புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை மீளாய்வு செய்வதற்கான இறுதி திகதி


கடந்த ஜனவரி 22ஆம் திகதி நடைபெற்ற 2021ஆம் வருடத்திற்குரிய புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் நேற்றைய தினம் வெளியிடப்பட்டன. 
 
இந்தப் பரீட்சை தொடர்பான விபரங்கள், மாதாந்த உதவிப்பணம் பெறுவோர் எண்ணிக்கை மற்றும் பெறுபேறுகளை மீளாய்வு செய்வதற்கான இறுதி தினம் போன்ற பல்வேறு விடயங்களை உள்ளடக்கி பரீட்சைத் திணைக்களத்தினால் ஊடக அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. 
 
இம்முறை உதவிப்பணம் பெறுவோர் எண்ணிக்கை 
20,000 என்பதுடன் அதில் 250 விஷேட தேவையுடைய மாணவர்களுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது. 
 
சகல அதிபர்களும் தமது பாடசாலைக்குரிய Username, Password என்பவற்றை பயன்படுத்தி பெறுபேறுகளை தரவிறக்கம் செய்து அச்சுப்பிரதியும் செய்துகொள்ளலாம். பெறுபேறுகள் தபால் மூலமும் பாடசாலைக்கு அனுப்பி வைக்கப்படும். 
 
புள்ளிகள் தொடர்பாக மீளாய்வு செய்ய வேண்டிய தேவையுடையோர் அது தொடர்பான மேன்முறையீட்டை 31-03-2022 ம் திகதிவரை சமர்ப்பிக்கலாம். 
 
குறித்த ஊடக அறிவித்தலை கீழே காணலாம்.

 தொடர்புடைய செய்திகள்: 
 
 
புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை மீளாய்வு செய்வதற்கான இறுதி திகதி புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை மீளாய்வு செய்வதற்கான இறுதி திகதி Reviewed by Irumbu Thirai News on March 14, 2022 Rating: 5

No comments:

Powered by Blogger.