல் தரம்: 01 ற்கு அனுமதிக்கும் மாணவர் எண்ணிக்கையில் மாற்றம் (புதிய, பழைய சுற்றறிக்கைகள் இணைப்பு)
Reviewed by irumbuthirai
on
July 10, 2021
Rating:
