Courses: Sri Lanka Institute of Tourism and Hotel Management

December 23, 2020

Courses at the Sri Lanka Institute of Tourism and Hotel Management. 
Closing date of application: 27-12-2020. 
See the details below.


Courses: Sri Lanka Institute of Tourism and Hotel Management Courses: Sri Lanka Institute of Tourism and Hotel Management Reviewed by irumbuthirai on December 23, 2020 Rating: 5

நாளை முதல் மேல் மாகாணத்திலிருந்து வெளியேறும் சகலருக்கும் பரிசோதனை..

December 22, 2020

மேல் மாகாணத்திலிருந்து வௌியேறும் சகலரும் நாளை (23) முதல் ரேபிட் ஆன்டிஜென் (Rapid Antigen) பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். 
குறித்த இந்த பரிசோதனைகள் அதிவேக நெடுஞ்சாலைகள் உட்பட 
11 இடங்களில் இடம்பெறவுள்ளதாக அவர் மமேலும் தெரிவித்தார்.
நாளை முதல் மேல் மாகாணத்திலிருந்து வெளியேறும் சகலருக்கும் பரிசோதனை.. நாளை முதல் மேல் மாகாணத்திலிருந்து வெளியேறும் சகலருக்கும் பரிசோதனை.. Reviewed by irumbuthirai on December 22, 2020 Rating: 5

இலங்கைக்கு கொரோனா தடுப்பூசிகளைக் கொண்டுவரும் அதிகாரம் லலித் வீரதுங்கவிற்கு...

December 22, 2020

அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா உள்ளிட்ட பல நாடுகளில் Covid-19 தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த தடுப்பூசிகள் பற்றி விரிவாக ஆராய்ந்ததன் பின்னர், குறித்த நாடுகள் மற்றும் இலங்கையின் சுகாதார அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து தேவையான நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க அவர்களுக்கு அதிகாரமளிக்கப்பட்டுள்ளது. 
இதேவேளை தடுப்பூசி வழங்கப்பட வேண்டிய குழுக்கள் பற்றி, 
தேவை மற்றும் முன்னுரிமை அடிப்படையில் தீர்மானிக்கப்படும். தோட்டங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் விடுதிகள் உட்பட நோய் பரவும் அதிக ஆபத்தில் உள்ள இடங்கள் மற்றும் குழுக்கள் பற்றிய தரவுகளை சேகரிக்கவும் முடிவு செய்யப்பட்டது. 
ஜனாதிபதி அலுவலகத்தில் தினமும் கூடும் கோவிட் குழுவுடனான இன்றைய (22) சந்திப்பின் போதே மேற்படி தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
இலங்கைக்கு கொரோனா தடுப்பூசிகளைக் கொண்டுவரும் அதிகாரம் லலித் வீரதுங்கவிற்கு... இலங்கைக்கு கொரோனா தடுப்பூசிகளைக் கொண்டுவரும் அதிகாரம் லலித் வீரதுங்கவிற்கு... Reviewed by irumbuthirai on December 22, 2020 Rating: 5

புதிய வகை கொரோனா.... நாளை முதல் அமுலாகும் தடை...

December 22, 2020

கடந்த சில நாட்களாக இங்கிலாந்தில் புதிய வகையான கொரானா வைரஸ் பரவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இது முன்னரை காட்டிலும் வீரியம் அதிகம் என்பதுடன் விரைவாகவும் பரவி வருகிறது. 
இந்த அபாய நிலையை கருத்திற்கொண்டு ஏற்கனவே சுமார் 
60 நாடுகள் பிரித்தானியாவில் இருந்து வரும் விமானங்களுக்கு தடை விதித்துள்ளன. 
அந்த வகையில் இலங்கையும் நாளை (23) முதல் மறு அறிவித்தல் வரை பிரித்தானியாவில் இருந்து வரும் விமானங்களுக்கு தடை விதித்துள்ளது. 
Covid-19 தடுப்பு தொடர்பில் இன்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்திலேயே இந்த தீர்மானத்தை ஜனாதிபதி எடுத்தார்.
புதிய வகை கொரோனா.... நாளை முதல் அமுலாகும் தடை... புதிய வகை கொரோனா....  நாளை முதல் அமுலாகும் தடை... Reviewed by irumbuthirai on December 22, 2020 Rating: 5

அமெரிக்காவின் அவலம்... 33 வினாடிகளுக்கு ஒரு மரணம்....

