Advanced Certificate Course in Data Analysis for Social Scientists - 2021

September 08, 2021
 

University of Sri Jayawardenapura. 

Advanced Certificate Course in Data Analysis for Social Scientists - 2021 

 

Introduction

There is an unprecedented demand for technology companies, financial services, government and not-for-profit organizations for graduates who can effectively analyze data. The Advanced Certificate in Data Analysis for Social Scientists will introduce the essential notions of probability and statistics. Also, it will cover techniques in modern data analysis: estimation, regression and econometrics, prediction, experimental design, etc. It will illustrate these concepts with applications drawn from real world examples and frontier research. Finally, it will provide instruction on how to use statistical packages such as SPSS, EViews, R and opportunities for students to perform self-directed empirical analyses. 
 
Therefore, the advanced certificate course will help students gain a critical understanding of the strengths of quantitative research, and acquire practical skills using different methods and tools to answer relevant social science questions. 
 

 
 

Entry Qualifications: 

Reading Business Statistics as a Subject in General Certificate of Education (Advance Level). 
 
or 
 
Passing at least two subjects in General Certificate of Education (Advance Level). 
 
or 
 
Obtaining a qualification equivalent to above two in any field of study. 
 
 
Duration: 06 Months 
 
Lectures and Practical Sessions: Saturday, From 8 a.m. to 4 p.m. 
 
Medium: English 
 
Course Fee (including application fee): Rs. 40,000 
 
Application Deadline: 30/09/2021
 
 
Click the link below for Full details:

Click the link below for online application:
 
 
 
கற்கைநெறிகள் மற்றும் கல்வி சம்பந்தமான ஏனைய பதிவுகளுக்கு..
Advanced Certificate Course in Data Analysis for Social Scientists - 2021 Advanced Certificate Course in Data Analysis for Social Scientists - 2021 Reviewed by Irumbu Thirai News on September 08, 2021 Rating: 5

அரசாங்கம் 5000 ரூபா கொடுப்பணவு தந்தால் என்ன செய்வது? புதுவடிவம் பெறும் தொழிற்சங்க போராட்டம்!

September 08, 2021
 

எமக்கு இரண்டு மாதங்களுக்கு தருவதாக கூறும் அந்த இடைக்கால கொடுப்பனவை வேண்டாம் என்று கூறியும் அரசாங்கம் அதை பலவந்தமாக தர முயற்சிப்பதாக தெரிகிறது. அவ்வாறு அதை தரும் பட்சத்தில் என்ன நடவடிக்கைகளை மேற்கொள்வது என்ற தீர்மானம் விரைவில் அறிவிக்கப்படும் என இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் செயலாளர் மகிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார். 
 
தனது முகநூல் பக்கத்திலேயே அவர் இன்றைய தினம் இவ்வாறு தெரிவித்துள்ளார். 
 
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, 
 
எமக்கு இரு மாதங்கள் தருவதாக கூறும் அந்த இடைக்கால கொடுப்பனவை கொவிட் ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக எடுத்துக் கொள்ளுமாறு கூறியும் அதை பலவந்தமாக அரசாங்கம் தர முயற்சிப்பதாக தெரிகிறது. நேற்றைய தினமும் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது இந்த கொடுப்பனவு இந்த மாத சம்பளத்துடன் வழங்கப்படும் என கூறப்பட்டது.
 
இன்னும் ஒருசில தினங்களில் இந்த கொடுப்பனவு இந்த மாத சம்பளத்துடன் சேர்க்கப்பட்டுள்ளதா என வலயக்கல்வி காரியாலயங்கள் ஊடாக அறிந்து கொள்ளலாம். அவ்வாறு 5000 ரூபாய் சேர்க்கப்பட்டு இருந்தால் அதை என்ன செய்வது என்ற தீர்மானம் ஏனைய தொழிற்சங்கங்களோடு ஒன்றிணைந்து நாம் விரைவாக எடுக்க இருக்கிறோம். அதன் அடிப்படையில் அது தொடர்பான தீர்மானத்தை கூட்டாக அறிவிப்போம். 
 
