கொழும்பில் இனி படகிலும் செல்லலாம்..



கொழும்பு நகரிலும் படகில் பயணிக்கும் சந்தர்ப்பம் இனி பயணிகளுக்கு கிடைக்கின்றது. நெரிசலைக் குறைக்கும் விதமாக இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பெருநகர மற்றும் மேல் மாகாண அமைச்சுக்குட்பட்ட இலங்கை காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனம் இதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளது. இதில் பயணிகள் போக்குவரத்துக்கான குளிரூட்டப்பட்ட 

படகு பயன்படுத்தப்படுவதாக தலைவர் ரொசான் குணவர்த்தண கூறினார். 
யூனியன் பிளேஸில் இருந்து கொழும்பு கோட்டை வரையில் பேரவாவியின் ஊடாக இந்த படகு சேவை இடம்பெறுகின்றது. ஜுனியன் பிளேசில் இருந்து கொழும்பு கோட்டை வரையில் பஸ்ஸில் செல்வதற்க்கு அலுவலக நேரங்களில் பொதுவாக 30 நிமிடங்கள் செல்லும், ஆனால் பேர வாவியின் ஊடாக 

படகின் மூலம் பயணத்தை மேற்கொள்ளும் போது 10 நிமிடங்கள் மாத்திரமே ஆகும். இரவு நேரங்களிலும் படகு மூலம் சுற்றுலாவை மேற்கொள்ள வசதி மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இந்த திட்டத்தில் காணப்படும் முன்னேற்றத்தின் அடிப்படையில் படகின் மூலமான பயணிகள் போக்குவரத்து சேவையை மேலும் விரிவுபடுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 
இந்த திட்டத்தின் வெற்றிக்கு அமைவாக வெள்ளவத்தையில் இருந்து பத்ரமுல்லை வரையிலும் மட்டக்குளியில் இருந்து ஹங்வெல்ல வரையிலும், மட்டக்குளியில் இருந்து நீர்கொழும்பு வரையிலும் பயணிகளுக்காக படகு போக்குவரத்து சேவையை ஆரம்பிக்கக்கூடியாதாக இருக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
(அ.த.தி)
கொழும்பில் இனி படகிலும் செல்லலாம்.. கொழும்பில் இனி படகிலும் செல்லலாம்.. Reviewed by irumbuthirai on August 22, 2019 Rating: 5

No comments:

Powered by Blogger.