December 22, 2020

கொரோனா தொடர்பான பாதிப்புகளை அதிகம் சந்தித்த நாடாக இன்றும் ஐக்கிய அமெரிக்கா இருந்து வருகிறது. 
 அங்கு 33 வினாடிகளுக்கு ஒரு கொரோனா மரணம் நிகழ்வதாக தெரிவிக்கப்படுகிறது. இன்றைய தினம் (22) வரை அங்கு 327,172 மொத்த மரணங்கள் நிகழ்ந்துள்ளன. இதுவரை 
ஒரு கோடியே 84 லட்சத்து 94 ஆயிரத்து 339 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. 
இதேவேளை வருட இறுதி விடுமுறையில் பயணங்களை தவிர்க்குமாறு சுகாதாரத் தரப்பினர் அறிவித்தும் கடந்த வார இறுதி நாட்களில் சுமார் 32 லட்சம் பேர் அமெரிக்க விமான நிலையங்களுக்கு சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்காவின் அவலம்... 33 வினாடிகளுக்கு ஒரு மரணம்.... அமெரிக்காவின் அவலம்... 33 வினாடிகளுக்கு ஒரு மரணம்.... Reviewed by irumbuthirai on December 22, 2020 Rating: 5

21-12-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள்

December 22, 2020

21-12-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை (Cabinet Decisions) இங்கு தருகிறோம். 
இதில், 
பல முக்கிய தீர்மானங்கள் அடங்கியுள்ளன. 
இதன் முழு வடிவத்தைப் பெற கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.
21-12-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் 21-12-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் Reviewed by irumbuthirai on December 22, 2020 Rating: 5

பட்டதாரி நியமனம் பெற்றவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டம்

December 22, 2020

அண்மையில் பட்டதாரி நியமனம் பெற்று பயிற்சியில் ஈடுபட்டுள்ளவர்கள் நேற்று (21) கண்டி, மாத்தளை மற்றும் காலி ஆகிய பிரதேசங்களில் எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
தமது தொழில்களை பயிற்சிக்கு சேர்த்துக் கொள்ளப்பட்ட நாள் முதலே நிரந்தரமாக்கி தரும்படி கோரியே அவர்கள் இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பட்டதாரி நியமனம் பெற்றவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டம் பட்டதாரி நியமனம் பெற்றவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டம் Reviewed by irumbuthirai on December 22, 2020 Rating: 5

வெளியானது கல்வியமைச்சின் அறிவித்தல்: ஜன. 11 இலேயே முதலாம் தவணை ஆரம்பம்: (ஊடக அறிக்கை இணைப்பு)

December 22, 2020

மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களை தவிர்ந்த ஏனைய பிரதேச பாடசாலைகள் அடுத்த வருடம் ஜனவரி 11ஆம் திகதியே ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு வெளியிட்ட ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
அன்றைய தினமே தரம் 1 முதல் 5 வரையான வகுப்புகளும் ஆரம்பமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
அதேவேளை குறித்த பிரதேசங்களில் பாலர் பாடசாலைகள் மற்றும் குழந்தை பராமரிப்பு நிலையங்கள் (Day Care Centres) மீள ஆரம்பிப்பதற்கான அனுமதி ஜன. 11 முதலே வழங்கப்பட்டுள்ளது. 
 மேலும் மூன்றாம் தவணை விடுமுறை 24ஆம் திகதி முதல் ஆரம்பமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. (நாளை 23 பாடசாலை நடைபெறும்) 
இது தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையை கீழே தருகிறோம்.



வெளியானது கல்வியமைச்சின் அறிவித்தல்: ஜன. 11 இலேயே முதலாம் தவணை ஆரம்பம்: (ஊடக அறிக்கை இணைப்பு) வெளியானது கல்வியமைச்சின் அறிவித்தல்: ஜன. 11 இலேயே முதலாம் தவணை ஆரம்பம்:  (ஊடக அறிக்கை இணைப்பு) Reviewed by irumbuthirai on December 22, 2020 Rating: 5

சமூக ஊடக பாவனையாளர்கள் பதிவு செய்யப்பட வேண்டுமா? அமைச்சர் கெஹெலிய வெளியிட்ட அறிக்கை..