இதேவேளை நாம் எங்களது தொழிற்சங்க போராட்டங்களை புது உத்வேகத்துடனும் புதிய வடிவிலும் செய்ய இருக்கிறோம். 
 
அது தொடர்பாகவும் ஊடகவியலாளர் சந்திப்பை விரைவில் நடத்துவோம். 
 
மாவட்ட ரீதியாக பல்வேறு வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்படும். அதேபோல் சகல மதத் தலைவர்களுக்கும் எமது போராட்டம் தொடர்பான உண்மையான விளக்கத்தை வழங்க வேண்டும். 
 
நேற்றைய தினம் பெற்றோர்களுக்கு எமது போராட்டம் தொடர்பான விளக்கத்தை நான் வீடியோ 
 
மூலம் பதிவிட்டு இருந்தேன். அதற்கு சிறந்த பிரதிபலன் கிடைத்திருக்கிறது. 
 
தற்போதைய நிலையிலும் பல்வேறு பாடசாலைகள் பகுதி பகுதியாக ஒவ்வொரு பிரிவு அடிப்படையிலும் அந்த பிரிவு மாணவர்களை கொண்டு அந்தப் பெற்றோர்களுக்கு தெளிவை வழங்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. 
 
மாணவர்கள் மூலம் பெற்றோரை இலகுவில் அணுகி அவர்களுக்கான தெளிவை வழங்கலாம். மேலும் பாடசாலைகளிலும் இதுதொடர்பான பதாதைகளை காட்சிப்படுத்த வேண்டும். 
 
அரசாங்கம் எமது போராட்டம் தொடர்பில் மக்களை பிழையாக வழி நடத்துகிறது. எனவே நாம் அவர்களுக்கு உரிய தெளிவை வழங்க வேண்டும். 
 
இது மாணவர்களுக்கு எதிராக செய்யும் போராட்டம் அல்ல. எதிர்கால மாணவர் சமூகத்துக்காகவும் சுதந்திரமான கல்வியை உறுதி செய்வதற்காகவும் இடம்பெறும் போராட்டம். 
 
பெரும்பாலான கணித விஞ்ஞான பட்டதாரிகள் மற்றும் ஏனைய துறைகளில் திறமையானவர்கள் இதில் 
 
நீடிப்பதில்லை. காரணம் இதிலுள்ள சம்பள அளவு திட்டம். 
 
எனவே இவ்வாறான திறமையானவர்களை இதில் நிலைத்திருக்க வைக்க வேண்டுமென்றால் சம்பள முரண்பாடு தீர்க்கப்பட வேண்டும் என அமைச்சரவை உப குழுவும் ஏற்றுக்கொண்டுள்ளது. 
 
எனவே இது எதிர்கால கல்வி சமூகத்திற்காகவும் சுதந்திர கல்வியை உறுதி செய்வதற்காகவும் நடைபெறும் போராட்டம் என்பதை விளங்க வேண்டும் என மேலும் தெரிவித்தார்.
Irumbuthirainews.com
அரசாங்கம் 5000 ரூபா கொடுப்பணவு தந்தால் என்ன செய்வது? புதுவடிவம் பெறும் தொழிற்சங்க போராட்டம்! அரசாங்கம் 5000 ரூபா கொடுப்பணவு தந்தால் என்ன செய்வது? புதுவடிவம் பெறும் தொழிற்சங்க போராட்டம்! Reviewed by Irumbu Thirai News on September 08, 2021 Rating: 5

5000/- இடைக்கால கொடுப்பணவு இம்மாதம் கிடைக்கும்

September 08, 2021
 

அதிபர் ஆசிரியர் சம்பள முரண்பாட்டிற்காக அமைச்சரவையினால் முன்வைக்கப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில் 5000 ரூபா இடைக்கால கொடுப்பனவு இந்த மாதம் கிடைக்கும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.

