நாளை(1) முதல் இடம்பெறும் எரிபொருள் விநியோகம் தொடர்பான முக்கிய 12 அம்சங்கள்...



ஆகஸ்ட் 1ம் திகதி தொடக்கம் இடம்பெறும் எரிபொருள் விநியோகம் தொடர்பில் எரி சக்தி அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. 

அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட விடையங்களின் முக்கிய 12 அம்சங்களை இங்கு தருகிறோம். 
(1) ஆகஸ்ட் 1 முதல் தேசிய எரிபொருள் அனுமதி அட்டை (National Fuel Pass) நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்படும். இதுவரை நடைமுறையில் காணப்பட்ட இலக்கத் தகடு கடைசி இலக்க முறை, டோக்கன்கள் மற்றும் ஏனைய முறைகள் இனிமேல் செல்லுபடியாகாது. மேலும் QR குறியீடு மற்றும் எரிபொருள் கோட்டா முறை என்பனவே நடைமுறைக்கு வரும். 

(2) QR முறையைப் பின்பற்றும் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகத்தின் போது முன்னுரிமை வழங்கப்படும். எரிபொருள் நிலையத்திற்கு வழங்கப்பட்ட இருப்பிலிருந்து QR பயனர்கள் பெற்ற அளவானது இந்த முறைமை (System) மூலம் கண்காணிக்கப்படும். 

(3) வாகன அடிச்சட்ட இலக்கத்தை (Chassis Number) கொண்டு பதிவு செய்ய முடியாதவர்கள் இன்று முதல் வாகன வருமான அனுமதி பத்திர இலக்கத்தை கொண்டு பதிவு செய்யலாம். 

(4) சகல முற்சக்கர வண்டிகளும் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களில் பதிவு செய்யப்பட வேண்டும் என்பதோடு அவர்களுக்கு அருகில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் பெயரிடப்பட்டு வழங்கப்பட வேண்டும். 

(5) ஜெனரேட்டர் பாவனையாளர்கள் தோட்ட உபகரணங்கள் இயந்திரங்கள் மற்றும் எரிபொருள் தேவைப்படும் ஏனைய உபகரணங்கள் என்பவை சம்பந்தப்பட்ட பிரதேச செயலாளர் காரியாலயத்தில் பதிவு செய்யப்பட்டு அதற்கு தேவையான எரிபொருள் வகை மற்றும் வாராந்த அளவு என்பன குறிக்கப்பட்ட அவர்களுக்கு உரித்தான எரிபொருள் நிரப்பு நிலையமும் வழங்கப்பட வேண்டும். 

(6) பல வாகனங்களைக் கொண்டு இயங்கும் வணிகங்கள் தமது சகல வாகனங்களையும் அவர்களது வணிக பதிவு இலக்கத்தின் கீழேயே பதிவு செய்யலாம். 

(7) பொதுப் போக்குவரத்திற்கு முன்னுரிமை வழங்கப்படும். பேருந்துகளுக்கான எரிபொருள் கோட்டா இலங்கை போக்குவரத்து சபை டிப்போக்கனில் வழங்கப்படும். வீதி அனுமதி பத்திரம் மற்றும் சேவையில் ஈடுபடும் கிலோமீட்டர் அளவு என்பவற்றை பொறுத்து கோட்டா தீர்மானிக்கப்படும். 

(8) டீசல் தேவைப்படுகின்ற பாடசாலை சேவை வாகனங்கள், காரியாலய போக்குவரத்து வாகனங்கள், கைத்தொழிற்சாலை, சுற்றுலாத்துறை, அம்பியுலன்சுகள் மற்றும் ஏனைய அத்தியாவசிய சேவைகளை வழங்கும் வாகனங்கள் என்பவற்றுக்கான எரிபொருளும் இலங்கை போக்குவரத்து சபை இப்போக்களில் வழங்கப்படும். 
(9) அம்பியூலன்ஸ் வண்டிகளுக்கு சகல எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் அவர்கள் கேட்கின்ற அளவு எரிபொருள் வழங்கப்படும். 

(10) ஒவ்வொரு போலீஸ் பிரிவிலும் உள்ள தெரிவு செய்யப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து போலீஸ் திணைக்களத்திற்கான, ஒதுக்கப்பட்ட கோட்டா அளவு எரிபொருள் விநியோகிக்கப்படும். 

(11) சட்டவிரோதமாக எரிபொருளை சேமித்தல், விற்பனை செய்தல் என்பவை தொடர்பான போட்டோக்கள் அல்லது வீடியோ ஆதாரங்கள் என்பவற்றை பொதுமக்கள் 0742123123 என்ற இலக்கத்திற்கு வட்ஸ்அப் (WhatsApp) மூலம் தெரிவிக்கலாம். அவ்வாறு மீண்டும் மீண்டும் குற்றத்தில் ஈடுபடுபவர்களின் QR முறை தற்காலிகமாக நிறுத்தப்படுவதோடு அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும். 

(12) திங்கட்கிழமை பொதுமக்கள் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் அதிகமாக கூடி நெரிசலை ஏற்படுத்த வேண்டாம். ஏனெனில் ஒதுக்கப்பட்ட எரிபொருள் கோட்டாவை வாரம் முழுவதும் நாடளாவிய ரீதியில் உள்ள எரிபொருள் நிலையங்களில் பெற்றுக் கொள்ளலாம்.


நீங்கள் இன்னும் Fuel Pass ற்காக பதிவு செய்யவில்லையா? அப்படியாயின் கீழ் உள்ள லிங்கை கிளிக் செய்க.


நாளை(1) முதல் இடம்பெறும் எரிபொருள் விநியோகம் தொடர்பான முக்கிய 12 அம்சங்கள்... நாளை(1) முதல் இடம்பெறும் எரிபொருள் விநியோகம் தொடர்பான முக்கிய 12 அம்சங்கள்... Reviewed by Irumbu Thirai News on July 31, 2022 Rating: 5

No comments:

Powered by Blogger.