Middle East Updates- 6 (முழுமையாக புதுப்பிக்கப்பட்ட தகவல்கள்)



ஈ*ரா*ன் மீது அமெரிக்கா தொடுத்த திடீர் தாக்குதல்களுக்கு பதிலடியாக ஈரான் மேற்கொண்ட ஆபரேஷன் தண்டபோல்ட் (Operation Thunderbolt): ஈரானின் தாக்குதல்களின் 3ம் கட்டம் மத்திய கிழக்கில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. * 

தாக்குதல்கள் தொடங்குவதற்கு முன்பு, அமெரிக்க கருவூலத்துறை செயலாளர் ஈரானை பொருளாதார ரீதியாக முடக்குவதற்கான உச்சகட்ட பொருளாதாரத் தடைகளை விதிப்பதாக அறிவித்தார். ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானின் பொருளாதாரத்தை முடக்குவதற்காக சீனாவோடு பல கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாகவும், ஈரான் அணு ஆயுதம் வைத்திருக்கக் கூடாது என்பதில் சீனாவும் உறுதியாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். ஈரான் ஒரு விஷப்பாம்பு என்றும் அதன் தலையை முழுமையாகத் துண்டிக்காவிட்டால் அதன் விஷம் தங்களை அழித்துவிடும் என்றும் அவர் தெரிவித்தார் 

சீனாவின் வீட்டோ (Veto) 
ஜி20 நாடுகளுக்கு ஈரானுக்கு எதிராக உச்ச பொருளாதாரத் தடைகளை விதிக்குமாறு USA கோரிக்கை விடுத்திருந்தது. ஆனால், ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் இந்த முன்மொழிவை சீனா தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி முழுமையாகத் தடுத்து நிறுத்தியது. மேலும், ஹெர்மூஸ் ஜலசந்தி பகுதியில் ஈரான் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு சீனா தனது முழு ஆதரவை வெளிப்படுத்தியதுடன், அங்கு ஏற்பட்ட இழப்புகளுக்கு அமெரிக்காவின் ஆக்கிரமிப்பே காரணம் என்றும் குறிப்பிட்டது. 

அமெரிக்காவின் இலக்குகள்
நேற்று முன்தினம் அமெரிக்கா ஈரானுக்கு எதிரான தாக்குதல்களைத் தொடங்கியது. ஹெர்மூஸ் ஜலசந்தி பகுதியில் உள்ள மிக முக்கியமான கெஷம் தீவுகள் (Qeshm Islands) லராக் தீவுகள் (Larak Islands)** ஆகியவற்றில் உள்ள தொலைத்தொடர்பு வலையமைப்புகள் மற்றும் ராடார் கருவிகளை இலக்கு வைத்து அமெரிக்கா கடுமையான தாக்குதல்களை நடத்தியது. இதைத் தொடர்ந்து ஈரானின் சபாஹர் துறைமுகம் (Chabahar Port) பந்தர அப்பாஸ் துறைமுகம் (Bandar Abbas Port) மற்றும் ஈரானின் வடமேற்கு, மேற்குப் பிரதேசங்களை இலக்கு வைத்து அரை மணி நேரத்திற்குள் 25-க்கும் மேற்பட்ட வான்வழித் தாக்குதல்களை அமெரிக்கா நடத்தியது.

இந்தத் தாக்குதல்களைத் தொடர்ந்து, மத்திய கிழக்கு அரபு நாடுகளில் உள்ள அமெரிக்க தூதரகங்கள் அமெரிக்கர்களைப் பாதுகாப்பாக இருக்குமாறும், முடிந்தால் மத்திய கிழக்கு பிராந்தியத்தை விட்டு வெளியேறுமாறும் அவசர எச்சரிக்கைகளை விடுத்தன. பஹ்ரைன், குவைத், கத்தார் மற்றும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் பகுதிகளிலும் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு, மக்கள் பதுங்கு குழிகளுக்குச் செல்லுமாறு கோரப்பட்டனர். 

அமெரிக்கா மீண்டும் ஈரானின் தென்மேற்குப் பிரதேசம் மற்றும் கடற்கரை வான் பாதுகாப்பு அமைப்புகள், ராடார் கருவிகள், கடற்படைத் தளங்கள் ஆகியவற்றை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியது. இத்தாக்குதலுக்கு அமெரிக்கா பஹ்ரைன் மற்றும் குவைத்தின் நிலப்பரப்பைப் பயன்படுத்தி நேரடியாக ஹிமாஸ் (HIMARS) ஏவுகணை தாக்குதல்களை நடத்தியது. 