நேற்று அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கொரோனா பரவல் நிலையினால் ஏற்பட்ட பொருளாதார தாக்கத்தினால் சம்பள முரண்பாட்டினை முழுமையாக தீர்ப்பதில் 

 

சிக்கல் காணப்படுகிறது. எனவே எதிர்வரும் வரவு-செலவுத் திட்டத்திலிருந்து கட்டங்கட்டமாக தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

 

 

 

5000/- இடைக்கால கொடுப்பணவு இம்மாதம் கிடைக்கும் 5000/- இடைக்கால கொடுப்பணவு இம்மாதம் கிடைக்கும் Reviewed by Irumbu Thirai News on September 08, 2021 Rating: 5

BA (External - New Syllabus): ஒவ்வொரு பாட அலகிற்கான கையேடுகளைப் பெறுவது எப்படி?

September 08, 2021
 

பேராதனைப் பல்கலைக்கழக தொடர் தொலைக்கல்வி நிலையமானது, புதிய பாடத்திட்ட கலைமாணிப் பட்ட பாடநெறிக்கான (Bachelor of Arts - External) ஒவ்வொரு பாட அலகிற்கும் கையேடுகளைத் தயாரித்துள்ளது. 
 
மாணவர்கள் நிர்ணயிக்கப்பட்ட விலையை செலுத்தி பாடநெறி கையேடுகளை கொள்வனவு செய்யலாம். 
 
தபால் மூலமாக கையேடுகளைப் பெற்றுக் கொள்வதற்கு, பரிந்துரைக்கப்பட்ட கையேட்டின் விலையை மக்கள் வங்கியின் பேராதனை கிளைக்கு, வங்கி கணக்கிலக்கம் 057-1001-4-1338036 இற்கு செலுத்தி அசல் வங்கிப் பற்றுச்சீட்டுடன் சுய முகவரியிடப்பட்டு, ரூ. 100/= பெறுமதியான முத்திரை ஒட்டப்பட்ட 10X15 கடிதவுறையினையும் பின்வரும் முகவரிக்கு அனுப்பவும். (ஒரு கையேட்டிற்கான முத்திரைக் கட்டணம் ரூ. 100/= ஆகும்.) 
 
முகவரி
Assistant Registrar, 
Centre for Distance and Continuing Education, 
No. 43, Old Galaha Road, 
Peradeniya.
 
பாடநெறி கையேடுகள் மற்றும் அவற்றின் விலைகளை இங்கு அறிந்துகொள்ளலாம். (ஏனைய கையேடுகள் வெகு விரைவில் வழங்கப்படும்.)
 
BA (External - New Syllabus): ஒவ்வொரு பாட அலகிற்கான கையேடுகளைப் பெறுவது எப்படி? BA (External - New Syllabus): ஒவ்வொரு பாட அலகிற்கான கையேடுகளைப் பெறுவது எப்படி? Reviewed by Irumbu Thirai News on September 08, 2021 Rating: 5

உடனடியாக பாடசாலைகளை மீளத் திறக்க வேண்டும் என நான் கூறவில்லை - நீலிகா மலவிகே

September 07, 2021
 

பாடசாலைகளை மீள திறப்பது தொடர்பாக தனது கருத்தை தவறாக மேற்கோள்காட்டி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு பிரிவு தலைவர் பேராசிரியர் நீலிகா மலவிகே தெரிவித்துள்ளார். 
 
தனது முகநூல் பதிவிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 
 
30-40 நிமிட வெபினாரில் ஒரு வாக்கியத்தை எடுத்து தவறாக மேற்கோள்காட்டி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பாடசாலைகளை தற்போது மீளத் திறக்க வேண்டும் என்று நான் கூறவில்லை. தனிநபர்களை தவறாக மேற்கோள் காட்டுவதையும் உள்ளடக்கத்திற்கு வெளியே 
 
மேற்கோள் காட்டுவதையும் இலங்கையில் உள்ள ஊடகங்கள் தவிர்ந்து கொள்ள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
 
 
அவரது பேஸ்புக் பதிவிற்கு செல்ல..
உடனடியாக பாடசாலைகளை மீளத் திறக்க வேண்டும் என நான் கூறவில்லை - நீலிகா மலவிகே உடனடியாக பாடசாலைகளை மீளத் திறக்க வேண்டும் என நான் கூறவில்லை - நீலிகா மலவிகே Reviewed by Irumbu Thirai News on September 07, 2021 Rating: 5

BBA வெளிவாரி பட்ட பாடநெறிக்கு தகுதிபெற்றோர் (பேராதனைப் பல்கலைக்கழகம்) - 2020/ 2021.

