முழுமையான தடுப்பூசி போட்டாலும் நோயெதிர்ப்பைக் கடந்து செல்லும் டெல்டா: ஆய்வில் வெளியான தகவல்!

 

முழுமையான தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கும் டெல்டா வைரஸ் திரிபானது தொற்றக் கூடிய நிலை காணப்படுவதாக விஞ்ஞானிகள் பரவலாக கண்டறிந்துள்ளதாக நேச்சர் என்ற சஞ்சிகை தகவல் வெளியிட்டுள்ளது. 
 
இந்த டெல்டா திரிபானது மனிதர்களின் நோயெதிர்ப்பு கட்டமைப்பையும் கடந்து சென்று தாக்கக் கூடியது என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
நேச்சர் சஞ்சிகை வெளியிட்ட இந்த தகவலை மேற்கோள்காட்டி ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மூலக்கூறு உயிரியல் துறை பிரிவின் பேராசிரியர் சந்திம ஜீவந்தர தெரிவிக்கையில், 
 
முழுமையான தடுப்பூசி போட்டாலும் அதையும் தாண்டி தாக்கக் கூடிய திறன் டெல்டா திரிபுக்கு காணப்படுகிறது. எனவே தடுப்பூசி போட்ட பின்னரும் முறையான சுகாதார பழக்க வழக்கங்களை பின்பற்றுவது அவசியமாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
முழுமையான தடுப்பூசி போட்டாலும் நோயெதிர்ப்பைக் கடந்து செல்லும் டெல்டா: ஆய்வில் வெளியான தகவல்! முழுமையான தடுப்பூசி போட்டாலும் நோயெதிர்ப்பைக் கடந்து செல்லும் டெல்டா: ஆய்வில் வெளியான தகவல்! Reviewed by Irumbu Thirai News on September 09, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.