நீர் இணைப்பு கட்டணம் குறைகிறது



நீர் இணைப்பு கட்டணத்தை குறைக்க அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ரூ. 8000 இலிருந்து ரூ. 2500 வரை குறையவுள்ளது.
இது தொடர்பான அமைச்சரவை தீர்மானம் இதோ... இலங்கை மக்கள் தொகையில் 41 வீதத்தை உள்ளடக்கி 2.4 மில்லியன் குடி நீர் விநியோகத்திற்கான இணைப்புக்கள் தற்பொழுது தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு சபையினால் வழங்கப்பட்டுள்ளதுடன் பொதுவாக 110,000 வீட்டு நீர் விநியோக வசதிகள் வருடந்தோறும் வழங்கப்படுகின்றன.
இருப்பினும், தற்பொழுது உள்ள குழாய் கட்டமைப்பு மூலம் உள்ளடக்கப்படாத வீதி / பிரதேசத்தை உள்ளடக்கும் வகையில் நீர்க்குழாய் விநியோக வசதி விரிவுபடுத்தப்பட வேண்டும். இந்த நீர் இணைப்பு தொடர்புகளை பெற்றுக் கொள்வதற்கு வாடிக்கையாளர்கள் 20,000 ரூபா வரையிலான ஆரம்பக் கொடுப்பனவை செலுத்த வேண்டியுள்ளதுடன் மற்றும் வீதி புனரமைப்புக்கான கட்டணத்தையும் செலுத்த வேண்டியுள்ளமை போன்ற விடயங்களின் அடிப்படையில் மேலதிகமான கட்டணத்தை செலுத்த வேண்டியிருந்த போதிலும் அந்த பிரதேச நுகர்வோருக்கு வீட்டு குடிநீர் இணைப்பு தொடர்புகளை வழங்குவதற்கு முடியாமல் உள்ளது.
 இதில் உள்ள இடையூறுகளை


நீக்குவதற்காக தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு 2020ஆம் ஆண்டில் முதல் காலண்டு 2 இற்குள் புதிதாக 150,000 வீடுகளுக்கான நீர் விநியோக இணைப்புத் தொடர்புகளை வழங்கும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக நகர , நீர்வழங்கல் மற்றும் வீடமைப்பு அமைச்சர் என்ற ரீதியில் கௌரவ பிரதமர் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அ.த.தி.


நீர் இணைப்பு கட்டணம் குறைகிறது நீர் இணைப்பு கட்டணம் குறைகிறது Reviewed by irumbuthirai on March 05, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.