September 07, 2021
 

பேராதனைப் பல்கலைக் கழகத்தினால் Online முறையில் நடாத்தப்படும் வெளிவாரி பட்ட பாடநெறிக்கு தகுதி பெற்றோரின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 
 
பெயர்ப் பட்டியலையும் இந்த பாடநெறி தொடர்பான முழுமையான விபரங்களையும் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.

இது தொடர்பான முன்னைய பதிவு:
BBA வெளிவாரி பட்ட பாடநெறிக்கு தகுதிபெற்றோர் (பேராதனைப் பல்கலைக்கழகம்) - 2020/ 2021. BBA வெளிவாரி பட்ட பாடநெறிக்கு தகுதிபெற்றோர் (பேராதனைப் பல்கலைக்கழகம்) - 2020/ 2021. Reviewed by Irumbu Thirai News on September 07, 2021 Rating: 5

பாடசாலைகளை மீள ஆரம்பித்தல் தொடர்பில் சுகாதார தரப்பின் கருத்து:

September 07, 2021
 

பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கு உரிய பொருத்தமான திட்டங்களை கல்வி அமைச்சு முன்வைக்கும் பட்சத்தில் அதற்கான அனுமதி வழங்கலாம் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். 
 
எவ்வாறாயினும் பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கான பொருத்தமான சூழல் இதுவரை இல்லை என அவர் தெரிவித்தார். 
 
இதேவேளை சுகாதாரத் தரப்பு அனுமதி வழங்கினால் பாடசாலைகளை மீள ஆரம்பிக்கலாம் என கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பாடசாலைகளை மீள ஆரம்பித்தல் தொடர்பில் சுகாதார தரப்பின் கருத்து: பாடசாலைகளை மீள ஆரம்பித்தல் தொடர்பில் சுகாதார தரப்பின் கருத்து: Reviewed by Irumbu Thirai News on September 07, 2021 Rating: 5

06.09.2021 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள்

September 07, 2021
 

06.09.2021 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது எடுக்கப்பட்ட தீர்மானங்களை இங்கு தருகிறோம். 
இதில், 
பல முக்கிய தீர்மானங்கள் அடங்கியுள்ளன. 
 
இதன் முழு வடிவத்தைப் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
முன்னைய அமைச்சரவை கூட்ட தீர்மானங்களைப் பார்வையிட...
06.09.2021 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள் 06.09.2021 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள் Reviewed by Irumbu Thirai News on September 07, 2021 Rating: 5

கல்வியற் கல்லூரி இறுதிப் பரீட்சை தொடர்பான அறிவித்தல்

September 07, 2021
 

2017/2019 கட்டுறுப் பயில்வை முடித்த மற்றும் சித்தியடையாதவர்களுக்கான இறுதிப் பரீட்சை தொடர்பான தீர்மானம் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
அவை பின்வருமாறு: 
 1. வாண்மைத்துவ பாடங்களுக்கு தற்போது கல்வியியல் கல்லூரிகளில் குறித்த பாடங்களுக்கு வழங்கப்பட்ட உள்ளக புள்ளிகளின் 60 வீத புள்ளிகளை 100 வீதமாக மாற்றுதல் 
 
2. பிரதான பாடங்கள் மற்றும் துணை பாடங்களுக்கு கல்லூரிகளில் உள்ளக ரீதியாக வழங்கப்பட்ட 60 வீத புள்ளிகளை 100 வீதமாக மாற்றுதல் 
 
