வறிய நாடுகளின் பட்டியலில் முதலிடத்திலுள்ள நாடு..



உலகில் வறிய நாடுகளின் அறிக்கை ஒன்றை Focus Economics என்ற பொருளாதார ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கை 126 நாடுகளில் உள்ளுர் உற்பத்தியை கவனத்தில் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்கு அமைவாக இந்த பட்டியலில் உலகில் வறிய நாடுகளின் மத்தியில் முதலாவது இடத்தில் 

கொங்கோ குடியரசு இடம்பெற்றுள்ளது. உலகில் வறிய நாடுகள் மத்தியில் 2 ஆம் மற்றும் 3 ஆம் இடங்களின் முறையே மொசாம்பிக் மற்றும் உகண்டா நாடுகள் இடம்பெற்றுள்ளன. இலங்கை இந்த வறிய நாடுகளின் மத்தியில் 

36 ஆவது இடத்தில் இடம்பெற்றுள்ளது. பொருளாதார ஆய்வு நிறுவனம் 2017 ஆம் ஆண்டு வெளியிட்ட உலகின் வறிய நாடுகளின் பட்டியலில் இலங்கை 36 ஆவது இடத்தில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்திய மற்றும் பாகிஸ்தான் நாடுகள் இந்த பட்டியலில் 19 ஆம் மற்றும் 12 ஆம் இடங்களில் இடம்பெற்றுள்ளன. சீனா 69 ஆவது இடத்திலும் அமெரிக்கா இந்த பட்டியலில் 121 ஆவது இடத்திலும், ரஷ்யா 71 ஆவது இடத்திலும்  இடம்பெற்றுள்மை குறிப்பிடத்தக்கது.
(அ.த.தி)
வறிய நாடுகளின் பட்டியலில் முதலிடத்திலுள்ள நாடு.. வறிய நாடுகளின் பட்டியலில் முதலிடத்திலுள்ள நாடு.. Reviewed by irumbuthirai on October 10, 2019 Rating: 5

No comments:

Powered by Blogger.