வாழைப்பழம் தினமும் உண்பதனால் ஏற்படும் நன்மைகள்

வருடம்  முழுவதும் இலகுவாக கிடைக்கும் வாழைப்பழத்திற்கு  உலகிலுள்ள  பல நாடுகளிலும் கடும் கேள்வி உள்ளது. வாழைப்பழத்தினை சில நாடுகள் மற்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்து விற்பனை செய்கின்றார்கள்.
ஒரு வாழைப்பழத்தில் 75 சதவிகிதம் தண்ணீர் உள்ளது மற்றும் நார்ச்சத்து 16 சதவிகிதம், வைட்டமின் சி 15 சதவிகிதம் மற்றும் பொட்டாசியம் 11 சதவிகிதம் உள்ளது. எட்டு வகையான அமினோ அமிலங்கள் வாழைப்பழத்தில் உள்ளது.

அதிகமாக மது குடிப்பவர்கள் வாழைப்பழம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ஏற்படும் பாதிப்புகள் குறைவடையும்.
வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிகளவும், உப்பு குறைவாக இருப்பதால் அது உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது. வாழைப்பழத்தில் இரும்புச்சத்து போதுமான அளவில் இருப்பதால் இரத்தசோகை இருப்பவர்களுக்கு தினமும் சாப்பிடுவது நன்று

நினைவு ஆற்றலை நிரந்தரமாக வைத்துருப்பதற்கு வாழைப்பபழம் பெரும்பங்களிப்பு வழங்கின்றது. வாழைப்பழத்தில் உள்ள B6 மற்றும் B12 விட்டமின்கள் உள்ளது இதனால் புகைபிடிக்கும் பழக்கத்தையும் கைவிட உதவும்.
 வாழைப்பழம் சாப்பிட்டால் சளி பிடித்துக் கொள்கிறது என்று கூறி சாப்பிட மறுக்கின்றோம். ஆனால் உண்மையில், பழம் சளியைத் தருவதில்லை, முன்பே  உடலில் தேங்கியிருக்கும் சளியை வெளியேற்றும்.
கடுமையான வயிற்றுப் போக்கை தடுப்பதற்கும், மலச்சிக்கலைப் போக்கவும் வாழை அருமருந்தாகத் திகழ்கிறது. வயிற்றில் அமிலம் சுரப்பதையும், அல்சர் எனப்படும் புண் ஏற்படுவதையும் வாழை தடுக்கிறது.

ஆய்வு ஒன்றில் ‘வாழைப்பழத்தை தினசரி உணவில் சேர்த்துக் கொண்டால், பக்கவாதத்தினால் ஏற்படும் இறப்பை, 40 சதவிகிதம் குறைக்க முடிகிறது’ என்று கூறப்பட்டுள்ளது

 – அனைவருக்கும் பகிருங்கள்
வாழைப்பழம் தினமும் உண்பதனால் ஏற்படும் நன்மைகள் வாழைப்பழம் தினமும் உண்பதனால் ஏற்படும் நன்மைகள் Reviewed by Irumbu Thirai News on February 09, 2019 Rating: 5

No comments:

Powered by Blogger.