 3. பிரயோகப் பரீட்சைகள் (Practical Test) உள்ள பாடங்களுக்கு, உள்ளக பிரயோகப் புள்ளிகளை இறுதிப் புள்ளிகளாக கணிப்பிடுதல் 
 
4. விசேட பாடத்துறை தொடர்பான விடய அறிவை மற்றும் ஆசிரியர் தேர்ச்சிகளை மதிப்பீடு செய்ய பரீட்சை ஒன்றை நடாத்துதல் 
 
5. பிரதான பாடத்துறையை மையமாகக் கொண்டு பாடசாலை கலைத் திட்டத்தில் குறித்த பாடத்தை தெரிவு செய்து, குறிப்பிட்ட தேர்ச்சியின் கீழ் ஒரு தேர்ச்சி மட்டப் பாடமொன்றை தெரிவு செய்து, முன்வைக்கும் முறையைப் பரீட்சிப்பது இதன் ஊடாக எதிர்பார்க்கப்படுகிறது. 
 - குறித்த பாடத்தை கற்பிப்பதற்கு பயன்படுத்த முடியுமான வேறு முறைகளை விளக்குதல் 
 - குறித்த பாடத்தைக் கற்பிப்பதற்கு கல்வி உளவியலின் பிரயோகத்தை குறிப்பிடுதல் 
- கற்றல் கற்பித்தலில் பயன்படுத்தத்தக்க துணை சாதனங்களைத் தெரிவு செய்யும் போது கவனிக்க வேண்டிய 3 விடயங்கள் 
 - கல்வி சமூகவியல் அறிவை பயன்படுத்துவற்கான சந்தர்ப்ப உதாரணம் ஒன்றை வழங்குதல் 
 - கல்வி ஆலோசனையும் வழிகாட்டலும் பாட அறிவு பயன்படுத்தத்தக்க முறையை சுருக்கமாக விளக்குதல் 
 - ஆசிரியர்களாக பின்பற்றத்தக்க விழுமியங்கள் 3 ஐக் குறிப்பிடல்
- குறித்த பாட உள்ளடக்கம் தொடர்பாக விடய அறிவைப் பரீட்சித்தல் 
- ஆசிரியர் மனப்பாங்களை அளவிடல் 
- புதிய தொழில்நுட்ப அறிவை மற்றும் Online கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளுக்கு ஏற்ப ஆசிரியர் வகிபாகம் மற்றும் சவால்களை வெற்றி கொள்ளல் தொடர்பாக விபரித்தல் 
 
 புள்ளி வழங்கல் 

1. மொத்த முன்வைப்பு - 30% 
 
2. கேட்கப்படும் கேள்விகளுக்கு விடையளித்தல் - 70% 
 
3. பெற்றுக் கொள்ளும் 40 விதத்தை பெற்றுக் கொண்டு கல்வி விடயங்களின் புள்ளிகளை சேர்த்தல் மொத்த முன்வைப்புக்கு 40 நிமிடங்கள் (முன்வைப்புக்கு 20 புள்ளிகளும் கேள்வி கேட்டலுக்கு 25 வினாவிடைகளுக்கு) 
 
4. குறித்த விடயப் பரப்பின் கருப்பொருள் கல்வியியல் கல்லூரிகளினால் இரு தினங்களுக்கு முன்னர் மாணவர்களுக்கு வழங்கப்படும் 
 
குறிப்பு: ஏற்கனவே நடைபெற்ற பரீட்சைகளில் சித்தியடையத் தவறியவர்களுக்கு ஒவ்வொரு பாடங்களுக்கும் விடயப் பரப்பு தொடர்பாக நேர்காணல் நடாத்தப்பட முன்மொழியப்படுகிறது.
Source: teachmore.
நன்றி: டீச்மோர்.
கல்வியற் கல்லூரி இறுதிப் பரீட்சை தொடர்பான அறிவித்தல் கல்வியற் கல்லூரி இறுதிப் பரீட்சை தொடர்பான அறிவித்தல் Reviewed by Irumbu Thirai News on September 07, 2021 Rating: 5

Aptitude Test Results - 2021 (University of Colombo - School of Computing)

September 06, 2021
 


University Admission - 2021/2022. 

