வெளியானது 2019 வாக்காளர் இடாப்பு: உங்கள் பெயரை எவ்வாறு பரீட்சிப்பது?



2019ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர்ப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. கிராம சேவையாளர்களுக்கு தற்சயம் வாக்காளர் பெயர் பட்டியல் அனுப்பட்டிருப்பதாக ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ரட்நாயக்க தெரிவித்தார். குறித்த வாக்காளர் இடாப்பில் பெயர் உள்ளதா என்பதை பின்வரும் முறைகளில் பரீட்சிக்கலாம். 

1.    கிராம சேவையாளர் அலுவலகங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பெயர்ப்           பட்டியல். 
2.    பிரதேச செயலகங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பெயர்ப் பட்டியல். 
3. மாவட்ட செயலகங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பெயர்ப் பட்டியல். இதற்கு மேலதிகமாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் இணையத்தளத்திலும் உங்கள் தேசிய அடையாள அட்டை இலக்கத்தைக் கொடுத்து பரீட்சிக்கலாம்.
குறித்த இணையத்தளத்திற்குச் செல்ல கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 

வாக்காளர் பெயர் பட்டியலில் தங்களது பெயர் இல்லை என்றால் அது தொடர்பில் கிராம சேவையாளர்களுக்கு அறியத் தருமாறும் பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.
வெளியானது 2019 வாக்காளர் இடாப்பு: உங்கள் பெயரை எவ்வாறு பரீட்சிப்பது? வெளியானது 2019 வாக்காளர் இடாப்பு: உங்கள் பெயரை எவ்வாறு பரீட்சிப்பது? Reviewed by irumbuthirai on August 24, 2019 Rating: 5

No comments:

Powered by Blogger.