அரசாங்கம் 5000 ரூபா கொடுப்பணவு தந்தால் என்ன செய்வது? புதுவடிவம் பெறும் தொழிற்சங்க போராட்டம்!

 

எமக்கு இரண்டு மாதங்களுக்கு தருவதாக கூறும் அந்த இடைக்கால கொடுப்பனவை வேண்டாம் என்று கூறியும் அரசாங்கம் அதை பலவந்தமாக தர முயற்சிப்பதாக தெரிகிறது. அவ்வாறு அதை தரும் பட்சத்தில் என்ன நடவடிக்கைகளை மேற்கொள்வது என்ற தீர்மானம் விரைவில் அறிவிக்கப்படும் என இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் செயலாளர் மகிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார். 
 
தனது முகநூல் பக்கத்திலேயே அவர் இன்றைய தினம் இவ்வாறு தெரிவித்துள்ளார். 
 
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, 
 
எமக்கு இரு மாதங்கள் தருவதாக கூறும் அந்த இடைக்கால கொடுப்பனவை கொவிட் ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக எடுத்துக் கொள்ளுமாறு கூறியும் அதை பலவந்தமாக அரசாங்கம் தர முயற்சிப்பதாக தெரிகிறது. நேற்றைய தினமும் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது இந்த கொடுப்பனவு இந்த மாத சம்பளத்துடன் வழங்கப்படும் என கூறப்பட்டது.
 
இன்னும் ஒருசில தினங்களில் இந்த கொடுப்பனவு இந்த மாத சம்பளத்துடன் சேர்க்கப்பட்டுள்ளதா என வலயக்கல்வி காரியாலயங்கள் ஊடாக அறிந்து கொள்ளலாம். அவ்வாறு 5000 ரூபாய் சேர்க்கப்பட்டு இருந்தால் அதை என்ன செய்வது என்ற தீர்மானம் ஏனைய தொழிற்சங்கங்களோடு ஒன்றிணைந்து நாம் விரைவாக எடுக்க இருக்கிறோம். அதன் அடிப்படையில் அது தொடர்பான தீர்மானத்தை கூட்டாக அறிவிப்போம். 
 
இதேவேளை நாம் எங்களது தொழிற்சங்க போராட்டங்களை புது உத்வேகத்துடனும் புதிய வடிவிலும் செய்ய இருக்கிறோம். 
 
அது தொடர்பாகவும் ஊடகவியலாளர் சந்திப்பை விரைவில் நடத்துவோம். 
 
மாவட்ட ரீதியாக பல்வேறு வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்படும். அதேபோல் சகல மதத் தலைவர்களுக்கும் எமது போராட்டம் தொடர்பான உண்மையான விளக்கத்தை வழங்க வேண்டும். 
 
நேற்றைய தினம் பெற்றோர்களுக்கு எமது போராட்டம் தொடர்பான விளக்கத்தை நான் வீடியோ 
 
மூலம் பதிவிட்டு இருந்தேன். அதற்கு சிறந்த பிரதிபலன் கிடைத்திருக்கிறது. 
 
தற்போதைய நிலையிலும் பல்வேறு பாடசாலைகள் பகுதி பகுதியாக ஒவ்வொரு பிரிவு அடிப்படையிலும் அந்த பிரிவு மாணவர்களை கொண்டு அந்தப் பெற்றோர்களுக்கு தெளிவை வழங்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. 
 
மாணவர்கள் மூலம் பெற்றோரை இலகுவில் அணுகி அவர்களுக்கான தெளிவை வழங்கலாம். மேலும் பாடசாலைகளிலும் இதுதொடர்பான பதாதைகளை காட்சிப்படுத்த வேண்டும். 
 
அரசாங்கம் எமது போராட்டம் தொடர்பில் மக்களை பிழையாக வழி நடத்துகிறது. எனவே நாம் அவர்களுக்கு உரிய தெளிவை வழங்க வேண்டும். 
 
இது மாணவர்களுக்கு எதிராக செய்யும் போராட்டம் அல்ல. எதிர்கால மாணவர் சமூகத்துக்காகவும் சுதந்திரமான கல்வியை உறுதி செய்வதற்காகவும் இடம்பெறும் போராட்டம். 
 
பெரும்பாலான கணித விஞ்ஞான பட்டதாரிகள் மற்றும் ஏனைய துறைகளில் திறமையானவர்கள் இதில் 
 
நீடிப்பதில்லை. காரணம் இதிலுள்ள சம்பள அளவு திட்டம். 
 
எனவே இவ்வாறான திறமையானவர்களை இதில் நிலைத்திருக்க வைக்க வேண்டுமென்றால் சம்பள முரண்பாடு தீர்க்கப்பட வேண்டும் என அமைச்சரவை உப குழுவும் ஏற்றுக்கொண்டுள்ளது. 
 
எனவே இது எதிர்கால கல்வி சமூகத்திற்காகவும் சுதந்திர கல்வியை உறுதி செய்வதற்காகவும் நடைபெறும் போராட்டம் என்பதை விளங்க வேண்டும் என மேலும் தெரிவித்தார்.
Irumbuthirainews.com
அரசாங்கம் 5000 ரூபா கொடுப்பணவு தந்தால் என்ன செய்வது? புதுவடிவம் பெறும் தொழிற்சங்க போராட்டம்! அரசாங்கம் 5000 ரூபா கொடுப்பணவு தந்தால் என்ன செய்வது? புதுவடிவம் பெறும் தொழிற்சங்க போராட்டம்! Reviewed by Irumbu Thirai News on September 08, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.