வெளியாகின புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள்: பார்வையிடும் முறைகள் இதோ!


2021 ம் வருடத்திற்குரிய தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை கடந்த 22-01-2022 இல் நடைபெற்றது. இந்தப் பரீட்சைக்கு மொத்தமாக 340,508 மாணவர்கள் தோற்றுயிருந்தனர். அதில் தமிழ் மொழி மூலம் 85,446 மாணவர்களும் சிங்கள மொழி மூலம் 255,062 மாணவர்களும் அடங்குவர். 
 
வழமையாக ஞாயிற்றுக் கிழமை நடைபெறும் இந்தப் பரீட்சை இம்முறை சனிக்கிழமை நடைபெற்றது. மேலும் 2,943 பரீட்சை நிலையங்களில் இந்த பரீட்சை இடம்பெற்றது. கொரோனா தொற்றுக்குள்ளான மாணவர்களுக்காக விசேட பரீட்சை நிலையங்கள் 108 அமைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. 
 
பரீட்சை பெறுபேறுகளை பின்வரும் முறைகளில் பார்வையிடலாம். 

(01) பரீட்சைத் திணைக்களத்தின் இணையதளத்தின் மூலம் பார்வையிட... 
பரீட்சை திணைக்களத்தின் இணையத்தளத்தின் மூலமாக பார்வையிட வேண்டுமென்றால் கீழுள்ள லிங்கை கிளிக் செய்து பரீட்சை சுட்டெண்ணை வழங்கி பார்வையிடுக.
 
(02) கையடக்க தொலைபேசியில் SMS முறையில் பார்வையிட... 
கையடக்க தொலைபேசியில் SMS முறையில் பார்வையிட வேண்டுமென்றால் உங்கள் தொலைபேசி வலையமைப்புக்கேற்ப கீழுள்ள பொருத்தமான முறையில் உரிய இலக்கத்திற்கு SMS செய்க. 

Dialog 
EXAMS and send to 7777 
 
Mobitel 
EXAMS and send to 8884 
 
Airtel 
EXAMS and send to 7545 
 
Hutch 
EXAMS and send to 8888
வெளியாகின புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள்: பார்வையிடும் முறைகள் இதோ! வெளியாகின புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள்: பார்வையிடும் முறைகள் இதோ! Reviewed by Irumbu Thirai News on March 13, 2022 Rating: 5

No comments:

Powered by Blogger.