University of Colombo (School of Computing) 

Aptitude test results for B.Sc in Information System. 
 

 
 
 
பெறுபேறுகளைப் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.


இதுவரை வெளியான பெறுபேறுகள்:
 
 

 
 
Aptitude Test Results - 2021 (University of Colombo - School of Computing) Aptitude Test Results - 2021 (University of Colombo - School of Computing) Reviewed by Irumbu Thirai News on September 06, 2021 Rating: 5

ஒத்திவைக்கப்பட்டன ஆசிரியர் கலாசாலை பரீட்சைகள்

September 06, 2021
 

ஆசிரியர் கலாசாலை பரீட்சைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது. 
 
2020 மற்றும் 2021ற்கான இறுதிப் பரீட்சைகளே இவ்வாறு ஒத்திவைக்கப்பட்டுள்ளன. பரீட்சை நடைபெறும் திகதி தொடர்பில் 
 
பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்த பரீட்சைகள் 21-09-2021 தொடக்கம் 26-09-2021 வரை நடைபெற இருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஒத்திவைக்கப்பட்டன ஆசிரியர் கலாசாலை பரீட்சைகள் ஒத்திவைக்கப்பட்டன ஆசிரியர் கலாசாலை பரீட்சைகள் Reviewed by Irumbu Thirai News on September 06, 2021 Rating: 5

மனித வள முகாமைத்துவத்தில் டிப்ளோமா பாடநெறி / Diploma in Human Resources Management - 2021 (University of Colombo)

September 06, 2021
 

மனித வள முகாமைத்துவ டிப்ளோமா பாடநெறிக்காக கொழும்பு பல்கலைக் கழகத்தினால் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. 
 
தகைமை: 
உயர்தரத்தில் ஏதாவது பாட துறையில் 3 பாடங்களில் சித்தி. 
 
அல்லது 
 
அரச அல்லது தனியார் துறையில் 05 வருட வேலை அனுபவம். 
 
காலம்: 01 வருடம். 
 
பாடநெறி நடைபெறுவது: ஞாயிற்றுக்கிழமைகளில் மாத்திரம். 
 
விண்ணப்ப கட்டணம்: 1500/- 
 
பாடநெறி கட்டணம்: 95,000/- 
 
மொழி மூலம்: ஆங்கிலம் / சிங்களம் 
 
விண்ணப்ப முடிவு திகதி: 15-09-2021. 
 
இது தொடர்பான முழுமையான விவரங்களை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக். 
 
Online விண்ணப்பப்படிவத்திற்கு செல்ல கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
மனித வள முகாமைத்துவத்தில் டிப்ளோமா பாடநெறி / Diploma in Human Resources Management - 2021 (University of Colombo) மனித வள முகாமைத்துவத்தில் டிப்ளோமா பாடநெறி / Diploma in Human Resources Management - 2021 (University of Colombo) Reviewed by Irumbu Thirai News on September 06, 2021 Rating: 5

Aptitude Test Results - 2021 (Uva Wellassa University)

September 06, 2021
 

பல்கலைக்கழக அனுமதி - 2021/2022 
(தெரிவு பரீட்சை பெறுபேறுகள்) 
 
பின்வரும் பாடநெறிகளுக்காக ஊவா வெல்லச பல்கலைக்கழகத்தினால் நடாத்தப்பட்ட தெரிவுப் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன. 
 
B.Sc (Hons) in Computer Science & Technology. 
B.Sc (Hons) Industrial Information Technology. 
BBM (Hons) in Entrepreneurship & Management. 
BBM (Hons) Hospitality, Tourism & Event Management 
 
பெறுபேறுகளை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.
 
இது தொடர்பான ஏனைய பதிவுகள்:
 
 
 
Aptitude Test Results - 2021 (Uva Wellassa University) Aptitude Test Results - 2021 (Uva Wellassa University) Reviewed by Irumbu Thirai News on September 06, 2021 Rating: 5
Powered by Blogger.