எல்லா வகையிலும் கல்வி பாதிக்கப்பட்ட மாணவர்கள்: உயர்தரப் பரீட்சை பிற்போடப்படுமா? அமைச்சர் வெளியிட்ட தகவல்


ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன இன்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி எல் பீரிசிடம் பாராளுமன்றத்தில் சில கேள்விகளை முன்வைத்தார். அதாவது, 
இந்த வருடம் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவிருக்கும் மாணவர்கள் தமது சாதாரண தரப் பரீட்சை எழுதியதில் இருந்து பல்வேறு சிரமங்களையும் பிரச்சினைகளையும் எதிர்கொண்டவர்கள். 
2018 இல் சா.தர பரீட்சை எழுதிய இவர்களுக்கு 2019இல் 
இடம்பெற்ற குண்டுத் தாக்குதல் காரணமாக உரிய நேரத்துக்கு உயர் தரத்தை ஆரம்பிக்க முடியவில்லை. 
இவர்களின் உயர்தரம் ஆரம்பித்ததில் இருந்து இதுவரை கொரோனா பிரச்சினை காரணமாக கல்வி நடவடிக்கைகள் முழுமையாக பாதிப்படைந்தன. 
எனவே இவர்களின் பரீட்சையை பிற்போட மாட்டீர்களா? என்ற கோரிக்கை எம்மிடம் முன்வைக்கப்படுகின்றது. அந்த கோரிக்கை உங்களிடமும் முன்வைக்கப்பட்டிருக்கலாம். எனவே இவர்களது பரீட்சை பிற்போடப்படுமா? என்ற கேள்வியை முன்வைத்தார். 
இதற்கு பதிலளித்த கல்வி அமைச்சர் G.L. பீரிஸ் அவர்கள், 
மாணவர்களுக்கு அநீதி இழைக்காத வகையில் பரீட்சையை பிற்போடுவதா என்ற தீர்மானம் எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
எல்லா வகையிலும் கல்வி பாதிக்கப்பட்ட மாணவர்கள்: உயர்தரப் பரீட்சை பிற்போடப்படுமா? அமைச்சர் வெளியிட்ட தகவல் எல்லா வகையிலும் கல்வி பாதிக்கப்பட்ட மாணவர்கள்: உயர்தரப் பரீட்சை பிற்போடப்படுமா? அமைச்சர் வெளியிட்ட தகவல் Reviewed by irumbuthirai on July 08, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.