ஹெர்மூஸ் ஜலசந்தி பகுதியில் கன்னிவெடிகளை முழுமையாக நீக்கிவிட்டதாகவும், ஈரானின் ராணுவ மற்றும் ராடார் தளங்களை அழித்து தரைமட்டமாக்கியுள்ளதாகவும், ஈரான் மீண்டும் பதிலடி கொடுத்தால் அதை அழிப்பதற்கான அடுத்த கட்ட தாக்குதல்கள் காத்துக் கொண்டிருக்கின்றன என்றும் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்தார்.

அமெரிக்காவின் தாக்குதல்களால் தங்களின் எந்தவொரு ராடார் அல்லது ஏவுகணைத் தளங்களும் அழிக்கப்படவில்லை என்றும், எந்தவித உயிரிழப்புகளும் ஏற்படவில்லை என்றும் ஈரானிய ஊடகங்கள் அறிக்கைகளை வெளியிட்டன. 

இதனால் அதிர்ச்சியடைந்த அமெரிக்கா, அடுத்த கட்டமாக ராணுவத் தளங்களை விடுத்து, ஈரானுக்கு அழுத்தங்களை தரும் நோக்கில் குடியிருப்புப் பிரதேசங்களையும் விமான நிலையங்களையும் இலக்கு வைத்து தாக்குதல்களைத் தொடங்கியது. குறிப்பாக, சிரிக் தீவில் (Sirri Island) நடைபெற்றுக் கொண்டிருந்த திருமண வைபவத்தை இலக்கு வைத்து அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் 5-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்; 70-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். 

பதிலடி:
இந்தத் தாக்குதல்களுக்குப் பதிலடியாக ஈரான் புதிய நவீன வான் பாதுகாப்பு அமைப்புகளைக் களமிறக்கி, அமெரிக்காவின் இரண்டு **எம் க்யூ-9 (MQ-9) ட்ரோன்களைச்** சுட்டு வீழ்த்தியது. 

மேலும் ஜோர்டானை இலக்கு வைத்து ஈரான் 25-க்கும் மேற்பட்ட ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது. இதில் கிங் ஹுசைன் விமான தளம், அமெரிக்க ராணுவக் கட்டளைத் தளம், முவாபிக் சால்டி கட்டளைத் தளம் ஆகியவற்றில் பயங்கர வெடிப்புகள் பதிவாகின. 

கடந்த போரில் இலக்கு வைக்கப்படாத, ஜோர்டானின் அக்கபா கடற்கரையில் அமைந்துள்ள அமெரிக்காவின் மிக முக்கியமான கடற்படைத் தளமான **கேம் திப்தின்** தளம் மீது ஈரான் வீரியமான தாக்குதலை நடத்தியது. இத்தாக்குதலில் அங்கிருந்த அமெரிக்க அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கொல்லப்பட்டனர் எனவும் அவர்களை ஏற்றுச் செல்வதற்கு ஹெலிகாப்டர்கள் வருகை தந்ததாகவும் தகவல்கள் தெரிவித்தன ஆனால் அதை உறுதிப்படுத்த முடியவில்லை 

கிங் ஹுசைன் விமான தளத்தில் இருந்த அமெரிக்காவின் எம் க்யூ-9 மற்றும் ஆர் கே-4 (RK-4) ரக ட்ரோன் கிடங்குகள் ஏவுகணைத் தாக்குதல்கள் மூலம் துல்லியமாக அழிக்கப்பட்டன; இதில் அமெரிக்க தொழில்நுட்ப வல்லுநர்கள் பலர் காயமடைந்ததுடன், குறைந்தது 3 பேர் கொல்லப்பட்டனர். 

பஹ்ரைனில் உள்ள அமெரிக்கத் தளங்கள் மற்றும் ராணுவத்தினர் தங்கியிருந்த பகுதிகள் மீது ஈரானிய ஏவுகணைகளும் ட்ரோன்களும் தாக்கின. இதில் அங்கிருந்த ராடார் கருவிகள் அழிக்கப்பட்டதுடன், **ஷேக் ஈசா (Shaikh Isa) விமானத் தளத்தில்** மூன்று வெடிப்புகள் பதிவாகின. 

ஐக்கிய அரபு அமீரகத்தின் **அல்தப்ரா (Al Dhafra)** மற்றும் **அல்மின்ஹா (Al Minhad)** தளங்கள் மீது ஈரான் எச்சரிக்கைத் தாக்குதல்களை நடத்தியது. 

மேலும், குவைத்தில் 5-க்கும் மேற்பட்ட இடங்களில் வெடிப்புகள் பதிவாகின. குவைத்தின் தலைநகரில் அமெரிக்க அதிகாரிகள் தங்கியிருந்த குடியிருப்புப் பகுதி மீது ஈரான் நடத்திய துல்லியமான ட்ரோன் தாக்குதலில் பெரும் தீப்பரவல் ஏற்பட்டதுடன், அமெரிக்கக் கட்டளைத் தளத்தில் ஏற்பட்ட வெடிப்பில் அதிகாரிகள் பலர் காயமடைந்தனர். 

