சூனியத்தால் வருவதா மெனுஞ்சைத்திஸ் நோய்? தொடரும் அவல நிலை...

 

ஆப்பிரிக்க நாடான கொங்கோ ஜனநாயக குடியரசில் மெனுஞ்சைத்திஸ் (meningitis) என்ற நோய் காரணமாக இதுவரை 120 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் 100க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். 
 
கொங்கோ ஜனநாயக குடியரசில் கடந்த ஜூலை மாதம் முதன் முதலாக இந்த நோய் அறியப்பட்டது. பொதுவாக ஜனவரி முதல் ஜூலை வரையிலான உலர்வான பருவத்தில் இது ஏற்படுகிறது. 
 
சூனியம் வைப்பதால் இந்த நோய் ஏற்படுவதாக சமுதாயத்தில் நம்பிக்கை நிலவுவதால் 
 
இந்த நோயை கட்டுப்படுத்துவது சிரமம் என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. 
 
இது மாத்திரமன்றி நோய்தொற்றுக்கு ஆளானவர்கள் வேறொரு இடத்திற்கு இடம்பெயர்கின்றனர். அவ்வாறு செய்தால் இந்த நோய் தம்மை பின் தொடராது என நம்புகின்றனர். இவ்வாறான நிலைமைகளினால் நோயைக் கட்டுப்படுத்துவது சிரமம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
உண்மையிலேயே இது பாக்டீரியாவினால் ஏற்படுகிறது. நோய் பாதித்தவர்களின் உடலிலிருந்து எடுத்த மாதிரிகள் பிரான்சுக்கு அனுப்பி பரிசோதிக்கப்பட்டன. அதில், 
 
இந்த நோய்க்கு காரணமான பாக்டீரியம் மிகப் பெரிய கொள்ளை நோயை உருவாக்க வல்லது என்று கண்டறியப்பட்டது. 
 
செனகலில் இருந்து எத்தியோப்பியா வரையில் செல்லும் 'ஆப்பிரிக்காவின் மெனுஞ்சைத்திஸ் பெல்ட்' என்றழைக்கப்படும் பிராந்தியத்தில் 26 நாடுகள் இடம்பெற்றுள்ளன.
 
இதில் சில பகுதிகளில் மீண்டும் மீண்டும் இந்த நோய்த் தொற்று ஏற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 
 
 
இந்த நோயின் அறிகுறிகள்: 
 
அதிக உடல் வெப்பம். 
 
கை, கால்கள் குளிர்தல். 
 
மனக்குழப்பம். 
 
வாந்தி. 
 
விரைவாக சுவாசித்தல். 
 
தசை மற்றும் மூட்டு வலி. 
 
வெளிறிய புள்ளிகள் அல்லது கறைபடிந்த தோல். 
 
உடலில் சொறி அல்லது புள்ளிகள் தோன்றல். 
 
தலைவலி. 
 
கழுத்துப்பகுதி கடினமாக இருத்தல். 
 
வெளிச்சத்திற்கு விருப்பமில்லாத தன்மை. 
 
அதிக தூக்கம் அல்லது தூக்கத்திலிருந்து எழும்ப விருப்பமின்மை. 
 
வலிப்பு. 
 
 
குழந்தைகளுக்கு
 
 உணவை புறக்கணித்தல். 
 
எரிச்சல் அடைதல். 
 
அதிக சத்தத்தில் அழுதல். 
 
உடல் கடினமாதல் / இலகுவாயிருத்தல்/ துலங்கல் அற்று இருத்தல். 
 
தலையின் மேல் பகுதியில் இலேசாக வீங்கியிருத்தல்.
சூனியத்தால் வருவதா மெனுஞ்சைத்திஸ் நோய்? தொடரும் அவல நிலை... சூனியத்தால் வருவதா மெனுஞ்சைத்திஸ் நோய்? தொடரும்  அவல நிலை... Reviewed by Irumbu Thirai News on September 10, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.