December 22, 2020

ஊடக ஒழுங்குமுறை தொடர்பாக தான் தெரிவித்த கருத்து முற்றிலும் மாறுபட்ட விதத்தில் பரப்பப்பட்டு வருவதாக வெகுஜன ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார். 
அதில் அவர் மேலும் தெரிவித்ததாவது, 
வெளிநாட்டு டிஜிட்டல் நடவடிக்கையாளர்களை பதிவு செய்வதாகவே கூறப்பட்டது. மாறாக இங்குள்ள சமூக ஊடக மற்றும் டிஜிட்டல் பாவனையாளர்களை பதிவு செய்வதாக கூறப் படவில்லை. 
இந்த Digital  பன்னாட்டு நிறுவனங்கள் உள்ளூர் வணிகங்களை 
பெரிதும் பாதிப்பதாகவும் நடுத்தர நிறுவனங்களை நேரடியாக பாதிப்பதாகவும் அமைகிறது. அதேவேளை இந்த வெளிநாட்டு டிஜிட்டல் தளங்கள் மூலம் நாட்டை விட்டு பெருந்தொகையான பணம் வெளியேறுவதற்கு வழிவகுக்கிறது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக பாவனையாளர்கள் பதிவு செய்யப்பட வேண்டுமா? அமைச்சர் கெஹெலிய வெளியிட்ட அறிக்கை.. சமூக ஊடக பாவனையாளர்கள் பதிவு செய்யப்பட வேண்டுமா? அமைச்சர் கெஹெலிய வெளியிட்ட அறிக்கை.. Reviewed by irumbuthirai on December 22, 2020 Rating: 5

நீதிமன்றத்தில் ஏற்பட்ட தீயிற்கு காரணம் மின்சார கசிவு இல்லை..

December 22, 2020

கொழும்பு, புதுக்கடை உயர்நீதிமன்ற வளாகத்தில் கடந்த 15 ஆம் திகதி ஏற்பட்ட தீயிற்கு காரணம் மின்சார கசிவு இல்லை என மின்சார சபை அறிவித்ததாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 
குறித்த சம்பவம் தொடர்பில் நீதிமன்ற வளாகத்தின் பணியாளர்கள் 
உட்பட மேலும் பலரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. 
இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பில் அரச இரசாயன பகுப்பாய்வாளரின் அறிக்கை இன்னும் கிடைக்கப் பெறவில்லை என குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நீதிமன்றத்தில் ஏற்பட்ட தீயிற்கு காரணம் மின்சார கசிவு இல்லை.. நீதிமன்றத்தில் ஏற்பட்ட தீயிற்கு காரணம் மின்சார கசிவு இல்லை.. Reviewed by irumbuthirai on December 22, 2020 Rating: 5

Vacancies: University Grants Commission

December 20, 2020

Vacancies in the University Grants Commission. 
Closing date: 31-12-2020. 
See the details below.
Source: 13-12-2020 Sunday Observer.

Vacancies: University Grants Commission Vacancies: University Grants Commission Reviewed by irumbuthirai on December 20, 2020 Rating: 5

Vacancies: University of Sri Jayewardanapura

December 20, 2020

Vacancies in the University of Sri Jayewardanapura.
Closing date: 05-01-2021.
See the details below.
Source: 13-01-2020 Sunday Observer.

Vacancies: University of Sri Jayewardanapura Vacancies: University of Sri Jayewardanapura Reviewed by irumbuthirai on December 20, 2020 Rating: 5

Vacancies: Bureau of the Commissioner General of Rehabilitation

December 20, 2020

Vacancies in the Bureau of the Commissioner General of Rehabilitation. 
Closing date: 15-01-2021. 
See the details below.
Source : 13-12-2020 Sunday Observer.

Vacancies: Bureau of the Commissioner General of Rehabilitation Vacancies: Bureau of the Commissioner General of Rehabilitation  Reviewed by irumbuthirai on December 20, 2020 Rating: 5
Powered by Blogger.