குர்திஸ்தான் பகுதியில் இருந்த அமெரிக்காவின் முக்கிய ராடார் தளங்களை ஈரான் தரைமட்டமாக்கியது. இதனால் உளவுத் தகவல்களைப் பெறுவதற்காக அமெரிக்கா அனுப்பிய பிரம்மாண்டமான **ஸ்பை பலூனை (Spy Balloon)** ஈரானிய ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தின. 

பதற்றமான இச்சூழ்நிலையிலும் ஹெர்மூஸ் ஜலசந்தி வழியாக சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திற்குச் சொந்தமான இரண்டு எண்ணெய் கப்பல்களை அமெரிக்கா மீட்டு நகர்த்த முயன்றது. அப்போது அங்கு காத்துக் கொண்டிருந்த ஈரானிய கடற்படையினர் கன்னிவெடிகளைப் பயன்படுத்தி அந்த இரண்டு கப்பல்களையும் வெடிக்கச் செய்தனர்; 

ஈரானிய ராணுவ ஆய்வாளரும் பேராசிரியருமான முஹம்மது மராந்தி, இந்த போரை அரபு நாடுகளின் அரசாங்கங்களால் தாங்கிக் கொள்ள முடியாது என்றும், அரபு ஆட்சியாளர்களின் குடும்ப ஆட்சிகள் இனி நிலைத்திருக்காது என்றும் எச்சரித்துள்ளார். * 

இஸ்ரேலின் நகர்வுகளும் நெதன்யாகுவின் தேர்தல் கணக்கும்:
இஸ்ரேல் போர் அமைச்சர் காசா மற்றும் லெபனானில் அடுத்த கட்ட தாக்குதல்களைத் தீவிரப்படுத்தப் போவதாக அறிவித்துள்ளார். இஸ்ரேலில் நடைபெறவுள்ள தேர்தலில் வாக்குகளைப் பெற்று மீண்டும் பதவியைக் கைப்பற்றுவதற்காக, நெதன்யாகு (நெற்றன் யாகு) ஈரானுக்கு எதிரான போரில் நிச்சயமாகக் களமிறங்குவார் என்றும், அது இஸ்ரேலின் அடுத்த கட்ட இழப்புக்கு வழிவகை செய்யும் எனவும் பொறியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மசகு எண்ணெய் விலை:
இத்தகைய பின்னணியில் இன்றைய (3) நிலவரப்படி சர்வதேச சந்தையில் ப்ரண்ட் (Brent) மசகு எண்ணெய் ஒரு பீப்பாயின் விலை 95.25 டொலர்களாக அதிகரித்துள்ளது


சவுதியின் நிதி நெருக்கடி:
ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் போரின் பொருளாதாரப் பாதிப்புகள் சவூதி அரேபியாவின் நிதி நெருக்கடிகளை மேலும் காட்டியுள்ளன.  இதனைத் தொடர்ந்து 8 பில்லியன் டாலர் புதிய கடன்களுக்காக சவூதி அரேபியாவின் தேசிய கடன் முகாமை மையம், சாத்தியமான நிதியுதவிக்காக வங்கிகளுடன் ஆரம்பகட்டப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியுள்ளதாகவும், அதே நேரத்தில் அரம்கோ நிறுவனம் தனியாகக் கூடுதல் நிதியுதவி குறித்து ஆராய்ந்து வருவதாகவும் ப்ளூம்பெர்க் செய்தி வெளியிட்டுள்ளது.  

முடிவாக...
மேலும் இந்த போரானது முந்தைய போர்களைப் போலன்றி, ஏற்றத்தாழ்வுகளுடன் கூடியதாகவும், ஈரான் தனது அனைத்து விதமான புதிய போர்த் தந்திரங்களையும் களமிறக்கும் ஒரு போராகவும் அமையப் போகிறது என்று பேராசிரியர் முஹம்மது மராந்தி மற்றும் ராணுவ ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

தொடரும்....

குறிப்பு: முன்னைய பாகங்களை எமது Irumbuthirai News என்ற facebook பக்கத்தில் பெற்றுக் கொள்ளலாம்.


Previous:
Middle East Updates- 6 (முழுமையாக புதுப்பிக்கப்பட்ட தகவல்கள்) Middle East Updates- 6  (முழுமையாக புதுப்பிக்கப்பட்ட தகவல்கள்) Reviewed by Irumbu Thirai News on September 03, 2026 Rating: 5

No comments:

Powered by Blogger.